Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
நீங்கள் உங்கள் முகத்தில் இருக்கும் கருமையைப் போக்கி, பளிச்சென்ற முகத்தைப் பெற விரும்பினால், கீழே உங்களுக்காக ஒருசில எளிய ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து நேரம் காலம் பாராமல் வேலை செய்து, கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்க்கும் போது, உங்கள் முகம் பொலிவிழந்து கருப்பாக, அசிங்கமாக காணப்படுகிறதா? பணிச்சுமையால் தற்போது பலருக்கும் அழகு நிலையங்களுக்கு சென்று தங்கள் சருமத்தைப் பராமரிக்க முடிவதில்லை. உங்கள் சூழ்நிலையும் இது தானா? அப்படியானால் கவலைப்பட வேண்டாம். தினமும் இரவு தூங்கும் முன் ஒருசில ஃபேஸ் பேக்கை முகத்திற்கு போடுங்கள். அதுவும் வீட்டின் சமையலறையில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள்.

நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் திறன் கொண்டது. எனவே நீங்கள் உங்கள் முகத்தில் இருக்கும் கருமையைப் போக்கி, பளிச்சென்ற முகத்தைப் பெற விரும்பினால், கீழே உங்களுக்காக ஒருசில எளிய ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களால் முடிந்த ஃபேஸ் பேக்கை முயற்சித்து சரும நிறத்தை மேம்படுத்துங்கள்.

ஃபேஸ் பேக் #1
உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? அப்படியானால் ஒரு பௌலில் கடலை மாவை சிறிது எடுத்து, அத்துடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் எலுமிச்சையில் இருக்கும் ப்ளீச்சிங் பண்புகள், சருமத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றி, சருமத்தின் நிறத்தை மேம்பத்தும். மறுபுறம் தயிர் சருமத்தை ஈரப்படத்துடன் வைத்துக் கொள்ளும்.

ஃபேஸ் பேக் #2
பாதாம் பவுடர் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரியும். அந்த பாதாம் பவுடரை பால் சேர்த்து பேஸ்ட் செய்து பயன்படுத்த, சரும நிறம் மேம்படும். அதற்கு 5 பாதாமை அரைத்து பொடி செய்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு செய்து வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

ஃபேஸ் பேக் #3
சரும ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்தும் ஒரு அற்புதமான பழம் தான் பப்பாளி. மேலும் இது விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய பழமும் கூட. இந்த பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் பொருள் சருமத்துளைகளில் உள்ள அழுக்கை முழுமையாக வெளியேற்றும். அதோடு, எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், சரும கருமையைப் போக்கும். அதற்கு நன்கு மசித்த பப்பாளியுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக் #4
பழங்காலம் முதலாக சரும அழகைப் பராமரிக்க பயன்படுத்தப்பட்டு வரும் பொருள் தான் சந்தனம். இந்த சந்தனம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்திற்கு பொலிவைத் தருகிறது. இந்த சந்தனத்தின் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

ஃபேஸ் பேக் #5
சமையலறையில் உள்ள சரும நிறத்தை அதிகரிக்க உதவும் மற்றொரு பொருள் தான் தக்காளி. தக்காளியில் உள்ள அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி, சருமத்திற்கு உடனடி பொலிவைத் தரும். அதற்கு ஒரு தக்காளி துண்டை எடுத்து, முகத்தில் சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications