Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
அழகு குறிப்புகள் என்று நினைத்து நீங்கள் செய்யும் சில தவறான விஷயங்கள்
இன்றைய காலத்தில் இணைய தலத்தில் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் நம் வாழ்க்கைக்கு சரியானவைகளா என்பது கேள்விக்குறி தான். இணையத்தில் பல அழகுக்குறிப்புகளை பார்த்து இருப்பிர்கள். அ
இன்றைய காலத்தில் இணையதளத்தில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் நம் வாழ்க்கைக்கு சரியானவைகளா என்பது கேள்விக்குறிதான். இணையத்தில் பல அழகுக்குறிப்புகளை பார்த்து இருப்பீர்கள். அவை எல்லாவற்றையும் நீங்கள் முயற்சி செய்தால் அது தவறு. உங்கள் சருமத்திற்கு எது சரியானதோ அதை தேர்வு செய்து முயற்சி செய்வுங்கள். அதே போல் அழகுக்குறிப்புகள் என்று நினைத்து நீங்கள் சில தவறான விஷயங்களையும் பின்பற்றி வருகிறீர்கள்.

நீங்கள் இப்போது பார்க்க போகும் விஷயங்களை செய்தால் அவற்றை நிறுத்துவது நல்லது. நாம் பார்க்கும் போது சருமம், தலைமுடி, மற்றும் மேக்கப் போன்ற அழகு குறிப்புகள் நல்லதாக தோன்றும். ஆனால் அவற்றுக்கும் எல்லை உண்டு. எந்த விஷயங்களை செய்ய வேண்டும் எவற்றை செய்யக் கூடாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இயற்கைக்கு மாறான விஷயங்களை செய்வதற்கு முன்பு சற்று யோசியுங்கள்.

மரு அகற்றுதல்
நம்மில் சிலருக்கு முகம், முதுகு மற்றும் உடலில் சில இடங்களில் மரு இருக்கும். மரு உங்களுக்கு சங்கடமாக அல்லது இடையூறாக இருப்பதால் அதனை அகற்ற வேண்டும் என்று வீட்டில் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இது மிகவும் தவறான ஒன்று. உங்களுக்கு மரு அகற்ற வேண்டும் என்றால் நீங்கள் அதற்கான சிறப்பு மருத்துவரை தான் அணுக வேண்டுமே தவிர நீங்கள் வீட்டில் எந்த வித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது.

வாசனைத் திரவியங்கள்
வாசனைத் திரவியங்கள் என்பது நாள் முழுவதும் உங்கள் வியர்வையை உறிஞ்சி வாசனையோடு வைக்க வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். அதனை நீங்கள் மேக்கப் போட்டு முடித்தவுடன் ஃபேஸ் ப்ரைமராகப் பயன்படுத்துவது மிகவும் தவறான ஒன்று. வாசனைத் திரவியங்களை ஃபேஸ் ப்ரைமராக பயன்படுத்துவது இப்போது மக்களிடையே புதிதாக பரவி வரும் ஒன்றாக உள்ளது. வாசனைத் திரவியங்களை ஃபேஸ் ப்ரைமராக உபயோகிக்கும் போது உங்கள் முகத்தில் துளைகளுக்கு வழிவகுக்கும். இதனால் பிளாக்ஹெட்ஸ் மற்றும் முகப்பரு ஏற்படக்கூடும். எனவே இதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

கருப்பு நிற புள்ளிகள்
கருப்பு நிற புள்ளிகள் என்பது முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸ் ஆகும். இந்த பிளாக்ஹெட்ஸ்யை அகற்ற இப்போது பசையை பயன்படுத்தி வருகிறார்கள். இது உங்கள் சருமம் ஏற்றுக்கொள்ளாத ஒன்று. இந்த பசை உங்கள் முகத்திற்காக தயாரிக்கப்பட்டது இல்லை. இதனை நீங்கள் பயன்படுத்துவதால் உங்கள் முகம் எரிச்சல் அடைந்து சருமம் விரைவில் தொங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கருப்பு நிற புள்ளிகளை அகற்ற சில எளிமையான வழிகள் உள்ளன. அவற்றைத் தேர்வு செய்து அகற்றுங்கள். பசையை ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள்.

கலர் பென்சில்
வண்ணங்கள் திட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட கலர் பென்சில்கள் எவ்வாறு மேக்கப் சாதனங்களாக மாறும். இந்த கலர் பென்சில் பெரும்பாலானவை நச்சுத்தன்மையற்றவை என்றாலும் கூட , பாதுகாப்பானவை என பரிந்துரைக்கப்படுவதை விட அவை அதிக அளவு ஈயத்தைக் கொண்டுள்ளன. இதில் உள்ள சாயங்கள் முகத்தில் ஆபத்தினை ஏற்படுத்தக் கூடியவை. இதனால் தோல் சம்மந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கலர் பென்சில்களை வண்ணங்களை திட்டுவதற்காக மட்டும் பயன்படுத்துங்கள்.

சலவைப் பொருட்கள்
முகத்தில் உள்ள சிவப்பு நிறம், முகப்பரு மற்றும் சருமத்தை வெள்ளை ஆக்குவதற்கு துணி சலவையை சிலர் பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் தவறான விஷயம். இந்த சலவையில் பெரும்பாலும் ஆபத்தான இரசாயனங்கள் உள்ளன, குறிப்பாக ஹைட்ரோகுவினோன் உள்ளது. இது உங்கள் முகத்தில் படுவதால் புற்றுநோயை ஏற்படுத்தும். எனவே சலவைப் பொருட்களை முகத்தில் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

மெலிதான இடுப்பு
மெலிதான இடுப்பை பெறுவதற்காக இடுப்பு ஆடை அணிவது மிகவும் தவறான ஒன்று. இந்த ஆடையை அணியும் போது உங்கள் இடுப்பு எவ்வளவு இறுக்கமாக உள்ளது என்பதை நீங்கள் உணர முடியும். அது உங்கள் உள் உறுப்புகளை எவ்வாறு உணர வைக்கிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் உள் உறுப்புகள் இருக்கும் இடங்களை இறுக்கி அதனை குறைப்பது நல்லது அல்ல. எனவே நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்ளும் பழக்கத்தை கடைப்பிடிங்கள். ஆரோக்கியமான வாழ்கை முறையை அனுபவிங்கள்.



Click it and Unblock the Notifications