Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இளவயதிலேயே தோல் சுருங்கி முதுமை தோற்றமா? என்ன கரணம் என்றறிய இதை படிங்க.
இளம் வயதினர் வயதை விட உருவம் கொண்டே மதிப்பிடுகின்றனர். ஆனால், வயது இருப்பதாகினும், முதுமையானவரை போன்ற தோற்றம் கொண்டவராக விளங்கினால், அவர்களை குறித்து முதுமையானவர் என்ற எண்ணமே ஏற்படும். இது இந்த தலைமுற
இளம் வயதினர் வயதை விட உருவம் கொண்டே மதிப்பிடுகின்றனர். ஆனால், வயது இருப்பதாகினும், முதுமையானவரை போன்ற தோற்றம் கொண்டவராக விளங்கினால், அவர்களை குறித்து முதுமையானவர் என்ற எண்ணமே ஏற்படும். இது இந்த தலைமுறையில், ஆண் மற்றும் பெண் என இரு பாலினரிடத்திலும், தோல் சுருக்கம் இளமையிலேயே காணப்படுகிறது; இதனால், இளமையாய் இருந்தும் முதியவராய் காட்சியளிக்கின்றனர்.

இளம் பருவத்தில், முதியவர் போன்று காட்சியளிப்பதை யார் தான் விரும்புவர்? இளமையிலேயே தோன்றும் தோல் சுருக்கத்தை போக்குவதற்கு உதவும் சில வழிகளை பற்றி இந்த பதிப்பில் படித்தறியுங்கள், தோழியரே!

இளவயது சுருக்கம்!
இந்த தலைமுறையினர், இளம் வயதிலேயே பலவித பொறுப்புகளையும், அரிதற்கரிய சாதனைகளையும், மனஅழுத்தம் தரக்கூடிய வேலைகளையும் புரிகின்றனர். மூத்த தலைமுறையினரும் கடுமையாகவே உழைக்கின்றனர்; நம் முன்னோர்கள் வேலைப்பளுவை எளிதாய் கையாளும் கலையை அறிந்திருந்தனர். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் எதெற்கெடுத்தாலும் கவலை பட்டுக்கொண்டு, டென்ஷன் ஆகிக்கொண்டு இருக்கிறோம்; நமது கவலை உணர்வுகள் தான் நம்மை வயதானவராய் காட்டுகின்றன. எனவே, கவலை உணர்வுகளை குறைத்து, மகிழ்ச்சியாய் மனதை வைத்திருந்தாலே போதும், என்றும் இளமையாய் வாழலாம்.

முக்கிய அங்கங்கள்
இந்த இளவயது தோல் சுருக்கம் ஏற்படும் முக்கிய அங்கங்களாக கண்ணின் கீழ்ப்பகுதி, நெற்றிப்பகுதி மற்றும் முகத்தசைகள் விளங்குகின்றன. மிகவும் அதிகமாக கவலைபடுபவர்களின் உடல் தோல் வெகு விரைவாக சுருங்கி காணப்படும் அபாயம் உண்டு. ஒருவரின் முகத்தை பார்த்து தான் அவரின் வயதை கணக்கிடுகிறோம்; அப்படிப்பட்ட முகத்தின் முக்கிய பாகங்களே இவ்வாறு காட்சியளித்தால், கண்டிப்பாக பார்ப்பவர் கண்ணுக்கு இளையவரும் முதியவராகவே தோன்றுவர்.

காரணமென்ன?
கவலைப்படாமல் மனிதனால் இருக்க முடியாது; அது இளைஞராயினும் முதியவராயினும் அனைவர்க்கும் பொதுவானதே! கவலை, டென்சன் மற்றும் மனஅழுத்தம் ஆகிய முன்னரும் தோல் சுருக்கத்தை முக்கிய காரணங்கள் ஆகும்; இவை இளமையை அடியோடு போக்கக்கூடியவை. ஆகையால், இவற்றை தவிர இளவயதிலேயே சுருக்கத்தை ஏற்படுத்தும் மற்ற காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.

சூரிய ஒளி
அதிக நேரம் சூரிய ஒளி நேரடியாக படும்படி வேலை பார்ப்பது, உங்கள் உடல் செல்களை பதித்து சுருக்கம் போன்ற சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிலும் சூரியனிலிருந்து வரும் UV கதிர்கள், உடலிலுள்ள கொலாஜன் எனும் என்சைமை பாதிக்கக்கூடியவை; இந்த கொலாஜன் என்சைம் தான் இளமையை தரக்கூடிய, இளமைக்கு காரணமான என்சைம். ஆகவே, அதிக நேரம் சூரிய ஒளியின், குறிப்பாக UV கதிர்களின் பாதிப்புக்கு உள்ளாவதை தவிருங்கள். அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அதாவது சன்ஸ்கிரின் பயன்படுத்துவது போன்ற ஏதேனும் செயல்களை மேற்கொள்ளுங்கள்.

சரியற்ற தூக்க முறை
ஒரு நாளைக்கு 6-7 மணி நேரங்களாவது நிம்மதியாக உறங்க வேண்டும்; ஒவ்வொரு மனிதருக்கும் உறக்கம் என்பது மிக முக்கியமானது. ஏனெனில் மனித உடல் புத்துணர்வுடன் ஒவ்வொரு நாளும் ஆற்றலுடன் செயல்பட போதுமான அளவு உறக்கம் அவசியம். சரியாக உறங்கவில்லை எனில், கண்ணிற்கு கீழாக கருவளையம், சுருக்கம் என பல விஷயங்கள் தோன்றி, உங்கள் இளமையை கெடுத்துவிடும். மேலும் மனித உடல் உறுப்புகள் 24/7 என ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நாம் தூங்கினாலும் கூட, அடுத்த நாளுக்கு தயாராக, உடல் உறுப்புகள் உறங்காமல் உழைத்துக் கொண்டே இருக்கின்றன.
எனவே இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை கட்டாயமாக உறங்குங்கள். இந்த நேரங்களில் விழித்திருப்பது உடலின் இயக்கத்தை பாதிக்கும்; எனவே, அதிக நேரம் விழித்திராது சீக்கிரம் உறங்கி, விரைவாக துயிலெழுங்கள். அது ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிகம் உறங்கினாலும், உறங்காமல் தவிர்த்தாலும் அது முதுமையை வரவேற்றுவிடும். எனவே, குறிப்பிட்ட நேரத்தில், போதுமான அளவு உறக்கம் கொண்டு, ஆரோக்கியமான உடல் நலம் பெரும் இளமையாக வாழ முயற்சியுங்கள்.

முகபாவனைகள்
தேவையில்லாத விஷயத்திற்கும் கூட அதிக வியப்பு காட்டி, அதிக முக பாவனைகளை மேற்கொள்ளும் பொழுது, இயல்பாகவே உங்களது தோல் சுருங்க தொடங்குகிறது. மேலும் முக பாவனைகள் புருவம் உயர்த்துவதன் மூலமாக, கண்களை சுருக்கி பார்த்தால், நெற்றியை சுருக்குதல் என்றே வெளிப்படுகிறது. இந்த மாதிரியான செயல்கள் விரைவில், அந்தந்த பாகங்களில் அதிக சுருக்கத்தை ஏற்படுத்தி, உங்கள் இளமையை அடியோடு அழித்து விடுகின்றன.

புகை பிடித்தல்
புகை பிடித்தல் மற்றும் மது பழக்கம் உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்றே நாம் அறிந்திருக்கிறோம். அது உங்கள் உடலின் அழகையும் அதிகம் கெடுக்கிறது என்ற உண்மையை இந்த பதிப்பினை படிப்பதன் மூலமாக அறிந்து கொள்ளுங்கள். மேலும் இந்த பழக்கங்கள் உங்கள் சருமத்தை செண்டிட்டிவானதாக மாற்றி, தோல் சுருக்கம் போன்றவற்றை ஏற்படுத்தி உங்கள் இளமையை பறித்து விடுகின்றன. ஆகையால் உஷாராக இருங்கள் நண்பர்களே!

படுக்கும் நிலைகள்
நீங்கள் படுக்கும் நிலைகளும் உங்கள் இளமையை தீர்மானிக்கின்றன. "என்னடா இது புதுசா இருக்கு என்று கூறும் உங்களது மைண்ட் வாய்ஸ்" எனக்கு கேட்கிறது. ஆனாலும் இது உண்மை தான். நீங்கள் குப்புற வக்கில், முகத்தை புதைத்து உறங்கும் பொழுது முகத்தில் அழுத்தத்தையும் சுருக்கத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும் அதிக நேரம் இதே நிலையில் இருப்பது உங்கள் இளமையை விரைவாக சிதைத்து விடுகிறது. ஆகையால், படுக்கும் பொழுது, அணைத்து உடல் உறுப்புகளும் நேரான நிலையில் இருக்குமாறு வைத்து உறங்குவது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது; உடல் அழகிற்கும் நல்லது. முடிந்த வரை தலையணையை தவிர்த்து உறங்குவதும் ஆரோக்கியமான செயலே!



Click it and Unblock the Notifications











