Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
அடிக்கடி மூக்குமேல இப்படி அசிங்கமா பரு வருதா?... இத மட்டும் தடவுங்க உடனே அமுங்கிடும்...
மூக்கு மேல் வரும் பருவை எப்படி போக்குவது, பருவை போக்க வீட்டு வைத்தியம், அழகுக் குறிப்புகள், சருமப் பராமரிப்பு குறிப்புகள்
மூக்கில் மட்டும் பரு வந்துட்டா போதும் நம்ம முகழகையும் சேர்த்து கெடுத்து விடும். அதே மாதிரி அவ்வளவு சீக்கிரம் அது போகவும் போகாது. வலி மிகுந்ததாக இருந்து வேற நமக்கு தொல்லையும் கொடுக்கும்.

ஏன் அடிக்கடி மூக்கில் பருக்கள் ஏற்படுகிறது எனத் தெரியுமா? மூக்கில் இருக்கும் சரும துளைகள் அளவில் ரெம்ப பெரியதாக இருக்கும். எனவே சீக்கிரம் எளிதாக மாசுக்களால் அடைபடுவதால் அந்த பகுதியில் அடிக்கடி முகப்பரு ஏற்படுகிறது. எனவே இப்படி மூக்கில் இருக்கும் அசிங்கமான பருக்களை சில வீட்டு முறைகளைக் கொண்டு போக்கிடலாம்.

மாசு மருவற்ற சருமம்
உங்களது முகத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது மைல்டு சோப்பு கொண்டு முகத்தை கழுவுங்கள். அதிகமான மேக்கப் பவுடர்கள் உங்கள் சரும துவாரங்களை அடைத்து விடும். எனவே படுப்பதற்கு முன் உங்கள் மேக்கப்பை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். மூக்கில் முகப்பரு ஏற்பட்டால் அதை கீறுவதோ, கிள்ளுவதோ கூடாது. அது பிரச்சினையை இன்னும் பெரிதாக்கி விடும்.

லெமன் ஜூஸ்
லெமன் ஜூஸின் அமிலத் தன்மை பருக்களை சுருக்கி சில மணி நேரத்திற்குள் பிரச்சினையை சரி செய்ய ஆரம்பித்து விடும்.
பயன்படுத்தும் முறை
ஒரு பெளலை எடுத்து அதில் லெமன் ஜூஸை பிழிந்து ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து கொள்ளுங்கள். இப்பொழுது அந்த பஞ்சை மூக்கின் மேல் உள்ள பருவின் மேல் வையுங்கள். 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பிறகு சுத்தமான நீர் கொண்டு முகத்தை கழுவி விடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை என செய்து வந்தால் பருக்கள் காணாமல் போய்விடும்.
குறிப்பு : சூரிய ஒளியில் வெளியே செல்வதற்குள் லெமன் ஜூஸை கழுவி விடுங்கள்.

டி ட்ரீ ஆயில்
ரெம்ப மோசமான நிலையில் உள்ள பருக்களை நீக்க கூட டி ட்ரீ ஆயில் பயன்படுகிறது இதற்கு ஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல், மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. சிவந்த வீக்கத்துடன் காணப்படும் பருக்களின் வீரியத்தை குறைக்கிறது. பருக்கள் இருந்த தழும்பை கூட நீக்கி முகழகை காக்கிறது.
பயன்படுத்தும் முறை
சில சொட்டுகள் டி ட்ரீ ஆயிலை பருக்களின் மீது தடவவும். 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு தண்ணீரில் கழுவவும். 2-3 முறை இதை தினமும் செய்யவும்.
குறிப்பு
சென்ஸ்டிவ் சருமம் உடையவர்கள் டி ட்ரீ ஆயிலை அப்படியே பயன்படுத்தாமல் மற்ற எண்ணெய்யுடன் கலந்து கொண்டு பயன்படுத்துங்கள்.

வொயிட் டூத் பேஸ்ட்
டூத் பேஸ்ட்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை பருக்களுக்கு காரணமான கிருமிகளை அழிக்கிறது. எனவே உங்கள் வீட்டில் இருக்கும் பற்பசையே போதும் பருக்களை நீக்க.
பயன்படுத்தும் முறை
கொஞ்சம் அளவு டூத் பேஸ்ட்டை எடுத்து பருக்களின் மீது தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு பிறகு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.
குறிப்பு
வொயிட் டூத் பேஸ்ட்டை மட்டும் பயன்படுத்துங்கள். ஜெல் வகை டூத் பேஸ்ட் வேண்டாம்.

ஐஸ் பேக்
ஐஸ் ஒத்தடம் முகத்தில் உள்ள துளைகளை மூடச் செய்து எண்ணெய் வடிவதை தடுத்து பருக்கள் உருவாகுவதை தடுக்கிறது. அதே மாதிரி பருக்களின் வீக்கம் மற்றும் அளவை குறைக்கிறது. பருக்களால் ஏற்படும் வலியை குறைக்கிறது.
பயன்படுத்தும் முறை
ஒரு துணியில் சில ஐஸ் கட்டிகளை எடுத்து கொள்ளுங்கள். இதை அப்படியே உங்கள் மூக்கின் மேல் வைத்து ஒத்தடம் கொடுங்கள். 20 நிமிடங்கள் இப்படி வைக்க வேண்டும். தேவையென்றால் திரும்பவும் செய்து கொள்ளுங்கள்.

லிஸ்ட்ரைன் மவுத் வாஷ்
இந்த முறை பருக்களை விரைவாக நீக்க பயன்படுகிறது. லிஸ்ட்ரைன் மவுத் வாஷ் பருக்களுக்கு காரணமான பாக்டீரியாவை அழிக்கிறது. எனவே மூக்கில் ஏற்படும் பருக்களை தடுத்து சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
இந்த மவுத் வாஷ் கடைகளில் எளிதாக கிடைக்கும் பொருள். ஒரு காட்டன் பஞ்சில் சில துளிகள் லிஸ்ட்ரைன் மவுத் வாஷ் ஊற்றி பருக்களின் மீது ஒத்தி எடுங்கள். பிறகு 10 நிமிடங்கள் கழித்து நீரைக் கொண்டு கழுவுங்கள். இதை அப்படியே ஒரு நாளைக்கு 2-3 முறை செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
