For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரைமணி நேரத்தில் உங்களை கலராக்கும் அரிசிமாவும் தயிரும்... எப்படின்னு இந்த விடியோவை பாருங்க...

அரிசி மாவு உங்களை மிரள வைக்கும் பல நன்மைகளை சருமத்துக்குக் கொடுக்கும். குறிப்பாக, உடனடி சிகப்பழகு பெற இது பெரிதும் உதவுகிறது.

|

நாள் முழுக்க வெளியில் அலைந்து விட்டு, வீட்டுக்குள் வந்ததுத் கண்ணாாடியைப் பார்த்தால் நமக்கே நம்முடைய முகத்தைப் பார்க்கப் பிடிக்காது. ஏனென்றால், வெயில், மாசு, தூசிகள் என முகம் அழுக்கு படிந்து, கருமையாகத் தோற்றமளிகும். இப்படி இருக்கும் முகத்தை பார்த்தால் மனதில் புத்துணர்வு எப்படி உண்டாகும். எந்த வுலையும் செய்யத் தோன்றாது. இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கும் இருக்கா?... இத எப்படிதான் சரி பண்றது?...

beauty

மூஞ்சிய தூக்கி வெச்சிக்கிட்டு கவலைப்பட்டுகிட்டு உட்கார்ந்திருக்காம, மொதல்ல கிச்சனுக்குள்ள போங்க... பத்தே நிமிஷத்துல உங்க முகம் பளபளக்கும் வித்தை அங்கே தான் இருக்கிறது. ஆமாங்க... உடனடியாக முகத்தை கலராக்கும் ஒரு பொக்கிஷம் இங்கே தான் இருக்கிறது. அது தான் அரிசி மாவு. ஆமாங்க அரிசி மாவு முகத்தில் அப்ளை செய்தால், உடனடி கலர் கிடைக்கும். சருமம் பளபளக்கும். அந்த அரிசி மாவை எந்தெந்த பொருள்களோடு கலந்து பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயன்கள்

பயன்கள்

முகம் பளபளப்பாக இருந்தாலே மன அழுத்தங்கள் நம்மை விட்டு வெகுதூரம் ஓடிப்போய் விடும்.

தூசிகளால் சருமத்துளைகளுக்குள் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றுகிற மிகச்சிறந்த ஸ்கிரப்பாக அரிசி மாவு பயன்படுகிறது.

விசேஷங்களுக்கு செல்லும் போது முகத்தில் தடவுகிற பவுண்டேஷன் உங்கள் சருமத்துக்கு கொடுக்கும் பளபளப்பை உடனடியாக அரிசி மாவு உங்கள் சருமத்துக்குக் கொடுக்கும்.

முகத்தின் நிறம் உடனடியாக அதிகரிக்கும். ஆம். அரிசி மாவு நிச்சயம் உங்கள் சருமத்தி்ல மிகப்பெரிய மேஜிக்கை செய்யும்.

அரிசி மாவு பேஸ்ட்

அரிசி மாவு பேஸ்ட்

அரிசி மாவு என்பது பெரிதாக ஒன்றும் சிரமப்பட வேண்டிய விஷயமல்ல. வேகவைக்காத பச்சரிசியை நன்கு நைசாக அரைத்துப் பயன்படுத்துவது தான் அரிசி மாவு. அதை பேஸ்டாக்குவதற்கு சிறிது தண்ணீரோ அல்லது சிறிது பாலோ சேர்த்துக் கொள்ளலாம்.

அரிசி கழுவிய நீர்

அரிசி கழுவிய நீர்

அதேபோல், அரிசியை கழுவிய நீர் இருக்கிறதல்லவா அது அழுக்கு என்று மட்டும் கீழே கொட்டிவிடாதீர்கள். அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அந்த நீரைக் கொண்டு முகம் கழுவலாம். குளிக்கும் தண்ணீரோடு சேர்த்து, வெதுவெதுப்பாக சூடேற்றி குளிக்கவும் பயன்படுத்தலாம்.

எப்படி சருமம் கலராகிறது?

எப்படி சருமம் கலராகிறது?

நாம் போடாத விலையுயர்ந்த க்ரீம்கள் இல்லை. வீட்டு வைத்தியமும் செய்து பார்த்தாச்சு. அதப்படி அரிசி மாவு மட்டும் உடனடியாக சருமத்தைக் கலராக்கும் என்று தானே கேட்கிறீர்கள். இது எப்படி என்று பார்ப்போம்.

அரிசி மாவில் மிக அதிக அளவில் பாரா அமினோ பென்சோயிக் அமிலம் இருக்கிறது. இது மிகச்சிறந்த சன் ஸ்கிரீனா நம்முடைய சருமத்துக்குப் பயன்படுகிறது. இந்த அமிலம் நம்முடைய உடலில் வைட்டமின் சி யை அதிகப்படுத்தும்.

அதேபோல், ஃபெருலிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. இது சூரிய கதிர்களிடம் இருந்து நம்முடைய சருமத்தைக் காப்பாற்றும். வைட்டமின் சி மற்றும் ஈ செய்யும் இரண்டு வேலையையும் சேர்த்து இந்த அரிசி மாவு நமக்கு செய்கிறது. அதாவது ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.

இதிலுள்ள வைட்டமின் பி சருமத்தை எளிதில் வயதான தோற்றத்தைக் கொடுக்காமல் பாதுகாக்கிறது.

எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

சருமத்தைக் கலராக்க உதவும் இந்த அரிசி மாவை எப்படியெல்லாம் எந்ததெந்த பொருள்களோடு சேர்த்துப் பயன்படுத்தலாம்?

குறிப்பாக, அரிசி மாவை பால், உருளைக்கிழங்கு, தயிர், மஞ்சள், தேன், கற்றாழை, முட்டை ஆகியவற்றுாடு சேர்த்துப் பயன்படுத்தும்போது மிகச் சிறந்த பலனை, உடனை ரிசல்ட்டைப் பெற முடியும்.

அரிசிமாவும் பயத்த மாவும்

அரிசிமாவும் பயத்த மாவும்

அரிசி மாவையும் பயத்த மாவையும் சேர்த்து பயன்படுத்தும் போது உங்களுக்குப் பலன் இரட்டிப்பாகும். பயத்த மாவு சருமத்தை பட்டுப் போல் மென்மையாக்கும்.

தேவையான பொருள்கள்

அரிசி மாவு - 2 ஸ்பூன்

பயத்த மாவு - 1 ஸ்பூன்

மஞ்சள் - சிறிதளவு

தயிர் - 2 ஸ்பூன்

செய்முறை

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருள்களையும் ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, நன்கு மை போல பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். பின்பு அதை முகத்தில் புருவம், கண்ணிமைகள், உதடு ஆகிய இடங்களை விட்டு விட்டு கழுத்து வரை அப்ளை செய்யுங்கள்.

சில நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து விட்டு, பத்து நிமிடம் வரை உலர விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் போகும். உடனடியாக உங்கள் முகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

அரிசி மாவும் கற்றாழையும்

அரிசி மாவும் கற்றாழையும்

கற்றாழை முகம், தலைமுடி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடியது என்பது நம் எல்லோருக்குமே தெரியும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவை முகத்துக்கு ஈரப்பதத்தையும் புத்துணர்ச்சியையும் தரக்கூடியது. அதை அரிசி மாவோடு கலந்து எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்

அரிசி மாவு - 2 ஸ்பூன்

செய்முறை

கற்றாழை ஜெல், அரிசி மாவு இரண்டையும் ஒரு பௌலில் போட்டுக் கொண்டு, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளுங்கள். அந்த கலவையை முகத்தில் தடவி, வட்ட வடிவில் சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்து விடுங்கள்.

பின்பு 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டு, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

அரிசி மாவும் பாலும்

அரிசி மாவும் பாலும்

பால் மிகச்சிறந்த கிளன்சராக சருமத்தில் செயல்படுகிறது. அதோடு சருமத் துளைகளுக்குள் தங்கியிருக்கும் அழுக்குகளை நீக்கி, முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றைப் போக்குவதில் பால் மிக முக்கியப் பங்காற்றுகிறது. அதை அரிசி மாவோடு எப்படி பயன்படுத்தலாம்?

தேவையான பொருள்கள்

அரிசி மாவு - 2 ஸ்பூன்

காய்ச்சாத பால் - 4 ஸ்பூன்

தேன் - 1 ஸ்பூன்

செய்முறை

அரிசி மாவு, பால், தேன் ஆகியவற்றை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு நன்கு கட்டியில்லாமல் கலக்குங்கள். இந்த அரிசி மாவு கடைகளில் வாங்குவதற்கு பதிலாக, வீட்டிலேயே கூட அரிசியை மிக்சியில் போட்டு அரைத்தும் பயன்படுத்தலாம்.

கொஞ்சம் திக்கான பேஸ்ட்டாக கிடைக்கும். அதில் மேலும் சில துளிகள் பால் விட்டு கலக்குங்கள். ஏனெனில் அரிசி மாவு பாலை நன்கு உறிஞ்சுக் கொள்ளும்.

இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் ரப் செய்து தேயுங்கள். 20 நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே வைத்திருங்கள். பின் நன்கு உலர்ந்த பின் கழுவி விட்டால் போதும். முகம் பட்டுப்போல மென்மையாகிவிடும். கலரும் கூடியிருப்பதை உங்களால் நன்கு உணர முடியும்.

அரிசி மாவும் முட்டை வெள்ளைக்கருவும்

அரிசி மாவும் முட்டை வெள்ளைக்கருவும்

அரிசி மாவு மட்டும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்த கலவை முகத்தில் உள்ள தளர்ந்து போயிருக்கும் தசைகளையும் இருக்கமாகச் செய்யும். இதனால் சருமத்தை வயதான தோற்றத்தை தவிர்த்து இளமையாக வைத்திருக்க முடியும். அதிகப்படியான மெலனின் சுரப்பை தடுக்கிறது. மெலனின் அதிகமாக சுரப்பதால் தான் சருமம் கருமையடைகிறது.

தேவையான பொருள்கள்

அரிசி மாவு - 3 ஸ்பூன்

தேன் - 1 ஸ்பூன்

முட்டை வெள்ளைக்கரு - 1

செய்முறை

மேலே கூறப்பட்டுள்ள பொருள்களை ஒரு பௌலில் நன்கு கலந்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அவற்றை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அக்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பின்னர் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். நன்கு உலர்ந்த பின்பு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு, முகத்தை கழுவுங்கள். இதை வாரத்துக்கு மூன்று முறை செய்து வந்தால் போதும், செக்க சிவந்த முகத்தை பெறலாம்.

அரிசி மாவும் தயிரும்

அரிசி மாவும் தயிரும்

அரிசி மாவு மற்றும் தயிர் இரண்டுமே சருமத்துக்கு பிளீச்சாகப் பயன்படுகிறது. இது சருமத்தின் நிறத்தை மெருகூட்டுகிறது. தயிர் சருமத்துக்கு சிறந்த மாய்ச்சரைஸராகவும் பயன்படுகிறது.

தேவையான பொருள்கள்

அரிசி மாவு - 1 ஸ்பூன்

தயிர் - 1 ஸ்பூன்

செய்முறை

அரிசி மாவு மற்றும் தயிர் இரண்டையும் ஒரு பௌலில் போட்டு, கட்டியில்லாமல் நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதை புருவம், கண்களைச் சுற்றி, உதட்டுப் பகுதியைத் தவிர்த்து மற்ற இடங்களில் கழுத்து வரையிலும் அப்ளை செய்யுங்கள்.

பின்பு 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டுவிடுங்ககள். நனகு உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி விட்டு உங்களுடைய முகத்தை நீங்களு கண்ணாடியில் பாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். முகம் புத்துணர்வோடு கூடுதல் நிறமும் பெற்றிருப்பதை உணர்வீர்கள். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்து பாருங்கள். சூப்பர் ரிசல்ட் கிடைக்கும் உங்களுக்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Use Rice Powder for Skin Whitening and Fairness

miraculous benefits of rice powder and how it can be used to achieve a fairer looking skin in no time. It is cloudy in appearance and is extremely beneficial for skin.
Desktop Bottom Promotion