Just In
- 7 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 9 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 11 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
- 12 hrs ago
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
Don't Miss
- News
எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி
- Finance
நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முகம் பளபளன்னு ஆகணுமா..? அப்போ திராட்சையை இப்படி பயன்படுத்தி பாருங்க...
நாம்ம இதுவரைக்கும் திராட்சையை சாப்பிடுறதுக்கு மட்டுந்தான் பயன்படுத்துவோம், ஆனால், திராட்சையை இன்னும் பல வழிகளில் பயன்படுத்தலாம். உங்களின் முக அழகை இரட்டிப்பாக்கவும் முகத்தின் கருமை, முகப்பருக்கள், முக வறட்சி போன்ற பல பிரச்சினைகளை இந்த திராட்சை சரி செய்கிறது.
திராட்சையை வைத்து செய்ய கூடிய பலவித குறிப்புகளை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அதில் கிடைக்கும் பலன்கள் ஏராளனம். வாங்க, எப்படியெல்லாம் இந்த முக அழகை பெற முடியும்னு தெரிஞ்சிக்கலாம்.

பருக்கள் மறைய
முகம் முழுவதும் ஒரே பருக்கலா இருக்கா..? இதனால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா..? இனி இந்த கவலையை போக்கவே இந்த டிப்ஸ் உள்ளது. இதற்கு தேவையானவை...
யோகர்ட் 1 ஸ்பூன்
4 திராட்சை
எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் திராட்சையுடன் யோகர்ட் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அதன் பின் இதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இந்த குறிப்பை தொடர்ந்து செய்து வருவதால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, பொலிவான முகத்தை பெறலாம்.

பளபளப்பான முகத்திற்கு
முகம் எப்போதும் தங்கம் போல மின்ன வேண்டுமா..? அப்போ இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்க...
தேவையானவை :-
முல்தானி மட்டி 1 ஸ்பூன்
பன்னீர் 1 ஸ்பூன்
திராட்சை 4
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் திராட்சையை அரைத்து கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறு, பன்னீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை முல்தானி மட்டியுடன் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த குறிப்பு உங்கள் முகத்தை பளபளவென மாற்றும்.
MOST READ: சித்தர்களை போல நீண்ட ஆயுளுடன் வாழணுமா..? அப்போ இத சாப்பிடுங்க போதும்..!

சுருக்கங்களை போக்குவதற்கு
முகத்தை மிக விரைவிலே வயதானவரை போன்று காட்டுவதே இந்த சுருக்கங்கள் தான். உங்கள் முகமும் இது போன்று அதிக சுருக்கங்களுடன் இருந்தால் உங்களுக்கான டிப்ஸ் இதோ...
தேவையானவை :-
தக்காளி 1
திராட்சை 8

செய்முறை :-
தக்காளியை முதலில் நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து, இதனுடன் சேர்த்து திராட்சையையும் அரைத்து முகத்தில் தடவி கொள்ள வேண்டும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.

முக வறட்சியை போக்க
உங்கள் முகம் வறண்டு காணப்படுகிறதா..? இதனால் சொரசொரப்பான சருமமாக உள்ளதா..? இனி இதனை சரி செய்ய இந்த டிப்ஸ் போதும். இதற்கு தேவையானவை...
பப்பாளி ஜுஸ் 1 ஸ்பூன்
திராட்சை 4
தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-
திராட்சை மற்றும் பாப்பாளியை நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தேன் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முக வறட்சி நீங்கி, என்றும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
MOST READ: காரசார உணவுகளை அதிகம் சாப்பிட்டால் பீமனை போன்று பலம் பெறலாமாம்..!