For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 2 பொருளை வெச்சு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராதாம்... அதென்ன ஃபேஸ் பேக்?

தயிரை வேப்பிலையுடன் சேர்த்து ஃபேஸ் பேக் போட்டால், அது சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை தரும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்தினால், பல பிரச்சனைகள் மாயமாய் மறைந்துவிடும்.

|

வேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி அனைவருக்குமே தெரியும். இதில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இது உடலில் மட்டுமின்றி சருமத்திலும் பல நன்மைகளைத் தரக்கூடியது. வேப்பிலை பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ஓர் இயற்கை மருந்து. வேப்பிலையின் சாற்றினை உட்கொள்வது சர்க்கரை நோய் மற்றும் டெங்கு போன்ற நோய்களுக்கு நன்மை பயக்கும். இது தவிர, வேப்பிலை சருமத்தின் நிறத்தை சீராக்கவும், மாசற்றதாக்கவும் மற்றும் அழகாக்கவும் உதவுகிறது.

Beauty Benefits Of Neem Curd Face Pack In Tamil

வேப்பிலை சருமத்திற்கு நன்மை பயக்கும் என்பதால், இது பல அழகு மற்றும் சரும பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதுப்போன்றே சருமத்திற்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது தான் தயிர். இந்த தயிரை தனியாக சருமத்தில் பயன்படுத்தினாலே, சருமத்தில் நல்ல மாற்றம் தெரியும். அதுவும் தயிரை வேப்பிலையுடன் சேர்த்து ஃபேஸ் பேக் போட்டால், அது சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை தரும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்தினால், பல பிரச்சனைகள் மாயமாய் மறைந்துவிடும்.

இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு ஒரு ஸ்பூன் தயிருடன் 2 ஸ்பூன் வேப்பிலை விழுதை சேர்த்து கலந்து பயன்படுத்த வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளதால், இந்த ஃபேஸ் பேக் போட்டால் சரும செல்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். இப்போது வேப்பிலை மற்றும் தயிர் ஃபேஸ் பேக்கால் பெறும் அழகு நன்மைகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty Benefits Of Neem Curd Face Pack In Tamil

Here we listed some beauty benefits of neem and curd face pack. Read on...
Story first published: Friday, September 24, 2021, 19:04 [IST]
Desktop Bottom Promotion