For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலை பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்க உதவும் சில அழகுக் குறிப்புகள்!

பாலில் அதிகளவு கால்சியம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன; பால் அதிகளவு வைட்டமின்கள் நிறைந்ததாகவும் உள்ளது. பாலில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் பாலில் அதிகமான அழகு குறிப்புகள் அதாவ

|

பாலில் பல சத்துக்கள் உள்ளன; ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று நம் அனைவராலும் அறியப்பட்ட ஒரு உணவு. மேலும் பாலில் அதிகளவு கால்சியம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன; பால் அதிகளவு வைட்டமின்கள் நிறைந்ததாகவும் உள்ளது.

raw milk benefits in tami

பாலில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் பாலில் அதிகமான அழகு குறிப்புகள் அதாவது அழகை ஆரோக்கியமாக வைக்க உதவும் பல விஷயங்கள் உள்ளது. அதிலும் முக்கியமாக சரும ஆரோக்கியத்திற்கு அதாவது தோலை மினுமினுப்பாக வைக்க உதவும் ஒரு முக்கிய பொருளாக பால் உள்ளது. இந்த பதிப்பில் பால் சருமத்திற்கு அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று படிக்கலாம் வாருங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுருக்கங்கள்

சுருக்கங்கள்

உடலின் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் தடுப்புகள் போன்றவற்றை உடனடியாக மறையச் செய்ய பால் மிகவும் உதவுகிறது. பாலில் லாக்டிக் அமிலம் - lactic acid என்று அழைக்கப்படும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் - alpha hydroxy acid என்ற அமிலம் உள்ளது. இந்த அமிலம் சருமத்தில் எவ்வித தழும்புகளும், குறிகளும், சுருக்கங்களும் இல்லாமல் பார்த்துக் கொள்வதோடு, முதுமையை மறைத்து உடலை என்றும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

என்றும் பதினாறாக, இளமையோடு வாழ பால் மிகவும் உதவுகிறது; மேலும் இது சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

நல்ல தளர்த்தி

நல்ல தளர்த்தி

பாலை தினசரி சருமத்தில் தடவி வருவதால், உடலின் தோலில் காணப்படும் இறந்த செல்களை அகற்றி, புதிய செல்களை தோற்றுவித்து தோலை அழகுடன் மிளிர செய்கிறது. இது தோல் விரைப்பாக நிற்பதை தவிர்த்து, சருமத்தை தளர்வாக இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

பால் ஒரு நல்ல தளர்த்தியாகவும், சருமத்திற்கு அதிக அளவு ஈரப்பதம் தரும் காரணியாகவும் விளங்குகிறது. பாலை வாரம் இருமுறையேனும் உடலில் தடவுதல் அல்லது பாலை குளிக்கும் நீரில் கலந்து குளியல் மேற்கொள்ளுதல் தோலின் எண்ணெய்ப்பசை மற்றும் இறந்த செல்களை முற்றிலுமாக போக்கி, சருமத்தை புத்துணர்வு பெற செய்து, சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது.

சூரியனிடம் இருந்து பாதுகாப்பு

சூரியனிடம் இருந்து பாதுகாப்பு

பாலை தினசரி அல்லது அடிக்கடி சருமத்தில் தேய்த்து பயன்படுத்தி வருவதால், அது சூரியனில் இருந்து வெளிப்படும் கெடுதல் விளைவிக்கும் கதிர்களின் தாக்குதலில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. சருமத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் தடிப்புகள், காயங்கள், அரிப்பினால் ஏற்பட்ட புண்கள் போன்றவற்றின் வீரியத்தைக் குறைத்து, சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுக்காக்க உதவுகிறது; இதனை பாலில் காணப்படும் லாக்டிக் அமிலம், உடலின் கொலஜன்களை அதிகமாக்கி சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

சரும நிறம் - ஒன்றுபடுத்தும்

சரும நிறம் - ஒன்றுபடுத்தும்

பொதுவாகவே ஆடை அணிந்து மறைக்கப்பட்ட சரும பாகங்கள் ஒருவகை நிறத்தையும், அவ்வப்போது சூரிய ஒளி தாக்கத்துக்கு உள்ளாகும் சரும பாகங்கள் ஒரு மாதிரியான பிரௌன் நிறத்திலும், நன்கு சூரிய ஒளி படக்கூடிய சரும பாகங்கள் கறுப்பாகவோ அலல்து அடர்ந்த பிரௌன் நிறத்திலோ காணப்படும். பாலை தினசரி உடலில் தடவி வருதல், சருமத்தின் நிற மாற்றங்களை அல்லது நிற வேறுபாடுகளை குறைத்து, சருமம் முழுமையும் ஒரே மாதிரியான நிறம் காணப்பட வழிவகை செய்யும்.

ஈரப்பதம்

ஈரப்பதம்

உடலின் தோலை வறண்டு போகாமல், ஈரப்பதத்துடன் வைக்க பால் மிகவும் உதவும். பாலில் நிறைந்து காணப்படும் லாக்டிக் அமிலம் சருமத்தின் ஈரப்பதம் பறிபோய் விடாமல் பார்த்துக் கொள்ள துணை செய்கிறது. சருமத்தில் விரிசல்கள் ஏற்படுவது, சருமம் வறண்டு போய் காணப்படுவது போன்ற பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய பால் உதவும். மேலும் பாலை அடிக்கடி உடலில் தடவி வருதல் சருமம் மினுமினுப்பாகவும், பளபளப்பாகவும் இருக்க உதவும்; அதோடு சருமத்தின் பொலிவினை அதிகரித்துக் கொடுக்கும்.

உணவாகவும் எடுக்கலாமே!

உணவாகவும் எடுக்கலாமே!

பாலை தினமும் உணவு முறையில் சேர்த்து வருதல் மிக அருமையான மாற்றங்களை உடல் ஆரோக்கியத்தில் மற்றும் அழகில் ஏற்படுத்தும். உணவாக உட்கொள்ளப்படும் பால் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, உடலின் சரும அழகையும் மேம்படுத்த உதவுகிறது. உடல் செயல்பாடுகள் ஆரோக்கியமாக நடக்க, உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்க பாலினை உணவாக உட்கொள்ளல் அவசியம்.

பாலை தினசரி பாலாக மட்டும் அருந்தி, அதாவது காபி - டீ போன்றவற்றை தவிர்த்து, பாலை சருமத்திற்கும் பயன்படுத்தி நன்மை அடைவீராக.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Milk On Skincare

Benefits Of Milk On Skincare
Story first published: Tuesday, August 7, 2018, 17:43 [IST]
Desktop Bottom Promotion