For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னனு தெரியுமா..?

மக்களின் விருப்பத்திற்கேற்ப அனைத்து வித பொருட்களின் தயாரிப்புகளும் பல வகையாக வெளி வருகிறது. உணவு, உடை, போன்றே இந்த பெர்ஃபியூம்களையும் மக்கள் அதிகம் விரும்புவார்கள்.

By Haripriya
|

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதில் பலவித வகைகள் இருக்கத்தான் செய்கிறது. உணவு முதல் உடை வரை எந்த வகையாக இருந்தாலும் தினம்தினமும் புதிது புதிதாக வந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்பு பல விதமாக இருப்பதால் அவர்களின் தேர்வும் அதை போன்றே வேறுபடுகிறது. பொதுவாக யாராக இருந்தாலும் புதிய வகையான ஒன்றையே எப்போதும் எதிர்பார்க்க செய்வார்கள். அது மக்களின் இயல்பாகவே மாறிவிட்டது. மக்களின் விருப்பத்திற்கேற்ப அனைத்து வித பொருட்களின் தயாரிப்புகளும் பல வகையாக வெளி வருகிறது.

Perfume-How To Select, Psychology Behind It & Benefits

உணவு, உடை, போன்றே இந்த பெர்ஃபியூம்களையும் மக்கள் அதிகம் விரும்புவார்கள். அவற்றின் வெவ்வேறு மணங்களையும் ஒரே நேரத்தில் அவர்களை கவர்வது போன்ற பிம்பத்தை இந்த பெர்ஃபியூம்கள் தருகிறது. பெர்ஃபியூம்களுக்கென்றே ஒரு பிரியமான கூட்டம் என்றும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி என்னதான் இந்த பெர்ஃபியூம்களில் உள்ளது... ? அவை உடலுக்கு நல்லதா..? அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது...? அவை எப்படி நம் பெர்சனாலிட்டியை தீர்மானிக்கும்..? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மணம் மயக்கும் பெர்ஃபியூம்கள்..!

மணம் மயக்கும் பெர்ஃபியூம்கள்..!

ஒருவர் எத்தகைய சுத்தமாக இருக்கிறார் என்பது அவரின் மேல் வரும் மணத்தை வைத்து சொல்லிவிடலாம். இதற்கு பெரிதும் உதவுகிறது இந்த பெர்ஃபியூம்கள். நாம் எப்போதும் பூவை போல மணமாக இருக்க வேண்டும் என்றால் தினமும் பெர்ஃபியூம்கள் உபயோகிக்க வேண்டும். இது ஒருவரின் அடையாளத்தையே நல்ல முறையில் எடுத்து காட்டுகிறது.

எத்தகைய பெர்ஃபியூம்கள் நல்லது..?

எத்தகைய பெர்ஃபியூம்கள் நல்லது..?

நாம் கடைகளில் பார்க்கும் எல்லா பெர்ஃபியூம்களும் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. இதற்கென்றே ஒரு சில முக்கிய வரையறை இருக்கிறது. எப்போதும் எக்ஸ்பிரி ஆகாத பெர்ஃபியூம்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக வேதி பொருட்கள் கலந்த பெர்ஃபியூம்கள் உடலுக்கு அவ்வளவும் நல்லது கிடையாது. எனவே அதன் வேதி பொருட்களின் சேர்ப்பு குறைவாக இருப்பதாக தேர்வு செய்ய வேண்டும். அதிக பூக்கள், பழங்களினால் தயார் செய்த பெர்ஃபியூம்கள் உடலுக்கு நல்லது.

பெர்ஃபியூம்களை எவ்வாறு தேர்வு செய்வது..?

பெர்ஃபியூம்களை எவ்வாறு தேர்வு செய்வது..?

கடைக்குள் நுழைந்த உடனேயே கட்டாயம் வண்ணகரமான வகையில் பெர்ஃபியூம்களை அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் அவற்றையெல்லாம் வாங்கி அடுக்கி கொள்ளாமல் அவரின் தரத்தை முதலில் பார்க்க வேண்டும். அவற்றை சிறிது கையில் அடித்து பார்த்து எத்தகைய மணத்தை தருகின்றது என்பதை முதலில் சோதிக்க வேண்டும். சில வகையான பெர்ஃபியூம்கள் உடலுக்கு எரிச்சலை தரும். அவற்றை கண்டறிய சிறிது பெர்ஃபியூமை மணிக்கட்டில் அடித்து, 3 நிமிடம் கழித்து பாருங்கள். எந்த விதமான தோல் அரிப்பும், எரிச்சலும் இல்லை என்றால் அதை வாங்குங்கள்.

பாடி ஸ்பிரே - பெர்ஃபியூம்...இரண்டும் வெவ்வேறு..!

பாடி ஸ்பிரே - பெர்ஃபியூம்...இரண்டும் வெவ்வேறு..!

முதலில் ஒன்றை நன்கு தெளிவு படுத்தி கொள்ளல் வேண்டும். பாடி ஸ்பிரே வேறு பெர்ஃபியூம் வேறு. பாடி ஸ்ப்ரே என்பது ஒரு வித வாசனை திரவி. இதனை உடலில் நேரடியாக பயன்படுத்தலாம். ஆனால் உடைகளில் அடித்து கொள்வது உடைகளின் தன்மை கெடுத்து விடும். அதே போன்று பெர்ஃபியூம்கள் என்ற வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடித்து கொள்ள கூடாது. ஏனெனில் இதில் அதிக படியான வேதி பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். எனவே இவற்றை ஒரு பஞ்சில் தெளித்து உடலில் பூசி கொள்ளலாம். மேலும் தரமான பெர்ஃபியூம்களை வேண்டுமானால் உடலில் அடித்து கொள்ளலாம்.

பெர்ஃபியூம்களும் பெர்சனாலிட்டியும்..!

பெர்ஃபியூம்களும் பெர்சனாலிட்டியும்..!

தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறதேன்னு நினைக்குறீங்களா..? ஆமாங்க, நீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம்கள் உங்கள் பெர்சனாலிட்டியை குறிப்பிடும் என்று பண்டைய கால தத்துவங்கள் சொல்கிறது. ஒவ்வொரு பெர்ஃபியூம்களும் பஞ்ச பூதத்தில் ஒன்றை குறிப்பிடுமாம். அதே போன்று உங்கள் மன நிலையும், உளவியல் சார்ந்த விஷியங்களும் இவற்றை வைத்து கணிக்கப்படுகிறது.

பஞ்ச பூதங்களும் பெர்ஃபியூம்களும்...!

பஞ்ச பூதங்களும் பெர்ஃபியூம்களும்...!

- ரோஜாக்கள், பிற மலர்கள் மற்றும் மென்மையான மணத்தை கொண்ட பெர்ஃபியூம்கள் "நீரை" குறிக்கும்.

- மூலிகை, தாவரங்கள்,ஊசியிலையுள்ள, சிட்ரஸ் போன்றவற்றால் பெர்ஃபியூம் தயாரிக்கப்பட்டால் அது "காற்றை" குறிக்குமாம்.

- காரமான, பழங்கள், வெதுவெதுப்பான பெர்ஃபியூம்கள் "நெருப்பை" சுட்டுகிறது.

- கேரமல், இனிப்பான, மிருதுவான பெர்ஃபியூம்கள் "நிலத்தை" ஆதரிக்கிறது.

- சாக்கலேட்டி, குறைந்த மணம், எளிமையான திரவியங்கள் "வானத்தை" குறிக்கிறது.

நன்மைகள்...

நன்மைகள்...

பெர்ஃபியூம்கள் பயன்படுத்துவதால் சில நன்மைகளும் இருக்கிறது. நமது மனதை நிம்மதியாக இது வைக்கும். பிறரை மிகவும் எளிதாக கவர்ந்தும் விடலாம். மனதின் ஆரோக்கியத்தை சீராக வைப்பதால் உடலுக்கும் நன்மை தருகிறது. பூக்கள், பழங்கள், காய்கறிகளால் தயார் செய்த பெர்ஃபியூம்கள் உடலுக்கு நலனை ஏற்படுத்தும். அத்துடன் தலை வலி போன்ற தொல்லையையும் குறைக்கும்.

ஜாக்கிரதை...!

ஜாக்கிரதை...!

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அவற்றை அதிக அளவு பயன்படுத்த கூடாது. பெர்ஃபியூம்களிலும் அப்படித்தானே. அதிக அளவில் பெர்ஃபியூம்களை உடலில் பயன்படுத்தினால் மயக்கம் போன்றவை சில சமயங்களில் ஏற்பட கூடும். புதிதாக ஒரு பெர்ஃபியூமை உபயோகிக்க விரும்பினால் முதலில் மணிக்கட்டில் சிறிது அடித்து, 3 நிமிடம் கழித்து பாருங்கள். எந்த வித தோல் எரிச்சலும், அரிப்பும் இல்லை என்றால் அதை வாங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Perfume-How To Select, 5 Elements Behind It & Benefits

With so many different varieties of perfumes, it’s easy to just throw up your hands and pick one without very much thought. However, doing your homework before you go shopping will help you narrow down your options.
Desktop Bottom Promotion