For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரெண்டே நாளில் சருமத்தை கலராக்கும் மைசூர் பருப்பு... எப்படி அப்ளை பண்ணணும் பார்க்கலாம் வாங்க...

மைசூர் பருப்பு சாம்பார் பலரின் நாவிற்கு சுவை சேர்க்கும் ஒரு உணவாகும். இந்த மந்திர மூலப்பொருள் புரதம், பலவகை வைட்டமின் மற்றும் மினரல்கள் ஆகியவற்றை தன்னுள் கொண்டது.

|

மைசூர் பருப்பு சாம்பார் பலரின் நாவிற்கு சுவை சேர்க்கும் ஒரு உணவாகும். இந்த மந்திர மூலப்பொருள் புரதம், பலவகை வைட்டமின் மற்றும் மினரல்கள் ஆகியவற்றை தன்னுள் கொண்டது. இவை அனைத்தும் சருமத்திற்கும் தேவையான ஊட்டச்சத்தாகும். சரும நிறமிழப்பு, பரு, சுருக்கம், கருவளையம் என்று பல்வேறு வகையான சரும பிரச்சனைக்கும் இந்த மைசூர் பருப்பு சிறந்த ஒரு தீர்வைத் தருகிறது.

beauty benefits of Masoor Dal in tamil

Image Courtesy

ஆனால் இந்த மைசூர் பருப்பை எப்படி சருமத்திற்கு பயன்படுத்துவது என்ற ஒரு கேள்வி எழும். இதனை ஒரு பேஸ்பேக்காக பயன்படுத்தலாம். மைசூர் பருப்பு பயன்படுத்தி சருமத்திற்கு எப்படி பொலிவை அதிகரிக்கலாம் என்பதை அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மைசூர் பருப்பு பயன்படுத்தி பொலிவான சருமம் பெற சில குறிப்புகள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மைசூர் பருப்பு மற்றும் பால்

மைசூர் பருப்பு மற்றும் பால்

எல்லா அழகுக் குறிப்புகளும் ஸ்க்ரப் செய்வதில் இருந்து தொடங்கப்படுகின்றன. வீட்டிலேயே மிக எளிதான முறையில் ஸ்க்ரப் செய்வது எப்படி என்பதை இப்போது அறிந்து கொள்வோம். உங்களுக்கு தேவையான பொருட்கள் பால் மற்றும் மைசூர் பருப்பு.

ஒரு ஸ்பூன் மைசூர் பருப்பை எடுத்து இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலை ஊறிய பருப்பை எடுத்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.

இந்த விழுதுடன் ஒரு ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த விழுதை உங்கள் சருமத்தில் தடவவும். இப்போது இந்த ஸ்க்ரப் தயார்.

இந்த ஸ்க்ரப் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை பொலிவாக்கி புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.

மைசூர் பருப்பு பேஸ் பேக் :

மைசூர் பருப்பு பேஸ் பேக் :

சரும நிறமிழப்பை கட்டுப்படுத்தி நிறத்தை மேம்படுத்த மைசூர் பருப்பு பேஸ் பேக் பயன்படுகிறது.

உங்கள் சருமத்தில் கருந்திட்டுக்கள் காணப்பட்டு சருமத்தின் நிறத்தில் சமச்சீரற்ற தன்மை உள்ளது உங்களுக்கு பிரச்சனையாக உள்ளதா? இதனை களைவதற்கு ஒரு எளிய தீர்வு உள்ளது. அதனை இப்போது பார்க்கலாம்.

மைசூர் பருப்பு தூள் மற்றும் தேன் இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொள்ளவும்.

இந்த பருப்பு தூளை முன்னர் கூறிய முறையில் தயாரிக்கலாம் அல்லது கடைகளில் கூட பருப்பு தூள் கிடைக்கிறது.

மைசூர் பருப்பு தூளுடன் சிறிதளவு தேன் சேர்த்து ஒரு அடர்ந்த கலவையை தயார் செய்து அதனை உங்கள் முகத்தில், கழுத்தில் மற்றும் நிறமிழப்பு உள்ள இடங்களில் தடவவும்.

காயும் வரை அப்படியே வைத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும்.

இயற்கை தீர்வுகள் மிக விரைவில் பலன் தராது. ஆனால் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் நிச்சயம் பலன் கிடைக்கும். எனவே, வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தி வரவும்.

பருக்களைப் போக்க

பருக்களைப் போக்க

பருக்களைப் போக்க நீங்கள் பயன்படுத்தும் வழக்கமான பேஸ் பேக்குடன் சேர்த்து மைசூர் பருப்பை உபயோகிக்கலாம். கடலை மாவு, தயிர், மற்றும் மஞ்சள் கலவை வழக்கமாக அனைவராலும் பின்பற்றப்படும் பருக்களைப் போக்கும் ரெசிபி ஆகும்.

இந்த விழுதுடன் சிறிதளவு மைசூர் பருப்பு விழுதை சேர்த்து உங்கள் முகத்தில் தடவவும். இந்த விழுது முகத்தில் காய்ந்தவுடன், கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த பேக்கை பயன்படுத்துவதால் பருக்கள் மறைந்து விடும்.

 பொலிவான சருமத்திற்கு

பொலிவான சருமத்திற்கு

சருமம் எந்த ஒரு களங்கமும் இல்லாமல் இருந்தபோதிலும், சோர்வாகவும் புத்துணர்ச்சி இல்லாமலும் இருக்கலாம். உங்கள் முகத்தை புகைப்படம் எடுத்தால் நீங்கள் இந்த உணர்வை பெறலாம். இதற்கான தீர்வு இதோ. இது மைசூர் பருப்பு பேஸ் மாஸ்க் ஆகும்.

100 கிராம் மைசூர் பருப்பை இரவு முழுவதும் பாலில் ஊறவைக்கவும்.

மறுநாள் காலை இந்த பருப்பை அரைத்து விழுதாக்கவும். இதனை உங்கள் முகத்தில் தடவவும்.

இருபது நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். உடனடியாக உங்கள் முகத்தில் ஒரு பொலிவைக் காணலாம். இப்போது புகைப்படம் எடுத்துப் பார்க்கும்போது உங்களால் ஒரு வித்தியாசத்தை உணர முடியும்.

இப்படி பல மந்திர மாற்றங்களை உங்கள் முகத்திற்குக் கொண்டு வரும் சக்தி மைசூர் பருப்பிற்கு உண்டு. இதேபோல் பல இயற்கை பொருட்கள் மூலம் உங்கள் முகத்தை மேலும் பொலிவாகவும் அழகாகவும் மாற்றலாம். முயற்சி செய்து பாருங்கள். நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Get Naturally Fair & Glowing Skin With These 4 Masoor Dal Face Packs

This magic ingredient comes loaded with proteins, essential vitamins and minerals and just about everything your skin secretly craves but never tells you.
Story first published: Friday, July 20, 2018, 15:05 [IST]
Desktop Bottom Promotion