For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள்!

இங்கு கோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

நம் அனைவருக்குமே அழகான, ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் இப்படியொரு சருமத்தைப் பெற வேண்டுமானால், நிறைய பணம் செலவழித்து, சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க வேண்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அது தான் இல்லை. ஒருவர் அழகாக ஜொலிக்க நினைத்தால், அதற்கு வீட்டில் உள்ள பொருட்களே பெரிதும் உதவியாக இருக்கும்.

ஆம், நம் வீட்டிலேயே சருமத்தை அழகாக்கும் மற்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் நிறைய பொருட்கள் உள்ளன. குறிப்பாக அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்கறிகளே நம் அழகை மேம்படுத்தும். அதிலும் கோடைக்காலம் வந்துவிட்டது. கொளுத்தும் கோடையில் எவ்வளவு சரும பிரச்சனைகளை சந்திக்கப் போகிறோம் என்றே தெரியவில்லை. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை கோடைக்காலத்தில் சரும பிரச்சனைகள் வராமல் சரும அழகை மேம்படுத்தும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள் குறித்து கொடுத்துள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காய்கறி ஃபேஸ் பேக்குகள் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்தவை என்பதால் இது சருமத்தை புத்துணர்ச்சியுடனும், கருமையாகாமலும், கருவளையங்கள் ஏற்படாமலும், பிம்பிள் மற்றும் பருக்கள் வராமலும் தடுக்கும். சரி, இப்போது காய்கறி ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* வெள்ளரிக்காய் சாறு - 2-3 டேபிள் ஸ்பூன்

* புளித்த க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகம் மற்றும் கழுத்துப் பகுதியைக் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க் சருமத்திற்கு மென்மைத்தன்மையை வழங்குவதோடு, வறட்சியடையாமலும் தடுக்கும்.

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கு சாறு

தேவையான பொருட்கள்:

* உருளைக்கிழங்கு - 1

* பஞ்சுருண்டை

எப்படி பயன்படுத்துவது?

* உருளைக்கிழங்கை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகம், கை, கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும்.

* 15-20 நிமிடம் கழித்து, நீரால் கழுவ வேண்டும்.

* இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீங்கி, சருமம் கருமையாவது தடுக்கப்படும்.

தக்காளி ஃபேஸ் பேக்

தக்காளி ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* தக்காளி- 1

* தண்ணீர் - 1 கப்

எப்படி பயன்படுத்துவது?

* தக்காளியை வெட்டி அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி கோடையில் தினமும் செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கேரட் ஃபேஸ் பேக்

கேரட் ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* கேரட் பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* அதன்பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

வெங்காய ஃபேஸ் பேக்

வெங்காய ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* சின்ன வெங்காயம் - 1

* பஞ்சுருண்டை

* தண்ணீர்

எப்படி பயன்படுத்துவது?

* வெங்காயத்தை சிறு துண்டுகளாக்கி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அதை வடிகட்டி சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, அந்த சாற்றினை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தை சருமத்தில் காணலாம்.

பீட்ரூட் ஃபேஸ் பேக்

பீட்ரூட் ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* பீட்ரூட் ஜூஸ் - 4 டீஸ்பூன்

* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு பௌலில் பீட்ரூட் ஜூஸ் மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும்.

* பின்பு 25 நிமிடம் கழித்து நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி தினமும் செய்தால், சரும நிறம் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vegetable Face Packs To Try Out This Summer

This write-up will give you a complete guide on some vegetable face masks which are cheaper and affordable that you can try at home this season. Let us see how to use organic vegetables in the form of face packs for a healthy and glowing skin.
Story first published: Friday, May 4, 2018, 16:58 [IST]
Desktop Bottom Promotion