For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

அரிப்பு ஏற்பட வியர்வை, அது, அட இது என்று ஏதேனும் காரணம் கூறி நீங்கள் சப்பைக்கட்டு கட்டுவது உங்கள் மனதிற்கு சமாதானம் அளித்தாலும், உண்மையில் அரிப்பை ஏற்படுத்த சில முக்கிய காரணங்கள் உள்ளன. இந்த பதிப்பில்

|

அரிப்பு என்பது ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் சில காலகட்டத்தில் கண்டிப்பாக சந்திக்கும் ஒரு பிரச்சனை; இந்த பிரச்சனையின் அளவு சிறிதாவதும், பெரிதாவதும் அரிப்பு ஏற்படும் இடம் மற்றும் நீங்கள் அரிப்பை கட்டுப்படுத்திக் கொள்ளும் தன்மை, எடுத்த, எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் இவற்றை பொறுத்து தான் அமையும். மனிதர்களின் உடலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது முதுகு, பிறப்புறுப்பு, அக்குள் போன்ற உடல் பாகங்களில் தான்.

Armpit Itch Symptoms, Causes and Treatment

எதனால் இந்த இடங்களில் மட்டும் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறது என்று என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அரிப்பு ஏற்பட வியர்வை, அது, அட இது என்று ஏதேனும் காரணம் கூறி நீங்கள் சப்பைக்கட்டு கட்டுவது உங்கள் மனதிற்கு சமாதானம் அளித்தாலும், உண்மையில் அரிப்பை ஏற்படுத்த சில முக்கிய காரணங்கள் உள்ளன. இந்த பதிப்பில் அக்குளில் அரிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்தறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுகாதாரக் குறைவு

சுகாதாரக் குறைவு

உடலின் சுகாதாரம் மட்டமாக, படு மோசமாக இருந்தால் கண்டிப்பாக அக்குளில் மட்டுமல்ல உடல் முழுதும் அரிப்பு ஏற்படும்; உடலின் சுகாதாரம் மிகவும் மோசமடைந்தால், சொறி சிரங்கு, படை, படர்தாமரை போன்ற பாதிப்புகள் கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே உடலை எப்பொழுதும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்; எப்படி சுகாதாரமாக வைத்துக் கொள்வது என்ற கேள்வி எழுகிறதா?

தினசரி இரண்டு முறை குளிக்க வேண்டியது அவசியம்; இரண்டு முறை இல்லாவிடின் ஒரு முறையாவது உடலை நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். குளிக்காமல் இருந்தால் உடலில் அழுக்கு சேர்ந்து, அது அரிப்பு, சொறி சிரங்கு போன்ற விருந்தாளிகளை வரவேற்று விருந்து வைத்துவிடும். எனவே தினசரி குளித்து, பல் விலக்கி, காலைக்கடன்களை கழித்து உடலை பக்காவான சுத்தம் கொண்டதாக வைத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

உடல் சுத்தமாக இருந்தாலே பாதி நோய்கள் உங்களை விட்டு போய்விடும்; நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பே குறைந்து விடும். சுகாதாரம் மேம்பட்டாலே, அக்குளில் மட்டுமல்ல உடலின் எந்தவொரு பாகத்திலும் அரிப்பு ஏற்படாது.

ஷேவிங் செய்யும் முறை

ஷேவிங் செய்யும் முறை

அக்குள் காற்று படாத பகுதியாக உடலில் உள்ளது; அதிலும் அதிக நிணநீர் முடிச்சுக்கள் கொண்ட பகுதியாகவும் திகழ்கிறது. அங்கு காற்று ஓட்டம் குறைவாக இருப்பதால், அதிகம் வியர்க்கும் பகுதியாக விளங்குகிறது. இந்த வியர்வையினால் பாக்டீரியா தொற்று ஏதேனும் ஏற்படலாம் என்பதால் தான், அதை தடுக்க அங்கு முடிவளரும் வகையில் உடலை அமைத்துள்ளான் இறைவன். அந்த முடிகளை அழகாக திகழ, பலர் ஷேவ் செய்து கொள்கின்றனர்.

தவறான முறையில் அல்லது தவறான கருவி கொண்டு ஷேவ் செய்தால் உடலில் முக்கியமாக அக்குள் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற குறைபாடுகள் ஏற்படலாம். மேலும் தொடர்ந்து தவறான கருவி மற்றும் தவறான முறையில் ஷேவ் செய்வதால், அக்குளின் நிறமே மாறி கருமை படர்ந்து விடும் வாய்ப்புண்டு. எனவே, சரியான ஷேவிங் முறையை பின்பற்றுவதன் மூலம் அக்குள் அரிப்பை தடுக்கலாம்.

சுகாதாரமற்ற உடை

சுகாதாரமற்ற உடை

ஆடைகளை அணியும் பொழுது நன்கு துவைத்து, காயவைத்த ஆடைகளை அணிதல் அவசியம். துவைக்காத அழுக்கு படிந்த ஆடைகளை அணிந்தால், அது அக்குள் மற்றும் உடலின் பிற பாகங்களில் கூட அரிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்று நம் முன்னோர் கூறிய மொழிப்படி நடக்க முயல வேண்டும். உள்ளாடை மற்றும் வெளியில் அணியும் ஆடைகள் இரண்டையும் துவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும்; நம்மில் பலர் உள்ளாடைகள் யார் கண்ணிற்கும் படப்போவதில்லை என்பதால், பல வருடங்களாக துவைக்காமல் கிழிந்த ஆடைகளை உடுத்தி வருகின்றனர். இது உடல் ஆரோக்கியத்தை பயங்கரமாக பாதிக்கும் என்ற உண்மையை இப்பொழுதாவது உணர்ந்து திருந்தி செயல்படுங்கள்!

மேலும் உடலை இறுக்கும் ஆடைகளை - உள்ளாடை, வெளியாடை இரண்டையும் தவிர்க்க முயலுங்கள்!

உட்கொள்ளும் மருந்துகள்

உட்கொள்ளும் மருந்துகள்

உடலில் ஏதேனும் நோய் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தால், அதைக் குணப்படுத்த உண்ணும் மருந்துகள் மூலமாக உடலின் பல பாகங்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படலாம்; ஆகையால் உங்கள் உடல் நலன், உடலில் ஏற்பட்டிருக்கும் நோய் பாதிப்பு, அதற்கு நீங்கள் உட்கொள்ளும் மருந்து போன்ற காரணிகளை உற்று நோக்கி, மருத்துவரிடம் கலந்தாலோசித்து இந்த காரணிகளில் ஏதேனும் ஒன்று அரிப்பை ஏற்படுத்துகிறதா என்று கேட்டறிந்து அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளுங்கள்!

தினசரி பொருட்கள்

தினசரி பொருட்கள்

உடலிற்கு நீங்கள் தினசரி பயன்படுத்தும் சோப், பர்பியூம் போன்ற பொருள்கள், ஜெல், லோஷன் என்று பயன்படுத்தும் அழகு பொருட்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் இருந்தால், அதில் கலக்கப்பட்டிருக்கும் வேதிப்பொருட்கள் உடலின் பல்வேறு பாகங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்; அந்த பாகங்களில் முக்கியமாக பாதிப்பிற்கு உள்ளாவது அக்குள். அக்குளில் தொடர் அரிப்பு ஏற்பட்டால், நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையும், உங்கள் சுகாதார செயல்பாடுகளையும் உற்று நோக்குங்கள், உங்களுக்கே எளிதில் விடை கிடைக்கும்!

நோய்த்தொற்றுகள்

நோய்த்தொற்றுகள்

உடலில் ஏதேனும் நோய்க்கிருமிகள் தாக்க நேர்ந்து விட்டால், அக்குளில் தொடர் அரிப்பு ஏற்படலாம். ஏனெனில், அக்குள் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒதுக்கப்பட்ட பகுதியாக விளங்குவதால், அங்கு எளிதில் நோய்த்தொற்றுகளின் தாக்கம் உண்டாகிறது. இந்த நோய்த்தொற்று தாக்குதலால் அக்குளில் அசௌகரியம் ஏற்படக்கூடும்; இதனால் உடலில் அரிப்பு உண்டாகக்கூடும். இந்த நோய்த்தொற்றுகள் பல வழிகளில் உடலினுள் நுழையலாம்; உதாரணத்திற்கு தினசரி பயன்படுத்தும் பொருட்கள், உண்ணும் உணவு, உடல் சுகாதாரம், உடை சுகாதாரம் போன்றவற்றின் காரணமாக அரிப்பு ஏற்படலாம்.

வறட்டு வறட்டு என்று மற்றவர் முன்னிலையில் கையை அசிங்கமாக தூக்கி, அக்குளில் அரித்துக் கொண்டு திரிந்து, உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்ளாமல், அக்குளில் ஏற்படும் அரிப்பின் காரணம் அறிந்து அதைக் குணப்படுத்த, முற்றிலுமாக போக்க முயலுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Armpit Itch Symptoms, Causes and Treatment

Armpit Itch Symptoms, Causes and Treatment
Desktop Bottom Promotion