Just In
- 2 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 4 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 5 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 9 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- News
உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Sports
இந்தா வந்துட்டேன்.. 13 சிக்ஸர்கள்.. மூன்றே போட்டிகளில் டி20 அரங்கை அதிர வைத்த கோலி!
- Movies
"பேப்பர் பாய்" பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்
- Finance
பலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..!
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உடம்பு சும்மா எப்பவும் தளதளனு வெச்சிக்கணுமா? இத மட்டும் செஞ்சாலே போதும்...
கோடை காலம் வந்துட்டாலே போதும் மக்கள் வெளியே செல்லக் கூட பயப்படுகின்றனர். அந்தளவுக்கு வெயிலின் தாக்கம் நாள் நாளுக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வெயிலின் தாக்கம் நம் உடம்பில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சி சருமத்தையும் பொலிவிழக்கச் செய்கின்றன.
எனவே சருமம் பழைய நிலையை அடைய வேண்டும் என்றால் அதற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் சருமம் மென்மையாகவும் பொலிவோடும் காணப்படும். அதற்கு இந்த ஈஸியான வழிகளை மேற்கொள்ளலாம். இந்த கோடை காலத்தில் கூட உங்கள் சருமம் ஜொலிக்கும்.

காலநிலை மாற்றம்
அதிகமான சூரிய ஒளியில் உங்கள் சருமம் படும் போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் முழுவதும் ஆவியாகி வறண்டு போய் விடுகிறது. இதனால் சருமம் அதன் ஈரப்பதத்தை இழக்கிறது. எனவே வெளியில் இருந்து மாய்ஸ்சரைசர் தேவைப்படுகிறது. சூரிய ஒளி மட்டுமல்ல, குளிர்ந்த காற்று, அதிக காற்று கூட சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். இதனால் உங்கள் சருமம் சீக்கிரம் வயதாக ஆரம்பித்து விடும்.
MOST READ: இந்த யூக்கா கிழங்கோட மகிமை தெரியுமா? மாரடைப்பை கூட தடுக்குமாம்...

வாழ்க்கை முறை
மக்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை பெரும்பாலும் தவிர்க்கிறார்கள். இதனால் சருமத்திற்கு தேவையான கொழுப்பு அமிலம் பற்றாக்குறை ஏற்பட்டு சருமம் வறண்டு போக நேரிடுகிறது.
அதுமட்டுமல்லாமல் செயற்கை பானங்கள் கூட சருமழகை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆல்கஹால், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களும் சரும ஈரப்பதத்தை பாதிக்கிறது. அதிலும் சென்ஸ்டிவ் சருமம் என்றால் அதிகளவு இந்த பிரச்சினையில் பாதிப்படைவீர்கள்.

அழகு சாதனப் பொருட்கள்
கடைகளில் சரும பராமரிப்பு பொருட்கள் என்று வாங்கும் பொருட்கள் கூட உங்கள் சருமழகை கெடுக்கிறது. இந்த பொருட்கள் உங்கள் சருமத்திற்கு ஒத்து போகவில்லை என்றால் சரும ஈரப்பதம் அடி வாங்க நேரிடும். சரும தொற்றுகள் ஏற்பட்டு சருமழற்சிக்கு வழிவகுக்கும்.

நீர்ச்சத்துள்ள உணவுகள்
உங்கள் சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை உணவின் மூலமும் கொடுக்க முடியும். நிறைய உணவுகளில் அதிகளவு தண்ணீர் உள்ளது. நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளான தர்ப்பூசணி, செலரி, பெர்ரி, வெள்ளரிக்காய்,.பீச், ப்ளம்ஸ், கிவி, ராஸ்பெர்ரி போன்றவைகள் உள்ளன.

நிறைய தண்ணீர் பருகுங்கள்
உங்கள் சருமத்திற்கு போதுமான நீர்ச்சத்து கிடைக்கு நிறைய தண்ணீர் குடியுங்கள். ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். இந்த ஒரு வழியே போதும் அழகுப் பொருட்கள் எதுவும் இல்லாமல் உங்கள் சருமத்தை இளமையாக்கலாம்.

சுடுநீர் குளியல் வேண்டாம்
குளிர்ந்த காலங்களில் சுடுநீர் குளியல் நன்றாக இருக்கும். ஆனால் சுடுநீர் உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். எனவே சுடுநீரில் நீண்ட நேரம் குளிப்பதை தவிர்த்து வெதுவெதுப்பான நீரில் குளியல் போடுங்கள்.

மாய்ஸ்சரைசர்
குளிர்த்த உடன் சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யுங்கள். இது உங்கள் சருமம் சீக்கிரம் குணமாக உதவும். இயற்கையான மாய்ஸ்சரைசர் என்றால் இன்னும் சிறந்தது.
கோக்கோ பட்டர் அல்லது விளக்கெண்ணெய் போன்றவை உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் மென்மையாக இருக்க உதவும். கோக்கோ பட்டர் சரும ஈரப்பதத்தை தக்க வைத்து நீண்ட நேரம் மாய்ஸ்சரிங் செய்கிறது.

பயன்கள்
பாதங்கள், மூட்டுகள், முழங்கால்கள், கைகள், கன்னங்கள் போன்ற பகுதிகள் சீக்கிரம் வறண்டு போய் விடும். எனவே தூங்கப் போவதற்கு முன் உங்கள் சருமத்தை மாய்ஸ்சரைசர் செய்து கொண்டால் காலையில் எழும் போது ஆழகான சருமத்தை பராமரிக்க இயலும்.
MOST READ: மனிதனுக்கு திடீர்னு மரணம் வருவது எதனால்? அதை எப்படி தவிர்க்கலாம்?

உள்ளே இருந்து போஷாக்கு கொடுங்கள்
உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உணவுகளும் உதவுகிறது. பழவகைகளான கிவி, பெர்ரி, செலரி தக்காளி, வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, காரட், முள்ளங்கி போன்றவற்றை பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள். ஒமேகா 3 கொழுப்பு உணவுகள் சரும எலாஸ்டிக் தன்மையை காக்கிறது. கேலோஜெனை உற்பத்தி செய்கிறது. அதே மாதிரி விட்டமின் சி, ஜிங்க் சருமத்திற்கு தேவை.

எண்ணெய் குளியல்
தினமும் குளிக்கும் போது குளிக்கின்ற நீரில் 2 சொட்டுகள் எண்ணெய் கலந்து குளியுங்கள். இது இயற்கையாகவே மாய்ஸ்சரைசர் மாதிரி இருக்கும்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்றவைகள் இயற்கையாகவே உள்ளன.
சோப்பு, சூடான குளியல் போன்றவை சருமத்தை வறண்டு போக வைத்து விடும். எனவே குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்தால் சோப்பால் சருமம் வறண்டு போகுவதை தடுக்கலாம்.

சரியான சோப்பை தேர்ந்தெடுங்கள்
உங்க சருமத்திற்கு ஏதுவான சோப்பை தேர்ந்தெடுப்பது முக்கியம். சோப்பின் அட்டைக்கு பின்னால் இருக்கும் கெமிக்கல்கள், கலந்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் படித்து கொள்ளுங்கள். அதிகம் கெமிக்கல் சேர்க்கப்பட்ட சோப்புகள் வேண்டாம்.
நேச்சுரல் ஆயில், கற்றாழை சோப்பு, விளக்கெண்ணெய் போன்றவை கலந்த சோப்பை தேர்ந்தெடுங்கள்.

அவகேடா
அவகேடா உங்களுக்கு நல்ல உணவாகவும் நல்ல அழகுப் பொருளாகவும் செயல்படுகிறது. இதில் நிறை கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் சாப்பிட்டாலும் சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் கிடைக்கும். அதே மாதிரி பேஸ் மாஸ்க் ஆகவும் பயன்படுத்தலாம்.
அவகேடா பேஸ் மாஸ்க்
அவகேடா பழத்தில் உள்ள சதைப்பற்றான பகுதியை எடுத்து ஒரு பெளலில் போட்டு கலந்து கொள்ளவும்.இதை உங்கள் சருமத்தில் தடவி 5 நிமிடங்கள் வைக்கவும். அதே மாதிரி பாடி வாஸாக பயன்படுத்தி கூட சரும ஈரப்பதத்தை காக்கலாம்.
MOST READ: நீங்களே நினைச்சு பார்க்காத அளவு டக்குனு வெயிட் குறையணுமா? அதுவும் ஆரோக்கியமா? இதோ

தேன்
தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. இதன் பூஞ்சை எதிர்ப்பு தன்மை, ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள், மாய்ஸ்சரைசர் தன்மை சருமத்திற்கு சிறந்தது.
அப்ளே செய்யும் முறை
வறண்ட சருமத்தில் தேனை அப்ளே செய்யுங்கள். பிறகு 5-10 நிமிடங்கள் விட்டு விடுங்கள். இப்பொழுது குளியுங்கள். குளித்த பிறகு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யுங்கள். இதை தினமும் செய்து வந்தால் உங்கள் சருமம் பட்டு போன்று மென்மையாக இருக்கும். நல்லா சருமம் ஈரப்பதத்துடன் காணப்படும்.
மேற்கண்ட ஈஸியான முறைகள் இந்த கோடை காலத்தில் உங்களுக்கு மிகச் சிறந்த பலனை அளிக்கும்.