Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
வெயில் காலத்துல கருப்பாகாம இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஷியல் செய்யுங்க...
இங்கு முகப்பொலிவை அதிகரிக்கும் ஆரஞ்சு ஃபேஷியல் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மட்டுமின்றி, சில முக்கியமான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. நம் அனைவருக்கும் ஆரஞ்சு பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரியும். ஆனால் ஆரஞ்சு பழம் ஒருவரது அழகை மேம்படுத்த உதவும் என்பது தெரியுமா? ஆம், ஆரஞ்சு பழம் ஒருவரது சரும நிறத்தை மேம்படுத்துவதோடு, இளமைத்தன்மையை தக்க வைத்து, அழகிய தோற்றத்தைப் பெற உதவும்.

அதற்கு ஆரஞ்சு பழங்களைக் கொண்டு கிளின்சிங், ஃபேஸ் மாஸ்க், ஃபேஷியல், ஸ்கரப் என்று பலவாறு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இப்படி செய்தால், சரும பிரச்சனைகளான வெயிலால் கருமையான சருமம், சரும வறட்சி போன்றவற்றைத் தவிர்க்கலாம். அதிலும் கோடைக்காலத்தில் ஆரஞ்சு பழங்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமம் கருமையாவதைத் தவிர்க்கலாம்.
முக்கியமாக ஆரஞ்சு விலைக் குறைவில் கிடைப்பதால், அனைவருமே வாங்கி சருமத்திற்கு பராமரிப்புக்களை எளிதில் கொடுக்க முடியும். ஆனால் ஆரஞ்சு பழங்களை அதற்கு சரியாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கவலை வேண்டாம், இக்கட்டுரையில் ஆரஞ்சு பழங்களைக் கொண்டு எப்படியெல்லாம் பராமரிப்புக்களைக் கொடுத்தால், சருமம் பளிச்சென்று பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் காட்சியளிக்கும்.

ஸ்டெப் 1: கிளின்சிங்
ஃபேஷியல் செய்வதற்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று தான் கிளின்சிங். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் தேவையில்லாத தூசிகள் போன்றவை நீங்கி, முகம் பளிச்சென்று காட்சியளிக்கும்.
தேவையான பொருட்கள்:
* ஆரஞ்சு தோல் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* பால் - 2-3 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர், 2-3 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் 2 நிமிடம் கழித்து நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

ஸ்டெப் 2: ஸ்கரப்பிங்
கிளின்சிங்கிற்கு அடுத்தப்படியாக செய்ய வேண்டியது ஸ்கரப்பிங் தான். ஸ்கரப் செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு, முகத்தின் ஒட்டுமொத்த தோற்றமும் மேம்பட்டு காணப்படும்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* ஆரஞ்சு எண்ணெய் - சில துளிகள்
செய்முறை:
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை பொடி, ஆரஞ்சு எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 5-6 நிமிடம் ஸ்கரப் செய்யுங்கள். இந்த செயல்முறையால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும். பின் 5 நிமிடம் கழித்து நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

ஸ்டெப் 3: ஃபேஸ் மாஸ்க்
கடைசியாக போட வேண்டியது தான் ஃபேஸ் மாஸ்க். இதனால் சருமத்திற்கு நீர்ச்சத்து கிடைத்து, ஒட்டுமொத்த முகமும் பிரகாசமாக காட்சியளிக்கும். இங்கு ஒருசில ஆரஞ்சு வகை ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு ஃபேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
* ஆரஞ்சு - 1
* வாழைப்பழம் - 1
செய்முறை:
ஒரு பௌலில் வாழைப்பழத்தை மசித்துப் போட்டு, அத்துடன் ஆரஞ்சு பழத்தின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவில 15-20 நிமிடம் நன்கு ஊற வையுங்கள். பின்பு சாதாரண நீரால் முகத்தைக் கழுவி, உலர்த்திய பின், மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள்.

ஆரஞ்சு மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
* ஆரஞ்சு தோல் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* தேன் - 1 டீஸ்பூன்
* ஓட்ஸ் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வையுங்கள். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இதனால் சருமம் மென்மையாகவும், பளிச்சென்றும் காணப்படும். இந்த வகை ஃபேஸ் மாஸ்க் வறட்சியான சருமத்தினருக்கு ஏற்றதாக இருக்கும்.

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு தோல் ஃபேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
* ஆரஞ்சு தோல் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* ரோஸ் வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பௌலில் ஆரஞ்சு தோல் பவுடர், மஞ்சள் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

கற்றாழை ஜெல் மற்றும் ஆரஞ்சு தோல் ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* ஆரஞ்சு தோல் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - சில துளிகள்
செய்முறை:
ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வையுங்கள். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்கில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். இந்த செயலை வாரத்திற்கு ஒருமுறை என 1-2 மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்கள் முகத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள்.



Click it and Unblock the Notifications
