For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க மேல் உதட்டில் இருக்கும் முடிய எப்படி ஈஸியா எடுக்கலன்னு தெரியுமா?

முகத்தில் இருக்கும் இந்த தேவையற்ற முடிகள் பல பெண்களுக்கு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இதற்கு காரணம் மரபணு அல்லது ஹார்மோன் ஆக இருக்கலாம். சிறந்த பதிலை அளிக்க இந்த வழிமுறைகளில் சிலவற்றை பின்பற்றுங்கள்.

|

உதட்டின் மேல் இருக்கும் தேவையற்ற முடி வளர்ச்சி பெண்களுக்குக் கவலை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. முகத்தில் இருக்கும் இந்த தேவையற்ற முடிகள் பல பெண்களுக்கு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இதற்கு காரணம் மரபணு அல்லது ஹார்மோன் கோளாறாக இருக்கலாம். நம்மில் பலர் மேல் உதடு முடியை அகற்ற வேண்டும் என்று விரும்புவோம்.

Amazing ways to get rid of upper lip hair

இதற்கு சில வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றி இருப்பீர்கள் அவை ஏதும் உங்களுக்குச் சிறந்த தீர்வை அளிக்காவிட்டால் நாம் பார்க்கப் போகும் இந்த வழிமுறைகளில் சிலவற்றைப் பின்பற்றுங்கள். இந்த வழிமுறைகளின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் உங்களுக்காகப் பட்டியலிட்டு உள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
த்ரெடிங்

த்ரெடிங்

உதட்டின் மேல் முடியை அகற்ற எல்லோரும் பொதுவாக பின்பற்றும் முறைகளில் ஒன்று த்ரெடிங் ஆகும். த்ரெட்டிங் என்பது நீங்கள் ஒரு நூலைப் பயன்படுத்தி முடியைச் சுற்றி இழுத்து வேர்களிலிருந்து வெளியே எடுப்பதாகும். இதனை நீங்கள் வீட்டில் செய்ய முடியாது. அழகு நிலையம் சென்று நிபுணர் மூலம் மட்டும் தான் செய்ய முடியும். இது உங்கள் முடி வளர்ச்சியை நீண்ட நாட்களுக்கு வளருவதில் தாமதப்படுத்தும். ஆனால் இந்த முறை வேர்களிலிருந்து இழுக்கப்படுவதால் உங்களுக்குச் சற்று வேதனையை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும். மேலும் த்ரெடிங் செய்தவுடன் சிலருக்குச் சருமத்தைச் சிவப்பு நிறமாக மாற்றும். அதேபோல் வெளியே செல்வதற்கு முன்பு த்ரெடிங் செய்வது, முடி நீளமாக வளரும் வரை காத்திருப்பதைத் தவிர்க்கலாம். முடி நீளமாக வளர்ந்தால் வலி இன்னும் அதிகமாக இருக்கும். எனவே சரியான அளவில் இருக்கும் போதே த்ரெடிங் செய்வது நல்லது. மேலும் முடியை அகற்றிய பின்பு கண்டிப்பாக அந்த இடத்தில் ஜெல் அப்ளை செய்ய வலியுறுத்துங்கள் அல்லது ஐஸ் கட்டியைப் பயன்படுத்தலாம்.

நன்மைகள்

1. உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறது

2. மிகவும் எளிமையான முறை

3. அதிக சிரமம் இல்லை

பக்க விளைவுகள்

1. இந்த முறை உங்களுக்கு சிறிது வலியை ஏற்படுத்தும்

2. சிறிது நேரச் சிவத்தல் ஏற்படும்.

வேக்ஸிங்

வேக்ஸிங்

உதட்டின் மேல்பகுதியில் உள்ள தேவையற்ற முடியினை நீக்குவதற்கு மற்றொரு வழி வேக்ஸிங். இப்போது வேக்ஸிங் பொதுவான ஒன்றாக மாறி வந்தாலும் எல்லோரும் இவற்றைப் பின்பற்றுவது இல்லை. வேக்ஸிங் பற்றி முழுமையாகத் தெரியாத காரணத்தினாலோ அல்லது அறிமுகமில்லாத ஒன்றைப் பயன்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் கூட இருக்கலாம். ஆனால் இவற்றை ஒரு முறையாவது நீங்கள் ட்ரை செய்ய வேண்டும். இது உண்மையிலேயே உங்கள் சருமத்தில் அற்புதத்தினை ஏற்படுத்தும். சூடான வேக்ஸிங் முறையை மேல் உதடுகளில் ட்ரை செய்யுங்கள். இது உங்கள் முடியை வேர்களிலிருந்து வெளியே எடுக்க உதவும். இந்த முறையும் உங்கள் சருமத்தைச் சிவப்பு நிறமாக மாற்றும் ஆனால் சிறிது நேரத்தில் சரியாகி விடும்.

நன்மைகள்

1. மிக விரைவானது

2. உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறது

3. முடி மீண்டும் வளர நாட்கள் எடுக்கும்

பக்க விளைவுகள்

1. சற்று வழியை ஏற்படுத்தும்.

2. சிறிது நேரச் சிவத்தல் ஏற்படும்.

3. வேக்ஸிங் செய்வதற்குக் குறைந்தபட்சம் ஒரு செ.மீ நீளமாக முடி இருக்க வேண்டும்

4. நிபுணர் ஆதரவு தேவை

5. இந்த முறை சற்று விலையுயர்ந்தது

எபிலேட்டர்கள்

எபிலேட்டர்கள்

மேல் உதடு முடியை அகற்றப் பயன்படுத்தக் கூடிய மற்றொரு வழி எபிலேட்டர்கள். இது பேட்டரியில் இயங்கும் ஒரு கருவியாகும், இதனைப் பயன்படுத்தி எளிமையான முறையில் வீட்டிலேயே மேல் உதட்டின் முடியை அகற்றலாம். இதுவும் உங்கள் முடியினை வேர்களிலிருந்து அகற்ற உதவும். மேலும் ஒரே நேரத்தில் பல முடிகளை வேர்களிலிருந்து அகற்றுகிறது.

நன்மைகள்

1. வேக்ஸிங்யை விட இது குறைவான வழியைக் கொண்டது

2. நேரத்தை மிச்சப்படுத்துகிறது

3. வீட்டிலேயே செய்யலாம்

4. முடி வளர்ச்சியைக் குறைக்கிறது

5. சென்சிடிவ் சருமத்திற்கும் பயன்படுத்தலாம்

பக்க விளைவுகள்

1. முதன் முதலில் செய்யும் போது இரண்டு முறை வழியை ஏற்படுத்தும்

2. சருமத்தில் சிறிது நேரம் சிவத்தல் ஏற்படுத்தும்

3. இதனை கவனக்குறைவாகப் பயன்படுத்தும் போது வெட்டுக்கள் மற்றும் காயங்களை ஏற்படுத்தும்.

4. எபிலேட்டர்கள் சற்று விலை உயர்ந்தது. ஆனால் ஒரு முறை வாங்கினால் போதுமானது.

ஷேவிங்

ஷேவிங்

ஷேவிங் என்பது மிக எளிமையான முறையில் முடியை அகற்றும் முறையாகும். இதற்கு உங்களுக்கு எந்த வித தயக்கமும் தேவையில்லை. இப்போது மிகவும் வசதியான முறையில் எல்லா கடைகளிலும் பெண்களுக்குரிய ரேஸர்கள் கிடைக்கின்றன. இவை சருமத்தில் மென்மையாகச் செயல்பட்டு சருமத்தில் ஏற்படும் காயங்களையும் வெட்டுகளையும் குறைக்கின்றன. எனவே, ரேஸர்களை கொண்டு தேவையற்ற முடிகளை ஷேவ் செய்யுங்கள். இது வலியற்ற மற்றும் எளிமையான முறையாக இருந்தாலும் விரைவில் முடி வளர்ச்சியை ஏற்படுத்தும். அதேபோல் வெறும் முகத்தில் ஷேவ் செய்யக் கூடாது. ஷேவிங் கிரீம்களைப் பயன்படுத்த வேண்டும்.

நன்மைகள்

1.மிகவும் எளிமையாக விரைவாக செய்து முடிக்கலாம்.

2. வலியற்ற முறை

3. உங்கள் பர்ஸ்ஷில் வைத்துக் கொள்ளலாம்.

4. வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யலாம்.

பக்க விளைவுகள்

1. அடிக்கடி செய்வதினால் சருமத்தைக் கருமையாக்கும்.

2. முடி விரைவாக வேகமாக வளரும்

3. இந்த முறை உங்கள் சருமத்தைக் கடுமையாக்கும்

4. கவனக்குறைவினால் வெட்டுகள் அல்லது காயங்களை ஏற்படுத்தும்.

பிடுங்குதல்

பிடுங்குதல்

தேவையற்ற முடிகளை நீக்க டீவீஜிங் முறையைப் பின்பற்றலாம். அதாவது முடியைப் பிடுங்குதல் முறை. இது மற்றவற்றை ஒப்பிடும் போது மலிவான முறை என்றாலும், இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். உங்கள் உதட்டின் மேல் பகுதி முடியைப் பறிக்க நிறையப் பொறுமை உங்களுத் தேவை. டீவீஜிங் கருவியைப் பயன்படுத்தி அதன் இடை வெளிக்கு இடையில் முடியை பற்றி விரைவாக வெளியே எடுக்க வேண்டும். சில ஈரப்பதமூட்டும் கிரீம் அல்லது ஜெல்லைப் பயன்படுத்துங்கள்.

நன்மைகள்

1. மிகவும் மலிவான முறையாகும்.

2. உங்கள் வீட்டிலேயே செய்ய முடியும்

3. ஒரு முறை பயன்படுத்தின அடுத்த முறை முடி இலகுவாக மாறும்.

பக்க விளைவுகள்

1. பொறுமை அதிக அளவில் தேவைப்படுகிறது நேரத்தை எடுத்துக் கொள்ளும்

2. முதல் சில முறைகள் வலிமிகுந்ததாக இருக்கும்.

கிரீம்கள்

கிரீம்கள்

முடியை அகற்றுவதற்கு ஹேர் ரிமூவிங் கிரீம்களை பயன்படுத்தலாம். இந்த கிரீம்கள் முடியை அகற்றுவதில் முக்கிய பங்கினை வைக்கின்றன. இப்போது கடைகளில் ஹேர் ரிமூவிங் கிரீம்கள் கிடைக்கின்றன. உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒன்றை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம். எங்கு முடியை அகற்ற வேண்டுமோ அங்கு அப்ளை செய்து கிரீம்யை நீக்கும் முடியும் அகற்று விடும்.

நன்மைகள்

1. நீங்கள் எளிமையாக வீட்டிலேயே செய்ய முடியும்

2. இந்த முறை வலியற்றதாகும்

பக்க விளைவுகள்

1. உங்கள் சருமத்தைக் கருமையாக்குகிறது

2. சற்று விலையுயர்ந்தது

லேசர் முடி அகற்றுதல்

லேசர் முடி அகற்றுதல்

உங்கள் உதடுகளின் மேல் உள்ள முடியை நிரந்தரமாக அகற்ற விரும்பினால் நீங்கள் லேசர் முடி அகற்றுதல் முறையைக் கையாளலாம். தற்போது இந்த முறை மிகவும் பிரபலமடைந்து வருகிறது. முடிகளை அடிக்கடி அகற்ற வேண்டும் என்ற தொல்லையால் அவற்றை நிரந்தரமாக நீக்க லேசர் முடி அகற்றுதல் முறையைப் பின்பற்றி அகற்றலாம். ஆனால் சில சருமத்திற்கு இது நிரந்தரமான தீர்வாக அமையாது. சில காலங்கள் கழித்து மீண்டும் வளர வாய்ப்புகள் உண்டு. லேசர் முடி அகற்றுதல் முறையை ஒரே முறையில் நீக்க முடியாது இதற்கு வெகு நாட்கள் நீங்கள் சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும். இதனை நீங்கள் ஒரு மருத்துவ நிபுணரிடம் சென்று தான் மேற்கொள்ள முடியும்.

நன்மைகள்

1. லேசர் முடி அகற்றுதல் முறை வலியற்றது

2. முடி வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது

பக்க விளைவுகள்

1. நீண்ட கால சிகிச்சையளிக்க வேண்டும்

2. விலையுயர்ந்தது

3. அனுபவமிக்க நிபுணர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்

4. இதனால் சில ஆபத்துகளும் ஏற்பட கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing ways to get rid of upper lip hair

Unwanted hair growth is a cause of worry for many women, especially when it comes to your facial hair. While upper lip hair is common, for many of us the hair growth is more than usual and this can be frustrating. The reason can be genetic or hormonal. Many of us prefer to get rid of those upper lip hair and we find different and better alternatives to do that. While threading is the most common way to deal with your upper lip hair, it is definitely not the only one.
Desktop Bottom Promotion