For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஞ்சறை பெட்டியில் உள்ள பொருட்களை வைத்து வழுக்கையை சரி செய்வது எப்படி..?

|

ஒவ்வொரு உணவு பொருளுக்குள்ளும் பலவித பயன்கள் இருக்கத்தான் செய்யும். உடல் ஆரோக்கியம், மன நலம், முக ஆரோக்கியம் மற்றும் முடியின் ஆரோக்கியம் ஆகிய எண்ணற்ற வகையில் இவற்றின் பயன்கள் இருக்கும். ஒரு சில உணவு பொருட்கள் மட்டும் தான் முகத்தில் இருக்க கூடிய பருக்கள், கரும்புள்ளிகள், முக சொர சொரப்புகள், கருமை ஆகியவற்றை குணப்படுத்த கூடும்.

How Does Spices Improves Your Beauty

அந்த வகையில் நம் அஞ்சறை பெட்டியிலுள்ள சில பொருட்கள் பயன்படுகிறது. இவை முகத்தில் உள்ள பிரச்சினைகளை ஒரு வாரத்திற்குள்ளே குணப்படுத்தி விடும். எப்படி இந்த உணவு பொருட்கள் இவ்வளவு மூலிகை தன்மை கொண்டுள்ளது என்பதையும்... எவ்வாறு நமது முக பிரச்சினைகளை தீர்ப்பது என்பதையும் இனி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பருக்களை போக்க...

பருக்களை போக்க...

முகத்தில் உள்ள பருக்களை முழுவதுமாக விரட்டி அடிக்க ஒரு அற்புதமான வழி உள்ளது. அதுவும் நம் வீட்டு அஞ்சறை பெட்டி பொருளில் இருந்தே நாம் இதை செய்யலாம். இதற்கு தேவையானவை...

யோகர்ட் 1 ஸ்பூன்

கருப்பு மிளகு தூள்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் மிளகு தூளை யோகர்டுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இதனை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, பருக்கள் முழுவதையும் நீக்கி விடும்.

கண்ணின் பிரச்சினைக்கு

கண்ணின் பிரச்சினைக்கு

நாள் முழுக்க லேப்டாப்பிலே வேல செஞ்சு கண்ணுலா எரியுதா..? அதோடு சேர்த்து கண்ணு வீக்கமாவும் இருக்கா..? இனி இதற்கு சரியான தீர்வு கொத்தமல்லி விதைகள் தான். கொத்தமல்லியை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை கண்ணில் விட்டு கொள்ளுங்கள். மேலும், சிறிது ஒத்தடமும் கொடுங்கள். இவ்வாறு செய்வதால் கண் எரிச்சல், கண் மங்கிய தன்மை குணமாகி விடும்.

முகம் மினுமினுக்க

முகம் மினுமினுக்க

முகம் பளபளவென மின்ன, ஒரு எளிய வழி உள்ளது. இதற்கு தேவையானவை...

மஞ்சள் 2 ஸ்பூன்

தேன் 2 ஸ்பூன்

Most Read: தினமும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிடுவதால் உடலில் ஏற்பட கூடிய மாற்றங்கள் என்னென்ன..?

செய்முறை :-

செய்முறை :-

மஞ்சளை தேனுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். மஞ்சளில் உள்ள அந்தோ ஆக்சிடன்ட்ஸ் மற்றும் பொலிவு தரும் தன்மை உங்களை பளபளவென மாற்றும். அத்துடன் தேன் உங்களின் முகத்தை வெண்மையாக ஆக்கும்.

ஜாதிக்காய் முறை...

ஜாதிக்காய் முறை...

முகம் என்றுமே பொலிவுடன் அழகாக இருக்க ஜாதிக்காய் குறிப்பு போதும். இதனை தயாரிக்க தேவையானவை...

ஜாதிக்காய் பொடி அரை ஸ்பூன்

பால் 1 ஸ்பூன்

தேன் அரை ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

ஜாதிக்காய் பொடியுடன் பால் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு முகத்தில் பூசவும். 15 நிமிடம் சென்று வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்து எந்தவித பிரச்சினைகளையும் ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.

வழுக்கை பிரச்சினைக்கு

வழுக்கை பிரச்சினைக்கு

முடி அதிகமாக உதிர்ந்து வழுக்கை விழுந்துள்ளதா..?இதற்காக ஏதேதோ செய்ய வேண்டாம். வெறும் பூண்டை வைத்தே நம்மால் எளிதாக இதற்கு தீர்வு தர முடியும்.

தேவையானவை...

பூண்டு 3 பல்

ஆலிவ் எண்ணெய் அரை கப்

Most Read: இந்த 5 ராசிக்காரர்களை புரிந்துகொண்டு அவர்களுடன் காலம் நடத்துவது என்பது ரொம்ப கஷ்டமப்பா

செய்முறை :-

செய்முறை :-

பூண்டை சிறிது சிறிதாக நறுக்கி கொண்டு ஒரு பாட்டிலுக்குள் போட்டு கொள்ளவும். அடுத்து பூண்டு மூழ்கும் வரை ஆலிவ் எண்ணெய்யை ஊற்றி கொண்டு 10 நாட்கள் ஊற வைத்து அதன்பின் தலைக்கு பயன்படுத்தலாம். அத்துடன் நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊறிய பிறகு தலைக்கு குளிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Does Spices Improves Your Beauty

Here we list some beauty benefits of spices.
Story first published: Saturday, December 22, 2018, 16:45 [IST]
Desktop Bottom Promotion