For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க சருமத்தை ஈரப்பதமாக வைத்து எப்போதும் ஜொலிக்க வைக்க... 'இந்த' எண்ணெய் யூஸ் பண்ணா போதுமாம்!

ஆக்ஸிஜனேற்றத்தைத் தவிர, வைட்டமின் ஈ சருமத்தை அமைதிப்படுத்தவும், சருமத்தை ஆற்றவும், எரிச்சலைக் குறைக்கவும் உதவும் அழற்சி எதிர்ப்பு முகவராகவும் செயல்படுகிறது.

|

சரும அழகு என்பது நாகரீக கலாச்சாரமாக மாறி வருகிறது. உலகில் உள்ள அனைத்து மக்களும் தான் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். பெரும்பாலான மக்கள் பொலிவான அழகான சருமத்துடன் இருக்க ஆசைப்படுவார்கள். ஆனால், எல்லாருக்கும் ஜொலிக்கும் பிரகாசமான சருமம் கிடைப்பது என்பது சாத்தியமற்றது. ஆதலால், பொலிவான சருமம் கிடைக்க மக்கள் பல்வேறு தாயாரிப்புகளை நாடுகிறார்கள். எப்போதும், செயற்கை தயாரிப்புகள் நமக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இயற்கை தாயாரிப்புகளே நம் சருமத்திற்கும் உடலுக்கும் நல்லது. அந்த வகையில், சோயாபீன்ஸ் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு சிறந்தது.

Benefits and How to Use Soybean Oil For Skin in tamil

இந்த எண்ணெய் பயிரிடப்பட்ட சோயாபீன்ஸ்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இது பிரகாசமான வைக்கோல் மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளது. மேலும் மிகவும் வலுவான வாசனையை கொண்டிருக்கும் இந்த எண்ணெய். மக்கள் இந்த எண்ணெயை உணவிலும் பயன்படுத்துகிறார்கள். சோயாபீன் எண்ணெயில் ஆர்கான் எண்ணெய் அல்லது ரோஸ் ஆயில் போன்றவற்றின் நன்மைகள் இல்லை என்றாலும், சில தோல் வகைகளுக்கு, குறிப்பாக வறண்ட சருமத்திற்கு இது அதிக நன்மை பயக்கும். இக்கட்டுரையில் சோயாபீன்ஸ் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு வழங்கும் நன்மைகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈரப்பதம் தடையை பலப்படுத்துகிறது

ஈரப்பதம் தடையை பலப்படுத்துகிறது

சருமத்தை மேலும் மிருதுவாகவும், அழகாகவும் மாற்ற சோயாபீன்ஸ் எண்ணெய் உதவுகிறது. எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு ஈரப்பதம் விரைவாக உறிஞ்சப்படும். இந்த எண்ணெயை பயன்படுத்துவதால், ஈரப்பதம் உறிஞ்சப்படுவதை தடுத்து, அந்த தடையை வலுப்படுத்தி, சருமத்தை வலிமையாக்கி, சேதமடையாமல் தடுக்கிறது. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இதில் இருப்பதால், நீர் இழப்பைத் தடுக்கிறது. இதனால் உங்கள் சருமம் பிரகாசமாக மின்னும்.

ஈரப்பதம் தக்கவைப்பை அதிகரிக்கிறது

ஈரப்பதம் தக்கவைப்பை அதிகரிக்கிறது

சோயாபீன்ஸ் எண்ணெயை தோலில் தடவும்போது, ​​அதன் மேல் அடுக்குகளை ஊடுருவி, நீர் இழப்பைக் குறைத்து, ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த எண்ணெயில் உள்ள ஒரு அத்தியாவசிய கொழுப்பு அமிலமாக, லினோலிக் அமிலம் செராமைடுகளுக்கான கட்டுமானத் தொகுதியாகவும் செயல்படுகிறது. இது ஈரப்பதம் மற்றும் எரிச்சலைத் தடுத்து சருமத்தை பொலிவாக்க உதவுகிறது.

தோல் அழற்சியைத் தடுக்கிறது

தோல் அழற்சியைத் தடுக்கிறது

சோயாபீன்ஸ் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், யுவிபி ஒளியின் தோலில் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கலாம். கூடுதலாக, இந்த தயாரிப்பின் உயர் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் டிஎன்ஏ சேதம் மற்றும் சூரிய சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை கட்டுப்படுத்துவதன் மூலம் வீக்கத்தை குறைக்கிறது.

ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக பாதுகாக்கிறது

ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக பாதுகாக்கிறது

வைட்டமின் ஈ, அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், லெசித்தின் மற்றும் ஜெனிஸ்டீன் ஆகியவை சோயாபீன்ஸ் எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும். அவை தோல் செல்களை மாசு மற்றும் நச்சுகளிலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் அவை தங்களை சரிசெய்ய உதவுகின்றன.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன

அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன

ஆக்ஸிஜனேற்றத்தைத் தவிர, வைட்டமின் ஈ சருமத்தை அமைதிப்படுத்தவும், சருமத்தை ஆற்றவும், எரிச்சலைக் குறைக்கவும் உதவும் அழற்சி எதிர்ப்பு முகவராகவும் செயல்படுகிறது. சோயாபீன்ஸ் எண்ணெய் வறண்ட சருமம் மற்றும் கலவையான சருமத்திற்கு பயனளிக்கும். ஒப்பனை சிகிச்சைக்குப் பிறகு குணப்படுத்தும் செயல்பாட்டில் கூட இது பயனுள்ளதாக இருக்கும்.

இயற்கை கொழுப்பு அமிலங்கள் உள்ளன

இயற்கை கொழுப்பு அமிலங்கள் உள்ளன

சோயாபீன்ஸ் எண்ணெய் தோலில் காணப்படும் இயற்கையான லிப்பிட்களைப் பிரதிபலிப்பதால், சருமத்தின் ஈரப்பதத் தடையைப் பாதுகாக்கவும் சரிசெய்யவும் இது சிறந்தது. மேலும், இதிலுள்ள வைட்டமின் டி சருமத்திற்கு ஆக்ஸிஜனேற்ற மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வழங்குகிறது.

சோயாபீன்ஸ் எண்ணெயை யார் தவிர்க்க வேண்டும்?

சோயாபீன்ஸ் எண்ணெயை யார் தவிர்க்க வேண்டும்?

சோயாபீன் எண்ணெயில் காமெடோஜெனிக் அளவில் அதிகமாக இருப்பதால், எண்ணெய் சருமத்திற்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை. இந்த எண்ணெய் அதன் மறைக்கும் (தடுக்கும்) பண்புகளால் துளைகளை அடைக்கிறது என்பது அறியப்படுகிறது. அதிக செறிவுகளில் உள்ள வைட்டமின் ஈ, சோயாபீன்ஸ் எண்ணெயில் நிறைந்துள்ளது. மேலும், சோயாபீன்ஸ் எண்ணெய் சாத்தியமான சரும துளை-அடைப்பு காரணிகளைத் தடுக்கவும் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits and How to Use Soybean Oil For Skin in tamil

Here we are talking about the Soybean Oil For Skin: How Good Is It? Is It Suitable For Oily Skin?
Story first published: Friday, February 25, 2022, 18:26 [IST]
Desktop Bottom Promotion