For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுருக்கங்கள் நிறைந்த முகமா..? பொலிவற்று சருமம் இருக்கிறதா..? அதற்கான காரணங்களும்,தீர்வுகளும்...!

அழகான,இளமையான முகம் வேண்டும் என்பதே நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு அழகிய எண்ணம்.இந்த இளமையை என்றும் மாறாமல் வைக்க இதோ வழிகள்...

By Haripriya
|

சருமத்தில் சுருக்கமா..? கலை இழந்து தெரிகிறீர்களா...? முகம் பொலிவிழந்து இருக்கிறதா..? அதற்கெல்லாம் காரணம் முகம் முதிர்ச்சியடைவதே...!! இதனால் நீங்கள் வயதானவர்கள் போல் உணர்கிறீர்களா..? அதற்கெல்லாம் பல தீர்வுகள் இருக்கிறது.

நம் அன்றாட வாழ்க்கை மிகுந்த வேலை சுமையும், அதிக குடும்ப சுமைகளும் நிறைந்ததாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நாம் நம்மை பற்றி அக்கறை எடுத்து கொள்வதே இல்லை .முதலில் நம்மை நன்றாக கவனித்து கொண்டால் மட்டுமே நம்மை சுற்றி இருப்பவர்களையும் நாம் நன்றாக பார்த்துக்கொள்ள முடியும்.

இழந்த இளமையை மீண்டும் பெற வீட்டு வைத்தியம்

இன்றைய வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ ,அதே போன்றுதான் முக ஆரோக்கியமும். ஒருவரின் முக ஆரோக்கியமே அக அழகை தெளிவு படுத்தி விடும். அதற்காக தேவையற்ற வேதி பொருட்களை முகத்தில் பூசி முக பொலிவையே நாம் இன்று கெடுத்து வருகிறோம்.இதன் விளைவாக முக முதிர்ச்சி போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்.

இதோ இதற்கான காரணங்களையும்,தீர்வுகளையும் பார்க்கலாம்.
பொதுவாக உங்கள் சருமம், கொலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகிய ஃபைபர்களின் கூட்டு சேர்க்கையால் உருவானது .

இந்த புரதங்கள் தான் உங்கள் சருமத்தை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் தோல் விரிவடைந்தால், அதை மீண்டும் அதனுடைய இடத்திற்கே கொண்டு செல்லும் வேலையை இந்த புரதங்கள் செய்கின்றன.

எனினும், வயதாக வயதாக இந்த புரதங்கள் வலுவிழந்து, உங்கள் தோல் சுருங்க ஆரம்பித்துவிடுகிறது.. அவை மெல்லியதாகி கொழுப்பை இழப்பதால், மென்மையான உணர்வு நமக்கு கிடைப்பதில்லை.

சரும முதிர்வு பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள வேண்டுமா? பின்வரும் கட்டுரையை படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons For Aging & Home Remedies

reasons for aging and its home remedies
Desktop Bottom Promotion