For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த தழும்புகளைப் போக்கும் ஒரு அதிசயப் பொருள் இதுதான்... ட்ரை பண்ணி பாருங்க...

ஸ்ட்ரெச் மார்க்ஸ் என்பது பெரும்பாலும் தாய்மை அடைந்த பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் ஒரு தொந்தரவு என்பது மறைந்து இன்று எல்லா வயதினருக்கும் ஆண் பெண் பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் ஒரு தொந்தரவாக உள்ளது.

|

ஸ்ட்ரெச் மார்க்ஸ் என்பது பெரும்பாலும் தாய்மை அடைந்த பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் ஒரு தொந்தரவு என்பது மறைந்து இன்று எல்லா வயதினருக்கும் ஆண் பெண் பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் ஒரு தொந்தரவாக உள்ளது. ஸ்ட்ரெச் மார்க்ஸ் என்பது தோல் விரிவடையும் போது உடலில் ஏற்படும் சிறு சிறு கோடுகள் ஆகும். இதனால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. வலியும் இருக்காது. ஆனால் சமூகத்தில் ஒரு வித தர்மசங்கடத்தை தோற்றுவிக்கும் வகையில் சருமத்தின் வெளிப்புறமாக இந்த மார்க்ஸ் தோன்றுவது ஒரு சிலருக்கு பிடிப்பதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ட்ரெச் மார்க்

ஸ்ட்ரெச் மார்க்

இந்த ஸ்ட்ரெச் மார்க்சை போக்க முந்தைய காலங்களில் இயற்கை வழிமுறைகள் மட்டுமே பின்பற்றப்பட்டது. அல்லது இதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதவர்களும் அந்நாட்களில் உண்டு. ஆனால் இன்று பல ஒப்பனை சிகிச்சைகள், லேசர் சிகிச்சைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஸ்ட்ரெச் மார்க்சை போக்கலாம். ஆனால் இவை மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது மற்றும் இதனால் சருமத்தில் பல எதிர்மறை விளைவுகளும் உண்டாகலாம்.

ஆனால் இத்தகைய விலை உயர்ந்த செயற்கை முறை சிகிச்சைகள் மட்டுமில்லாமல், பல இயற்கை மூலபொருட்கள் மூலமாகவும் இந்த ஸ்ட்ரெச் மார்க்சை போக்கலாம். சருமம் விரிவடைவதைப் போக்கி, இறுக்கமான சருமம் பெற ஒரு முக்கிய மூலப்பொருள் உண்டு. இதனை தினமும் நம் அன்றாட வாழ்வில் பல செயல்களுக்கு பயன்படுத்தி வருகிறோம். அது என்ன வென்றால் காபி. காபி மூலம் ஸ்ட்ரெச் மார்க்சைப் போக்கி சருமம் இழந்த அழகை மீண்டும் பெறலாம்.

காபி

காபி

காபியில் உள்ள காபின், ஸ்ட்ரெச் மார்க்சை முற்றிலும் போக்க பெரிதும் பயன்படுகிறது. சருமத்தை இறுக்கமாக வைக்கும் தன்மை காபினில் உள்ளது. ஆகையால் இந்த தன்மை மூலம் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து ஸ்ட்ரெச் மார்க்சை வலுவிழக்கச் செய்கிறது.

காபி பயன்படுத்தி ஸ்ட்ரெச் மார்க்சைப் போக்குவதற்கான சில சிறந்த வழிகளை இங்கே உங்களுக்காக நாங்கள் கொடுத்திருக்கிறோம். மிகவும் எளிய முறையயில் , வீட்டிலேயே இந்த முறைகளைப் பின்பற்றி ஸ்ட்ரெச் மார்க்சைப் போக்கலாம். தொடர்ந்து படித்து இதன் வழிமுறைகளை அறிந்திடுங்கள்..

காபி மற்றும் கொக்கோ பட்டர்

காபி மற்றும் கொக்கோ பட்டர்

கொக்கோ பட்டர் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தந்து நீர்ச்சத்தோடு வைக்க உதவுகிறது, மற்றும் காபி சருமத்தை இறுக்கமாக வைக்க உதவுகிறது. இவை இரண்டையும் ஒருங்கிணைத்து பயன்படுத்துவதால், ஸ்ட்ரெச் மார்க்ஸ் எளிதில் மறைகிறது.

செய்முறை

அரைத்த காபி கொட்டைகள் ஒரு ஸ்பூன் மற்றும் ஒரு ஸ்பூன் கரைய வைத்த கொக்கோ பட்டரை கலந்து கொள்ளவும். இந்த கலவையை மார்க்ஸ் உள்ள இடத்தில் தடவவும். தடவியபின், அந்த இடத்தை மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த பேஸ்டை மூன்று அல்லது நான்கு முறை தடவி இதே வழிமுறையை பின்பற்றுவதன் மூலம் நல்ல தீர்வைக் காணலாம்.

காபி, பாதாம்பவுடர் மற்றும் தேங்காய் எண்ணெய்

காபி, பாதாம்பவுடர் மற்றும் தேங்காய் எண்ணெய்

மேலே கூறிய பொருட்களால் செய்யப்படும் கலவை ஒரு ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை தந்து சருமத்தில் உள்ள ஸ்ட்ரெச் மார்க்சை சிறந்த வழியில் நீக்குகிறது.

செய்முறை

1 ஸ்பூன் அளவுக்கு காபி கொட்டைகளை அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 1/2 ஸ்பூன் பாதாம் பவுடர் மற்றும் 2-3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

ஸ்ட்ரெச் மார்க்ஸ் உள்ள இடத்தில் இந்த கலவையை தடவவும். 10 நிமிடங்கள் அந்த இடத்தை ஸ்க்ரப் செய்யவும். மேலும் 20 நிமிடங்கள் இந்த கலவை அந்த பகுதியில் இருக்கட்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.சிறந்த தீர்வுகளுக்கு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றவும்.

காபி, ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

காபி, ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச். ஆலிவ் எண்ணெயில் சக்தி மிகுந்த அன்டி ஆக்சிடென்ட் பல உள்ளன. இத்தகைய பொருட்களுடன் காபியின் நன்மைகளும் சேரும்போது ஸ்ட்ரெச் மார்க்ஸ் எளிதாக மறைகிறது.

செய்முறை

காபி கொட்டைகள் 1 ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் மற்றும் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு போன்றவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்டை ஸ்ட்ரெச் மார்க்ஸ் உள்ள இடத்தில் தடவவும். 10 நிமிடங்கள் நன்றாக் ஸ்க்ரப் செய்யவும். 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இந்த முறையைப் பின்பற்றுவதால், சிறந்த தீர்வுகள் கிடைக்கும்.

காபி, ஷியா பட்டர் மற்றும் விளக்கெண்ணெய்

காபி, ஷியா பட்டர் மற்றும் விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் சருமத்தால் எளிதில் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது. இதனால் சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்கிறது. ஷியா பட்டர் மற்றும் காபி, ஸ்ட்ரெச் மார்க்சை அழிக்கிறது . இந்த கலவை நல்ல முறையில் ஸ்ட்ரெச் மார்க்சைப் போக்கி சரும தோற்றத்தை அழகாக்குகிறது.

செய்முறை :

1 ஸ்பூன் காபி தூள், 1 ஸ்பூன் கரைய வைத்த ஷியா பட்டர், மற்றும் 4-5 துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருக்கும் இடங்களில் தடவவும். 5-10 நிமிடங்கள் அந்த இடங்களை மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். அடுத்த 20 நிமிடங்கள் சருமத்தில் அந்த கலவையை அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்துவதால் ஸ்ட்ரெச் மார்க்ஸ் எளிதில் மறைகிறது.

காபி மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய்

காபி மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய்

காபியில் உள்ள காபின் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெயின் கலவை ஸ்ட்ரெச் மார்க்சை எளிதில் மறைய உதவுகிறது.

செய்முறை

1 ஸ்பூன் காபி தூளுடன், வைட்டமின் ஈ மாத்திரையை உடைத்து அதில் உள்ள எண்ணெய்யை எடுத்துக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவவும். சில நிமிடங்கள் அந்த இடத்தில் மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். ஒரு வாரத்தில் பல முறை இதனை பின்பற்றுவதால் எளிதில் சிறந்த தீர்வுகளைக் காணலாம்.

மேலே கூறிய முறைகளில் காபி கொட்டைகளுடன் சேர்த்து செய்த எந்த ஒரு கலவையும் ஸ்ட்ரெச் மார்க்சைப் போக்க நல்ல முறையில் பயன்படுகிறது . நீங்களும் இதனைப் பின்பற்றி நல்ல பலன் பெறுங்கள். உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Coffee To Get Rid Of Stretch Marks

Stretch marks can develop on your skin if you undergo rapid weight gain, weight loss, or especially during a pregnancy.
Desktop Bottom Promotion