For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கும் சில ஃபேஸ் பேக்குகள்!

இங்கு வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

கோடைக்காலத்தில் வெள்ளையாக இருக்கும் பலரது சருமம் நிறம் மாறி பழுப்பு நிறத்திலோ அல்லது கருமையாகவோ காணப்படும். இப்படி வெயில் காலத்தில் உங்கள் சரும நிறம் மாறுபடாமல் இருக்க வேண்டுமானால், இதுவரை மற்ற காலங்களில் சருமத்திற்கு கொடுத்து வந்த பராமரிப்புக்களை விட சற்று அதிகமாக சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க வேண்டும். கோடையில் சருமம் கருமையாகாமல் இருக்க வேண்டுமானால், சருமத்திற்கு ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க், ஸ்கரப், ஃபேஷியல் போன்ற பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.

Summer Face Packs for Removing Skin Tan

அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களால் பராமரிப்புக்களைக் கொடுப்பதை விட, இயற்கையாக வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே பராமரிப்பு கொடுத்தால், சரும ஆரோக்கியம் மேம்படுவதோடு, அழகும் மேம்பட்டுக் காணப்படும். அதோடு இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, அது சருமத்தில் எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

சரி, இப்போது வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து வெயில் காலத்தில் பின்பற்றி, உங்கள் சரும அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குங்குமப்பூ மற்றும் பால் ஃபேஸ் பேக்

குங்குமப்பூ மற்றும் பால் ஃபேஸ் பேக்

ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து, அத்துடன் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையால் முகத்தை மசாஜ் செய்து, 5-10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். அதன் பின் துணியால் சருமத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசரை சருமத்திற்கு பயன்படுத்துங்கள்.

வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்

வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்

ஒரு வெள்ளரிக்காய் மற்றும் 1 தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, நீரால் கழுவுங்கள்.

மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்

மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி, 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் உலர்ந்த ஃபேஸ் பேக்கின் மேல் ரோஸ் வாட்டரைத் தெளித்து, மென்மையாக ஸ்கரப் செய்து, தேய்த்துக் கழுவுங்கள். இப்படி செய்தால், சருமத்தில் இருக்கும் கருமை மறைந்து, சருமம் அழகாக ஜொலிக்கும்.

தக்காளி, தயிர் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

தக்காளி, தயிர் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழ், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவுங்கள். இறுதியில் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள்.

எலுமிச்சை மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்

எலுமிச்சை மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்

ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை சிறிது எடுத்து, அத்துடன் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். கற்றாழை ஜெல் ஏற்கனவே ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் என்பதால், இந்த ஃபேஸ் பேக்கிற்கு இறுதியில் மாய்ஸ்சுரைசர் எதையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

முட்டைக்கோஸ் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

முட்டைக்கோஸ் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

முட்டைக்கோஸை சிறிது எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள். அதன் பின் மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவுங்கள்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

சர்க்கரை மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1 துளி ஆலிவ் ஆயில், 2-3 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள், அத்துடன் சிறிது கிளிசரின் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஓட்ஸ் மற்றும் மோர் ஃபேஸ் பேக்

ஓட்ஸ் மற்றும் மோர் ஃபேஸ் பேக்

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி, 3 டேபிள் ஸ்பூன் மோர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இறுதியில் மாய்ஸ்சுரைசர் எதையேனும் தவறாமல் பயன்படுத்துங்கள்.

உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்

உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்

ஒரு சிறிய உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவுங்கள். இது எண்ணெய் பசை சருமத்தினக்கு ஏற்ற அற்புதமான ஒரு ஃபேஸ் பேக்காகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Summer Face Packs for Removing Skin Tan

Here are some summer face packs for removing skin tan. Read on to know more...
Story first published: Wednesday, May 2, 2018, 16:40 [IST]
Desktop Bottom Promotion