For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா..? அதற்கு மாதுளை தோலே போதும்...

மாதுளை பழத்தை போன்றே அதன் தோலில் எக்கச்சக்க நன்மைகள் மறைந்துள்ளது. மாதுளை தோலின் மகத்துவத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

By Haripriya
|

பழங்களில் அதிக மருத்துவ குணம் கொண்ட பழம் எதுவென்று கேட்டல் பலரின் பதில் மாதுளையாகத்தான் இருக்கும். மாதுளையில் எண்ணற்ற ஊட்டச்சத்த்துகள் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் உடல் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு மாதுளை ஒரு மிக பெரிய தீர்வாக இருக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை, மாதவிடாய் பிரச்சினை, தோல் வியாதிகள் போன்ற பலவற்றிருக்கும் இந்த பழம் உற்ற நண்பனாக உள்ளது.

In recent times, Chinese researches have claimed that the pomegranate peel does hold immense potential as it contains double the antioxidants than the fruit pulp contains. Anyone who knows anything about antioxidants knows that you really can’t have enough of them hence the more the merrier.

பெண்களுக்கு மட்டுமா மாதுளை... என்று கேட்டால், அப்படி இல்லை என்பதே விடையாக வரும். ஆமாங்க, பெண்களுக்கு எந்த அளவிற்கு மாதுளை பயன்படுகிறதோ அதே அளவிற்கு ஆண்களுக்கும் உதவுகிறது. மாதுளை பழத்தை போன்றே அதன் தோலில் எக்கச்சக்க நன்மைகள் மறைந்துள்ளது. மாதுளை தோலின் மகத்துவத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதுளை :-

மாதுளை :-

மாதுளையின் மகத்துவம் எண்ணில் அடங்காது. வைட்டமின்கள், புரதசத்துக்கள், நார்ச்சத்துக்கள் இதில் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்களை இனி பார்ப்போம்...

கலோரிகள் - 144

வைட்டமின் சி - 30%

வைட்டமின் கே - 36%

பொட்டாசியம் - 12%

நார்சத்து - 7 g

புரதம் - 3 g

என்றும் இளமையாக இருக்க..!

என்றும் இளமையாக இருக்க..!

மாதுளை தோலில் அதிகம் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருக்கிறது. எனவே தோலில் உள்ள செல்களை புத்துணர்ச்சியூட்டி கொண்டே இருக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்களை உற்பத்தி செய்யும். மாதுளை தோலை பொடி செய்து, அதனுடன் 1 டீஸ்பூன் ரோஸ் நீர், 1 டீஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் தேய்த்து வந்தால் முகம் என்றும் பதினாறு போல் இளமையாக மின்னும். இந்த அழகு குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்யலாம்.

பட்டுபோன்ற சருமம்..!

பட்டுபோன்ற சருமம்..!

பல ஆண்களின் முகம் கலை இழந்து மிகவும் சொரசொரப்பாக இருக்கும். அவர்களுக்கென்றே இந்த அழகு குறிப்பு பயன்படும். மாதுளை தோலை பொடி செய்து தேன், எலுமிச்சை சாறு, பால் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சொரசொரப்புகள் நீங்கும்.

எண்ணெய் பசை சருமத்திற்கு...

எண்ணெய் பசை சருமத்திற்கு...

பல ஆண்களுக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்து கொண்டே இருக்கும். இதனை சரி செய்ய மாதுளை தோல் நன்கு உதவுகிறது. 1 டீஸ்பூன் தேன்,சிறிது எலுமிச்சை சாறு, ரோஸ் நீர், பொடி செய்த மாதுளை தோல், பொடி செய்த ஆரஞ்ஜ் தோல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கும். அத்துடன் அதிகப்படியான பிசுபிசுப்புகளும் சரியாகும்.

வறண்ட சருமத்திற்கு...

வறண்ட சருமத்திற்கு...

ஆண்கள் அடிக்கடி வெளியில் செல்வதால் தூசுப்பட்டு முகத்தில் வறட்சி ஏற்படும். இதனால் சருமம் மிகவும் வறண்டு காணப்படும். அத்துடன் தோல் உறியவும் செய்யும். இதனை சரி செய்ய பொடி செய்த மாதுளை தோல்,1 டீஸ்பூன் யோகர்ட், 1 டீஸ்பூன் தேன்,சிறிது எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் பால், 1 டீஸ்பூன் தக்காளி சாறு ஆகியவற்றை நன்கு கலந்து முகத்தில் மசாஜ் செய்யவும். வாரத்திற்கு 2 முறை இதனை தொடர்ந்தால் முகம் மென்மையாக மாறும்.

முக பருக்கள் நீங்க...

முக பருக்கள் நீங்க...

அதிக படியான ஆண்களுக்கு இருக்கும் முகம் சார்ந்த பிரச்சினைகளில் ஒன்று இந்த முகப்பருக்கள். உங்கள் முகம் முகப்பருக்கள் இன்றி மாற வேண்டுமா..? இதை செய்து பாருங்கள். 1 டீஸ்பூன் யோகர்ட், 1 டீஸ்பூன் தேன், பொடி செய்த மாதுளை தோல், ரோஸ் நீர் போன்றவற்றை நன்றாக கலக்கவும். பின் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலசினால் முக பருக்கள் நீங்கும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும்.

கரும்புள்ளிகள் அகற்ற...

கரும்புள்ளிகள் அகற்ற...

முகத்தின் அழகை கெடுப்பதில் முதல் இடத்தில் இருப்பது இந்த கரும்புள்ளிகளே. ஆண்கள் அதிகம் வெளியில் செல்வதால், மாசுக்கள் படிந்து கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது. இதனை சரி செய்ய பொடி செய்த மாதுளை தோல், 1 டீஸ்பூன் யோகர்ட், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் அவகடோ எண்ணெய் ஆகியவற்றை ஒன்று சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty Benefits Of Pomegranate Peel

In recent times, Chinese researches have claimed that the pomegranate peel does hold immense potential as it contains double the antioxidants than the fruit pulp contains. Anyone who knows anything about antioxidants knows that you really can’t have enough of them hence the more the merrier.
Story first published: Saturday, August 11, 2018, 17:01 [IST]
Desktop Bottom Promotion