For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பளிச்சென்ற பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமா? அப்ப இந்த சாக்லேட் ஃபேஸ் பேக்கை போடுங்க..

நீங்கள் சாக்லேட் பிரியர் என்றால், உங்கள் சரும அழகை மேம்படுத்த விரும்புபவராயின், கீழே ஒருசில எளிய சாக்லேட் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து பயன்படுத்தி, அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

|

அனைவருக்குமே சாக்லேட் சாப்பிட பிடிக்கும். அதுவும் டார்க் சாக்லேட் உடல் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் சாக்லேட்டை சாப்பிட மட்டுமின்றி, சரும அழகை அதிகரிக்கவும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா? ஆம், சாக்லேட்டுகளைக் கொண்டு ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் என்று சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், அழகு மேம்படும்.

Best Chocolate Face Packs and Mask To Get The Glow In Tamil

சாக்லேட்டுகளானது கொலஜென் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தின் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்ட உதவும். மேலும் சாக்லேட் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 ஆம் தேதி உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. நீங்கள் சாக்லேட் பிரியர் என்றால், உங்கள் சரும அழகை மேம்படுத்த விரும்புபவராயின், கீழே ஒருசில எளிய சாக்லேட் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து பயன்படுத்தி, அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாக்லேட் பவுடர் ஃபேஷியல்

சாக்லேட் பவுடர் ஃபேஷியல்

இந்த சாக்லேட் பவுடர் ஃபேஷியல் சருமத்தின் ஈரப்பசையை மேம்படுத்துவதோடு, முதுமைக்கான அறிகுறிகள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது. அதோடு இது சருமத்தின் பொலிவை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த சாக்லேட் ஃபேஷியலை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

செய்முறை:

* ஒரு பௌலில் 2 ஸ்பூன் சாக்லேட் பவுடரை எடுத்து, அதில் 3 ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின் அதை முகத்தில் தடவி 25 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

சாக்லேட் ஃபேஸ் ஸ்கரப்

சாக்லேட் ஃபேஸ் ஸ்கரப்

இந்த சாக்லேட் ஃபேஸ் ஸ்கரப் சருமத் துளைகளை ஆழமாக சுத்தம் செய்யும். மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். இதனால் இந்த ஃபேஸ் ஸ்கரப்பை அடிக்கடி பயன்படுத்துவதால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

செய்முறை:

* ஒரு பௌலில் 2 ஸ்பூன் கொக்கோ பவுடர், 1 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை மற்றும் சிறிது பால் சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின் முகத்தை ஈரத்துணியால் முகத்தை துடைத்துவிட வேண்டும்.

* பின்னர் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அழுத்தி தேய்த்துவிடாமல், மென்மையாக தேய்க்க வேண்டும்.

* 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கடலை மாவு, சாக்லேட் ஃபேஸ் பேக்

கடலை மாவு, சாக்லேட் ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்கிறது. இது கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த ஃபேஸ் பேக்கை போட்ட சில நிமிடங்களிலேயே முகம் பிரகாசமாகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.

செய்முறை:

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் சாக்லேட் பவுடர், 1/2 ஸ்பூன் காபி பவுடர் மற்றும் 1 ஸ்பூன் பால் ஆகியவற்றை சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் முகத்தை நன்கு கழுவி விட்டு, முகத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு தயாரித்து வைத்துள்ள ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

பாதாம் சாக்லேட் ஃபேஸ் பேக்

பாதாம் சாக்லேட் ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் சருமத்தின் பொலிவையும், அழகையும் மேம்படுத்த சிறந்தது. முக்கியமாக இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை சட்டென்று அதிகரிக்கும். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை போட்டால், நல்ல பலனைக் காணலாம்.

செய்முறை:

* ஒரு பௌலில் கொக்கோ பவுடரை சிறிது எடுத்து, அதில் பாதாம் விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் முகத்தை நன்கு கழுவி துணியால் துடைத்து, தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Chocolate Face Packs and Mask To Get The Glow In Tamil

World Chocolate Day 2022: Here are some of the best chocolate face packs and mask to get the glow in tamil. Read on to know more...
Story first published: Tuesday, July 5, 2022, 19:24 [IST]
Desktop Bottom Promotion