For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகப்பருக்களைப் போக்கி சரும நிறத்தை அதிகரிக்கணுமா? அப்ப பாகற்காய் ஃபேஸ் பேக்கை போடுங்க...

பலரும் சாப்பிட மறுக்கும் பாகற்காய் சருமத்தின் பொலிவை மேம்படுத்த உதவும் என்பது தெரியுமா? அதுவும் இது சரும பிரச்சனைகளைப் போக்கி, சரும அழகைக் கூட்ட உதவுகிறது. இது தவிர சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் பாகற்காய் உதவுகிறது.

|

காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. காய்கறிகள் சாப்பிட மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். இதைக் கொண்டு சரும பிரச்சனைகளைப் போக்க சருமத்திற்கு ஃபேஸ் பேக்குகளையும் போடலாம். அதுவும் பலரும் சாப்பிட மறுக்கும் பாகற்காய் சருமத்தின் பொலிவை மேம்படுத்த உதவும் என்பது தெரியுமா? அதுவும் இது சரும பிரச்சனைகளைப் போக்கி, சரும அழகைக் கூட்ட உதவுகிறது. இது தவிர சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் பாகற்காய் உதவுகிறது.

Bitter Gourd Face Packs To Enhance Your Complexion

எனவே தமிழ் போல்ட்ஸ்கை பாகற்காயைக் கொண்டு சருமத்திற்கு போடக்கூடிய சில ஃபேஸ் பேக்குகளை உங்களுக்காக கொடுத்துள்ளது. அதில் உங்களுக்கு எளிதாக இருக்கும் ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்திற்கு பயன்படுத்தினால், சரும நிறமும் அதிகரிக்கும், சரும பிரச்சனைகளும் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாகற்காய் மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

பாகற்காய் மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். இத்தகைய வெள்ளரிக்காயுடன், பாகற்காய் சேர்த்து அடிக்கடி ஃபேஸ் பேக் போட்டு வந்தால், அது சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றவும் உதவி புரிந்து, முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளை நீக்கும். இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு, பாகற்காய் மற்றும் வெள்ளரிக்காயை நீரில் கழுவி சிறு துண்டுகளாக்கி, இரண்டையும் மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்த, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போட்டு வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை முகத்தில் காணலாம்.

பாகற்காய் மற்றும் ஆரஞ்சு தோல் ஃபேஸ் பேக்

பாகற்காய் மற்றும் ஆரஞ்சு தோல் ஃபேஸ் பேக்

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளதா? அப்படியானால் இந்த ஸ்கரப் மிகவும் நல்லது. ஆரஞ்சு தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது சருமத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றி சருமத்தை சுத்தம் செய்யக்கூடியது. மேலும் இது மூக்கில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளை நீக்க உதவுகிறது. இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு பாகற்காயை துண்டுகளாக்கி, அத்துடன் உலர்ந்த ஆரஞ்சு பழத்தின் தோலை சேர்த்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் முல்தானி மெட்டி அல்லது கடலை மாவை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறித நேரம் ஊற வைத்து, பின் முகத்தை மென்மையாக தேய்த்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

பாகற்காய் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

பாகற்காய் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

பாகற்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் அதிகம் உள்ளன. இது இரத்தத்தை சுத்தம் செய்யும். உங்கள் முகத்தில் கருமையான தழும்புகள் அல்லது முகப்பருக்கள் அதிகம் இருந்தால், இந்த ஃபேஸ் பேக்கை தினமும் பயன்படுத்துங்கள். அதற்கு மிக்சர் ஜாரில் 1 பாகற்காய், சிறிது வேப்பிலை மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து, பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். சிறந்த பலன் கிடைக்க, 2-3 நாட்களுக்கு ஒருமுறை இதைப் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bitter Gourd Face Packs To Enhance Your Complexion In Tamil

Here are some bitter gourd face packs to enhance your complexion. Read on...
Story first published: Thursday, February 17, 2022, 19:55 [IST]
Desktop Bottom Promotion