For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐஸ்கட்டியை முகத்தில் தேய்ப்பது சரியா?... அப்படி செய்வதால் என்னவாகும்?...

அலைச்சல், தூக்கமின்மை, தூசி, மாசுக்கள் போன்றவற்றால் நம்முடைய முகம் மிக வேகமாகவே பொலிவை இழந்து விடுகிறது. வியர்வையினால் நம் முகம் வாடிவிடுகிறது. சருமத்தின் சோர்வுகளை ஐஸ் கட்டி கொண்டு நீக்கி விடலாம். இ

|

அலைச்சல், தூக்கமின்மை, தூசி, மாசுக்கள் போன்றவற்றால் நம்முடைய முகம் மிக வேகமாகவே பொலிவை இழந்து விடுகிறது. வியர்வையினால் நம் முகம் வாடிவிடுகிறது. எவ்வளவு அழகு குறிப்புகளை முயற்சி செய்து பார்த்தாலும் பயன் என்னவோ பூச்சியம் தான்.

beauty

ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த வெயில் காலத்திலும் உங்கள் சருமத்தை பாதுகாக்கும் எளிய பொருள் உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் உள்ளது. உங்கள் சருமத்தில் உள்ள பருக்கள் மங்க வேண்டுமா? அல்லது நீங்கள் போடும் மேக்கப் ரொம்ப நேரம் நீடிக்க வேண்டுமா? ஐஸ் கட்டி தான் தீர்வு. உங்களுடையது எந்த வகையான சருமமாக இருந்தாலும் சரி, ஐஸ் கட்டி மேஜிக் போல உங்கள் சருமத்தில் மாயம் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமத்தில் ஐஸ் கட்டிகளை தேய்க்கலாமா?

சருமத்தில் ஐஸ் கட்டிகளை தேய்க்கலாமா?

நாள் முழுவதும் அலைந்து வேலை செய்வதால் உடலும் சருமமும் சோர்ந்து விடுகிறது. சருமத்தின் சோர்வுகளை ஐஸ் கட்டி கொண்டு நீக்கி விடலாம். இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முகத்தை ஐஸ் பொலிவு பெற செய்யும். ஐஸ் பேஷியல் தான் தற்போதைய டிரெண்டிங்காக உள்ளது. கொரிய தீபகற்பத்தில் பிரபலமான இந்த பேஷியல் தற்போது உலகெங்கும் பரவி வருகிறது. இதை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். ஏனெனில் இதன் பலன் அதிகம்.

ஐஸ் பேஷியலின் பயன்கள்

ஐஸ் பேஷியலின் பயன்கள்

சருமம் பொலிவு பெற

எல்லாரும் தன்னுடைய சருமம் பிரகாசமாக பளிச்சென்று இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகமாகி முகம் பளிச்சென்று ஆகிவிடும். ஐஸ் கட்டியை தேய்ப்பதால் இரத்த குழாய்கள் முதலில் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும். பின்னர் இதை ஈடு செய்ய நம்முடைய உடல் அதிகமாக இரத்த ஓட்டத்தை முகத்தில் ஏற்படுத்தும். இது முகத்தை பொலிவாக மற்றும் உயிர்ப்பாக மாற்றும்.

கீரிம் வேலை செய்ய...

கீரிம் வேலை செய்ய...

இது ஒரு பலங்கால முறை. நமது சருமத்தில் தடவும் கீரிம்களை சருமம் நன்கு உள்வாங்கிக் கொள்ள இது உதவும். நீங்கள் ஏதேனும் இரவு கீரிம் அல்லது சீரம் சருமத்தில் தடவும் போது அதற்கு மேலாக ஐஸ் கட்டி கொண்டு தேய்த்தால் இந்த கீரிம்களை சருமம் எளிதாக உள்ளிழுத்து கொள்ளும். ஐஸ் கட்டி பயன்படுத்தும் போது இரத்த நுண்குழாய்கள் சுருங்குவதால் இது நடக்கிறது.

கருவளையம் நீங்க..

கருவளையம் நீங்க..

நமது முக அழகை கெடுக்கும் கருவளையங்களை ஐஸ் கட்டி கொண்டு விரட்டி விடலாம். இதற்கு நீங்கள் சிறிதளவு ரோஸ் வாட்டரை கொதிக்க வைத்து பின்னா் அதில் வெள்ளரிக்காய் சாறு கலந்து இதை ஐஸ் ட்ரேயில் வைத்து ஃபிரிசரில் வைத்து விடுங்கள். இதை முகத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் கருவளையம் ஓடிவிடும்.

முகப்பரு மறைய..

முகப்பரு மறைய..

உங்கள் முக அழகை முகப்பரு கெடுக்கிறதா? கவலை வேண்டாம். ஐஸ் கட்டியை முகத்தில் தடவுவதால் சருமத்தில் உற்பத்தியாகும் எண்ணெய் பசை குறையும். அதனால் முகப்பருவும் மறையும். அதுமட்டுமல்ல முகப்பருவினால் ஏற்படும் வலி மற்றும் வீக்கங்களையும் ஐஸ் கட்டி குறைக்கும்.

கண் சோர்வு நீங்க..

கண் சோர்வு நீங்க..

கண்கள் சோர்ந்து காணப்படும் போது முக அழகே கெட்டு விடும். இதை போக்க கண்ணின் விழி ஓரத்திலிருந்து ஆரம்பித்து மேற்புறம் கண் இமை வரை ஐஸ் கட்டி கொண்டு வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். இது வீக்கங்களையும் குறைக்கும்.

நுண்துளைகளை அடைக்க..

நுண்துளைகளை அடைக்க..

நமது முகத்தில் மிக மெல்லிய நுண்துளைகள் இருக்கும். இது இயற்கையாகவே எண்ணெயை மற்றும் அழுக்குகளை வெளியேற்றி முகத்தை தூய்மையாக்கும். ஆனால் ஏதேனும் அழுக்கு இந்த துளைகளை அடைத்து விட்டால் அது பருக்களை ஏற்படுத்தும். அதனால் ஐஸ் கட்டி கொண்டு முகத்தை தேய்க்கும் போது இந்த துளைகள் சுருங்கி அழுக்கு வெளியேறி முகம் பொலிவு பெறும்.

ஃபவுண்டேஷன்

ஃபவுண்டேஷன்

நீங்கள் உங்கள் முகத்துக்கு ஃபவுண்டேஷன் போடும் முன் ஐஸ் கட்டி கொண்டு முகம் முழுவதும் தடவினால் ஃபவுண்டேஷன் முகத்தில் கச்சிதமாக பொருந்தும் மற்றும் நீண்ட நேரம் முகத்தில் நிலைக்கும்.

முகச்சுருக்கம் மறைய..

முகச்சுருக்கம் மறைய..

நம்மால் வயது ஆவதை தடுக்க முடியாது ஆனால் மறைக்க முடியும். ஐஸ் கட்டி கொண்டு முகத்தில் தேய்ப்பதால் ஏற்கனவே உள்ள முக சுருக்கம் மறையும் மேலும் புதிதாக சுருக்கங்களும் விழாது.

உதடுகள்

உதடுகள்

உங்கள் உதடுகள் வறண்டு உள்ளதா? கவலை வேண்டாம். ஐஸ் கட்டி கொண்டு உதடுகளை தேய்க்க வேண்டும். இதனால் உதடுகள் மென்மையாக மாறும். அதுமட்டுமல்லாமல் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

ரேசஸ்

ரேசஸ்

நீங்கள் வெயிலில் அலைந்து திரிவதால் ரேசஸ் வந்து விடும். இதற்கு எளிதான இயற்கை மருத்துவம் ரேசஸ் தான். ஐஸ் கட்டிகளை ஒரு காட்டன் துணியில் சுற்றி பின்னர் இதை கொண்டு முகத்தை மசாஜ் செய்ய, ரேசஸ் சரியாகும். ரேசஸினால் ஏற்பட்ட வலி மற்றும் வீக்கங்களை இது குறைக்கும்.

சன் பர்ன் சரியாக...

சன் பர்ன் சரியாக...

வெயிலினால் ஏற்படும் வியர்க்குரு பிரச்சினையை இந்த ஐஸ் கட்டி மேஜிக் போல சரி செய்து விடும். வியர்க்குரு உள்ள இடத்தில் தொடர்ந்து ஐஸ் கட்டி கொண்டு தேய்த்தால் சரியாகும். மற்றும் இந்த ஐஸ் வலி மற்றும் எரிச்சலையும் போக்கும்.

ஆயில் ஸ்கின்

ஆயில் ஸ்கின்

ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு முகம் எப்போதும் எண்ணெய் படையுடன் காணப்படும். ஐஸ் கட்டி பேஷியல் செய்வதால் முகத்தில் உள்ள நுண்ணிய துளைகள் சுருங்கி அதிகப்படியான எண்ணெய் சுரப்பு கட்டுப்படுத்தப்படும்.

புருவத்தை சீர்படுத்தும்போது

புருவத்தை சீர்படுத்தும்போது

புருவங்கள் சீராக ஆக்கும் போது ஏற்படும் வலி தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். இதை சரி செய்ய புருவங்களை சுற்றி ஐஸ் கட்டி கொண்டு ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். வீக்கங்களும் ஏற்படாது.

முகத்துக்கு ஸ்கிரப்

முகத்துக்கு ஸ்கிரப்

முகத்தை ஸ்கிரப் செய்ய தற்போது பலவிதமான கிரீம் கிடைக்கிறது. ஆனால் இயற்கையான ஸ்கிரப் நம்மிடம் இருக்க இந்த கீரிம்கள் எதற்கு? பாலை ஃப்ரிசரில் வைத்து, பின்னா் இந்த பால் ஐஸ் கட்டிகளை கொண்டு முகத்தை ஸ்கிரப் செய்தால் முகத்திற்கு இயற்கையான பொலிவு மற்றும் வெண்மை கிடைக்கும். பாலில் லாக்டிக் ஆசிட் உள்ளதால் இறந்த செல்களை அழித்து விடும்.

சிறந்த மேக்கப்

சிறந்த மேக்கப்

உங்களுக்கு பொறுமையாக மேக்கப் போட நேரமில்லையா? கவலை வேண்டாம். ஒரு இரண்டு நிமிடம் ஒதுக்கி முகம் முழுவதும் ஐஸ் கட்டி கொண்டு தேய்த்து பின்னர் மேக்கப் போடுங்கள். சருமம் அழகாகும் மேலும் நீங்கள் போடும் மேக்கப் ரொம்ப நேரம் நீடிக்கும்.

ஐஸ் கட்டியின் முக்கியத்துவத்தை தற்போது உணர்ந்து இருப்பீர்கள். இந்த ஐஸ் கட்டியின் நன்மையை அதிகரிக்க சில மூலிகை அல்லது வீட்டு மருந்துகள் சேருங்கள். இன்னும் நன்மை கிடைக்கும். இந்த புத்துணர்ச்சி தரும் ஐஸ் கட்டிகளை எப்படி தயாரிப்பது என அறிய தொடர்ந்து படியுங்கள்.

சோர்ந்த கண்களுக்கு கிரீன் டீ ஐஸ் கட்டி

சோர்ந்த கண்களுக்கு கிரீன் டீ ஐஸ் கட்டி

தேவையான பொருட்கள்:

1. இரண்டு அல்லது மூன்று கீரின் டீ பேக்

2. ஐஸ் ட்ரே

3. தண்ணீர்

செய்முறை

1. கீரின் டீ பைகளை கொதிக்கும் நீரில் போட்டு விடுங்கள்

2. வடிகட்டி மூலம் கிரின் டீயை வடித்து கொள்ளுங்கள்

3. இதை ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரிசரில் வைத்து விடுங்கள்.

4. தினமும் ஒரு கட்டியை எடுத்து கண்களை சுற்றி மற்றும் கருவளையம் உள்ள பகுதிகளில் தேய்த்து விடுங்கள்.

5. காய்ந்த பின்னர் முகம் கழுவ வேண்டாம்.

எப்படி வேலை செய்யும்?

கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இதை ஐஸ் கட்டியாக முகத்தில் தேய்க்கும் போது சுருக்கம் மற்றும் கருவளையம் மறைந்து விடும்.

கற்றாழை மற்றும் ஐஸ் கட்டிகள்

கற்றாழை மற்றும் ஐஸ் கட்டிகள்

சோற்று கற்றாழை சாற்றை எடுத்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மிக்ஸியில் கூட இந்த சாற்றை ஒரு முறை அரைத்து கொள்ளலாம்

இந்த ஐஸ் ட்ரேயை ஃப்ரிசரில் வைக்க வேண்டும்.

வெளியே அலைந்து விட்டு வீடு திரும்பிய பின்னர் இந்த ஐஸ் கட்டிகளை கொண்டு முகத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

காய்ந்த பின்னர் தண்ணீரால் கழுவ கூடாது.

இது எப்படி வேலை செய்யும்?

சோற்று கற்றாழையில் சருமத்தை வெண்மையாக்கும் பண்புகள் உள்ளது மற்றும் இது வீக்கங்களையும் குறைக்கும். ஐஸ் சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்.

வெள்ளரிக்காய் - ஐஸ் கட்டிகள்

வெள்ளரிக்காய் - ஐஸ் கட்டிகள்

தேவையான பொருட்கள்

• வெள்ளரி சாறு

• எலுமிச்சை சாறு

செய்முறை

1. வெள்ளரிக்காயை மிக்சியில் அரைத்து எடுத்து கொண்டு பின்னர் இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து எடுத்து கொள்ளுங்கள்.

2. இதை ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரிசரில் வைத்து விடுங்கள்.

3. வெளியே அலைந்து களைத்து வீடு திரும்பிய பின்னர் இந்த ஐஸ் கட்டிகளை கொண்டு முகத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

4.காய்ந்த பின்னர் தண்ணீரால் கழுவ கூடாது.

இது எப்படி வேலை செய்யும்?

வெள்ளரி, எலுமிச்சை மற்றும் ஐஸ் இந்த மூன்றும் சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். வெள்ளரி சாறு சருமத்தை தூய்மையாக்கும் மற்றும் எலுமிச்சை முகத்தை பளிச்சென்று மாற்றும்.

பருக்களை விரட்ட பட்டையும் ஐஸ் கட்டியும்

பருக்களை விரட்ட பட்டையும் ஐஸ் கட்டியும்

தேவையான பொருட்கள்:

• தண்ணீர்

• கருவாப்பட்டை பொடி அல்லது எண்ணெய்

• சில துளிகள் ரோஸ் ஹிப் எண்ணெய்

செய்முறை :

1. கருவாப்பட்டை எண்ணெய் (அல்லது பொடி) மற்றும் ரோஸ் ஹிப் எண்ணெயை தண்ணீருடன் கலந்து கொள்ளவும்.

2. இதை ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரிசரில் வைத்து விடவும்.

3. இந்த ஐஸ் கட்டிகளை கொண்டு முகத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

4. காய்ந்த பின்னர் தண்ணீரால் கழுவ கூடாது.

5. வாரத்திற்கு மூன்று முறை இதை செய்து வந்தால் பருக்கள் சரியாகும்.

இது எப்படி வேலை செய்யும்?

கருவாப்பட்டையில் பாக்டீரியா தொற்றை சரி செய்யும் பண்புகள் உள்ளன. ரோஸ் ஹிப் எண்ணெயில் விட்டமின் சி உள்ளது மற்றும் ஐஸ் கட்டிகள் முகத்தில் உள்ள நுண்ணிய துளைகளை சுருங்கச் செய்து அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.

ரோஜா இதழில் செய்த ஐஸ் கட்டிகள்

ரோஜா இதழில் செய்த ஐஸ் கட்டிகள்

தேவையான பொருட்கள்:

• 1 கப் காய்ந்த ரோஜா இதழ்கள்

• 4-5 துளிகள் ரோஸ் ஹிப் எண்ணெய்

• தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

1.எடுத்து கொண்ட பொருட்களை தண்ணீருடன் கலந்து கொள்ளவும்.

2.இதை ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரிசரில் வைத்து விடவும்.

3.காய்ந்த பின்னர் முகம் கழுவ வேண்டாம்.

இது எப்படி வேலை செய்யும்?

ரோஸ் ஹிப் எண்ணெயில் வயதான தோற்றத்தை தடுக்கும் பண்புகளும், ஆன்டி பாக்டீரியா பண்புகளும் உள்ளன. ரோஜா இதழிலும் பாக்டீரியா தொற்றை தடுக்கும் பண்புகள் உள்ளதால் இது முகத்தை மினுமினுக்க செய்யும்.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

1. அளவிற்கு மீறினால் எல்லாமே நஞ்சு தான். எனவே ஒரே நாளில் பலமுறை ஐஸ் கட்டிகளை கொண்டு முகத்தில் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் எப்போதும் ஐஸ் கட்டிகளை நேரடியாக முகத்தில் தடவ கூடாது. ஒரு காட்டன் துணியில் சுற்றி தான் பயன்படுத்த வேண்டும்.

2. ஐஸ் கட்டி பேஷியல் செய்யும் முன் முகத்தில் உள்ள மேக்கபை நீக்கி விட வேண்டும். முகம் தூய்மையாக இருக்க வேண்டும்.

3. தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு மேலாக ஐஸ் கட்டிகளை ஒரே இடத்தில் வைக்க கூடாது.

4. கண்களை சுற்றி ஐஸ் பேஷியல் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஐஸ் கட்டியில் வேறு ஏதும் மூலிகை இருந்தால் அவை கண்களுக்குள் செல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.

5. வட்ட வட்டமாக மசாஜ் செய்யுங்கள்.

6. ஐஸ் கட்டி பேஷியலை 10-15 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து செய்வதை தவிர்க்க வேண்டும். நல்ல மாற்றத்திற்கு இந்த பேஷியலை மாலை அல்லது காலை செய்து பாருங்கள்.

ஐஸ் கட்டி பேஷியல் எளிதானது மற்றும் சருமத்திற்கு ஏற்றது. ஆனாலும் நீங்கள் இதை தொடர்ந்து செய்து வந்தால் தான் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்களும் ஐஸ் கட்டி பேஷியல் செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த ஐஸ் பேஷியலை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ice Cube On Face: 15 Amazing Beauty Benefits

Rubbing ice on your face after a hectic day is exceptionally refreshing. If everyday stress is taking a toll on your face and skin, ice can help.
Desktop Bottom Promotion