For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்களைப் போக்க வேண்டுமா? இதோ சில வழிகள்!

இங்கு இளமையைத் தக்க வைக்கும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

நம் அனைவருக்குமே நீண்ட நாட்கள் இளமையுடனும், அழகாகவும் காட்சியளிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், கரும்புள்ளிகள் போன்றவை அழகைக் கெடுத்து, முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் இருக்கும். ஆனால் இப்படி முதுமைத் தோற்றத்தை இளமைலேயே பெறுவதை நம்மால் தள்ளிப் போட முடியும். அதுவும் ஒருசில ஃபேஸ் பேக் மற்றும் மாஸ்க் மூலம் தாமதப்படுத்தலாம்.

Top Anti Ageing Home Remedies to Look 10 Years Younger

இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறுவதைத் தடுக்க பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன. இயற்கை வழிகளைப் பின்பற்றி ஒருவர் இளமையைத் தள்ளிப் போட்டால், அதனால் சிறப்பான பலன் கிடைப்பதோடு, எவ்வித பக்கவிளைவும் இருக்காது. சரி, இப்போது ஒருவரது முதுமையைத் தள்ளிப் போடும் சில இயற்கை வழிகள் எவையென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவகேடோ மாஸ்க்

அவகேடோ மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* அவகேடோ - 1

செய்முறை:

ஒரு பௌலில் அவகேடோவின் கனிந்த பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 10-12 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, சருமத்தில் உள்ள வறட்சி நீங்கி, சரும சுருக்கங்கள் தடுக்கப்படும்.

பாதாம், ரோஸ்வாட்டர் மற்றும் சந்தன எண்ணெய்

பாதாம், ரோஸ்வாட்டர் மற்றும் சந்தன எண்ணெய்

தேவையான பொருட்கள்:

* பாதாம் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்

* ரோஸ் ஆயில் - 2-3 துளிகள்

* சந்தன ஆயில் - 3-4 துளிகள்

செய்முறை:

ஒரு பௌலில் அனைத்து எண்ணெய்களையும் சேர்த்து நன்கு கலந்து, சருமத்தில் தடவி 2-3 நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் ஒரு மணிநேரம் அல்லது ஒரு இரவு முழுவதும் ஊற வையுங்கள். பின்பு நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் இரவு முகம் மற்றும் கழுத்திற்கு கிளின்சிங் செய்த பின்பு தடவி மசாஜ் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

வாழைப்பழ பேக்

வாழைப்பழ பேக்

தேவையான பொருட்கள்:

* கனிந்த வாழைப்பழம் - 1

* ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்

* தேன் - 1 டீஸ்பூன்

* தயிர் - 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பௌலில் கனிந்த வாழைப்பழத்தை போட்டு நன்கு மசித்து, அத்துடன் தேன், ரோஸ் வாட்டர், தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். புன் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

தேவையான பொருட்கள்:

* விளக்கெண்ணெய் - சில துளிகள்

செய்முறை:

விளக்கெண்ணெயை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் நன்கு ஊற வையுங்கள். பின் நீரால் கழுவுங்கள். இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் பால் பேக்

தேங்காய் பால் பேக்

தேவையான பொருட்கள்:

* தேங்காய் பால் - 3 டேபிள் ஸ்பூன்

* பஞ்சுருண்டை

செய்முறை:

தேங்காய் பாலை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த, நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்கலாம்.

கேரட் மற்றும் உருளைக்கிழங்கு பேக்

கேரட் மற்றும் உருளைக்கிழங்கு பேக்

தேவையான பொருட்கள்:

* சிறிய உருளைக்கிழங்கு - 1

* சிறிய கேரட் - 1

* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை

* தண்ணீர்

செய்முறை:

கேரட் மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் மஞ்சள் தூள், பேக்கிங் சோடா மற்றும் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும்.

முட்டை பேக்

முட்டை பேக்

தேவையான பொருட்கள்:

* முட்டை வெள்ளைக்கரு - 1

* மில்க் க்ரீம் - 1/2 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு ஒருசேர கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி மூன்று நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்த ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தேன்

தேன்

ஒரு பௌலில் 1-2 டீஸ்பூன் தேன் எடுத்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 1-2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உங்கள் இளமையைத் தக்க வைக்கலாம்.

பப்பாளி பேக்

பப்பாளி பேக்

தேவையான பொருட்கள்:

* நன்கு கனிந்த பப்பாளி - சில துண்டுகள்

செய்முறை:

பப்பாளியை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், உங்கள் இளமையை பல நாட்கள் தக்க வைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Anti Ageing Home Remedies to Look 10 Years Younger

We all want to have skin that looks young and glowing. There are many home remedies for delaying aging. These are very effective and do not have any side effects.
Story first published: Tuesday, April 24, 2018, 17:43 [IST]
Desktop Bottom Promotion