For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முல்தானிமட்டியை தலைக்குகூட தேய்க்கலாமா?... தேய்ச்சா என்ன ஆகும்?

முல்தானி மிட்டி ஒரு மினெரல் ரிச் கிலே மெடீரியல். இதை காலம் காலமாக அழகு சாதனமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

|

என்னதான் நவீன மருத்துவம் பல இருந்தாலும், உடல்நலம், உடற் பராமரிப்பு, ஸ்கின் கேர்
போன்ற தினசரி துயரங்களுக்கு பல்வேறு மூலிகை மருந்துகளைப் பயன்படுத்துவது இந்தியாவில் அதிகம்.

beauty

ஸ்கின் கேர் போன்ற பிரச்சனைகளுக்கு பாட்டி வைத்தியமே சிறந்தது. இவ்வாறு தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வரக்கூடிய வீட்டு வைத்தியங்கள் இன்றும் சிறந்து விளங்குவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முல்தானி மட்டி

முல்தானி மட்டி

முல்தானி மிட்டி ஒரு மினெரல் ரிச் கிலே மெடீரியல். இதை காலம் காலமாக அழகு சாதனமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பதிவில் நாம் முல்தானி மிட்டியின் சிறப்பம்சங்களை காணலாம்.

ஆயில் ஸ்கின்

ஆயில் ஸ்கின்

வெயில் காலத்தில் நமது ஸ்கின்னில் ஏற்படும் எண்ணெய், நாம் வெளியே செல்லும் போது தூசி மற்றும் அழுக்கு படுவதால் ஸ்கின்னுக்கு அது சேதத்தை ஏற்படுத்துகிறது.

நீங்கள் செய்யவேண்டியவை முல்தானி மிட்டி மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் தயாரித்து அதை உங்கள் முகத்தில் மாஸ்க்காக போடவும். பிறகு மாஸ்க் காய்ந்தவுடன் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வது ஸ்கின்னில் ஏற்படும் எண்ணெயை குறைக்கும்.

ஸ்கின் இரத்த ஓட்டம் அதிகரிக்க

ஸ்கின் இரத்த ஓட்டம் அதிகரிக்க

முல்தானி மிட்டியில் உள்ள கெமிக்கல் காம்போசிஷன் ஸ்கின்னில் உள்ள இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பயன்படுகிறது. இதனால் நீங்கள் புத்துணர்வோடு செயல்படுவீர்கள். மேலும் இந்த இரத்த அதிகரிப்பு நமது உடலில் உள்ள டெட் செல்ஸ் மற்றும் ஸ்கின்னை நீக்கி ஒரு இயற்கை பளபளப்பை தருகிறது.

பிக்மென்ட்டேஷன் மற்றும் டேன்னிங்

பிக்மென்ட்டேஷன் மற்றும் டேன்னிங்

சூரியன் வெளிப்பாடு காரணமாக ஏற்படும் ஸ்கின் டேமேஜ் மற்றும் டேன்னிங்கை சரிசெய்ய முல்தானி மிட்டி பெரிதும் பயன்படுகிறது. நீங்கள் செய்யவேண்டியவை முல்தானி மிட்டி, சமஅளவு சர்க்கரை மற்றும் தேங்காய் தண்ணீர் சேர்த்து லேசாக கலந்து கொள்ளவும். வெகு நேரம் கலக்கினால் சர்க்கரை கரைந்துவிடும் அதனால் நன்கு கலக்க வேண்டாம். இந்த கலவையை ஸ்கின் டேன் இருக்கும் இடத்தில் தடவி 15-20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

சரும சுருக்கங்கள்

சரும சுருக்கங்கள்

முல்தானி மிட்டி சிறந்த ஆன்டி-ஏஜிங் பண்புகளை கொண்டது. 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி எடுத்து அதில் ஒரு முட்டை மற்றும் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து அதை உங்கள் முகத்தில் தடவி இரண்டு மணிநேரம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வவரு செய்வது உங்கள் முகத்தில் சுருக்கத்தை போக்கி ஸ்கின்னை டயிட் செய்யும் .

பாடி வாஷ்

பாடி வாஷ்

முல்தானி மிட்டியில் உள்ள ஈலிங் தன்மை உடலுக்கு ஒரு நல்ல பாடி வாஷாக செயல்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியவை முல்தானி மிட்டியில், ஓட்ஸ் பவுடர் , வேப்பிலை பவுடர், மஞ்சள் பவுடர் மற்றும் சந்தன பவுடர் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். பிறகு அதில் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை நீங்கள் பாட்டலில் போட்டு சேகரித்து வைத்து, தினசரி பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தி வர ஸ்கின் பிரச்சன்னைக்கு தீர்வு தரும்.

சிறந்த ஆன்டிசெப்டிக்

சிறந்த ஆன்டிசெப்டிக்

முல்தானி மிட்டி சிறந்த ஆன்டிசெப்டிக் பண்புகளை கொண்டது. அதனால் காயம் போன்றவற்றிற்கு இது ஒரு நல்ல மருந்தாக பயன்படும். காயம் உள்ள இடத்தில் அப்படியே பயன்படுத்து காயத்தை விரைவில் போக்கும்.

முகப்பரு சிகிச்சை

முகப்பரு சிகிச்சை

இளம் வயதுள்ளவர்கள் நிறய பேருக்கு முகப்பரு ஏற்படுவது சகஜம். இதற்கு காஸ்மெட்டிக் பொருள் பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையான வீட்டு வைத்தியம் செய்வதே சிறந்தது. எலுமிச்சை, ரோஸ் வாட்டர், நீம், முல்தானி மிட்டி மற்றும் சந்தன பவுடர் ஆகியவற்றை சமமாக எடுத்து பேஸ்ட் செய்து அதை முகத்தில் தடவவும். பிறகு ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவவும்.

ஆன்டி அலர்ஜிக்

ஆன்டி அலர்ஜிக்

நம்மில் பலருக்கு ஸ்கின் அல்ர்ஜி உண்டு. இதற்கு நாம் செய்யவேண்டியது கெமிக்கல் கலந்த பொருட்கள் பயன்படுத்தாமல் இயற்கையான வீட்டு வைத்தியம் பயன்படுத்துவதே நல்லது. முல்தானி மிட்டி, ரோஸ் வாட்டர், கற்பூரம் ஆகியவற்றை கலந்து பூசி வர, ஸ்கின் அல்ர்ஜியை தவிர்க்கும்.

ஸ்க்ரப்

ஸ்க்ரப்

முல்தானி மிட்டி ஸ்க்ரப்பாக பயன்படுவதோடு டார்க் சர்குலை போக்கும். 2 டீஸ்பூன் முல்தானி மிட்டியை 4 டீஸ்பூன் கிலிசேரின் மற்றும் 1 டீஸ்பூன் நொறுக்கிய பாதாம் சேர்த்து கலந்து முகத்தில் தடவவும். பிறகு ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவவும். வெதுவெதுப்பான தண்ணீர் பயன்படுத்துவது நல்லது.

தலை முடி

தலை முடி

முல்தானி மிட்டி ஸ்கின் மட்டுமின்றி தலைமுடிக்கும் பயன்படும். இது தலைக்கு வேண்டிய பளபளப்பை தருகிறது. இதற்கு நீங்கள் ஒரு பங்கு முல்தானி மிட்டியில் இரு பங்கு தண்ணீர் சேர்த்து 3-4 மணிநேரம் அப்படியே விடவும். பிறகு இதை உங்கள் தலை முடி மற்றும் ஸ்கேல்ப்பில் ஷாம்பூவாக பயன்படுத்தலாம். இரண்டு நிமிடம் மசாஜ் செய்து கழுவினால் உங்கள் கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Did You Know These 10 Amazing Benefits Of Multani Mitti?

multani mitti, it is a naturally occurring form of clay that has a bunch of positive effects on the body metabolism
Desktop Bottom Promotion