For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளமையான மற்றும் வெண்மையான முகத்தை பெற சாக்லெட்டை இப்படி பயன்படுத்துங்கள்..!

|

நம்மில் பலருக்கு சாக்லேட் சாப்பிடுவது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். சொல்லப்போனால், சாக்லெட்டை யார்தான் சாப்பிடாமல் இருப்பார்கள். குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் சாக்லேட் என்றாலே ஒரு வித காதல் அதன் மீது வர தொடங்கும்.

இளமையான மற்றும் வெண்மையான முகத்தை பெற சாக்லெட்டை இப்படி பயன்படுத்துங்கள்..!

சாக்லெட்டை சாப்பிடுவதால் பல வகையான நன்மைகள் இருக்கிறது. அதே போல, சாக்லெட்டை முகத்தில் பூசுவதால் எண்ணற்ற நலன்கள் முகத்திற்கு கிடைக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். எவ்வாறு சாக்லெட்டை கொண்டு முகத்தை அழகு செய்வது என்பதை பற்றி இனி முழுமையாக தெரிந்து கொண்டு, நாமும் அழகு பெறலாம் நண்பர்களே..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தித்திக்கும் சாக்லேட்..!

தித்திக்கும் சாக்லேட்..!

கோகோ என்ற மரத்திலிருந்து இந்த சாக்லேட் தயாரிக்கபடுகிறது. இதை தயாரிக்க பல வழி முறைகளை கடைபிடிப்பார்கள். இது இன்றோ நேற்றோ வந்தது இல்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் இதனை சாப்பிட்டும் சருமத்தில் பூசியும் வந்தனர். இதை வைத்து பல வகையான இனிப்புகள், உணவுகள், கேக்குகள் போன்றவற்றையும் தயாரிக்கலாம்.

மகத்துவம் பெற்ற சாக்லேட்..!

மகத்துவம் பெற்ற சாக்லேட்..!

மற்ற உணவு பொருளை விட சாக்லெட்டிற்கு தனி தன்மை உண்டு. இது எல்லா தரப்பு மக்களாலும் ஏற்று கொள்ளப்படுவதால் மகத்துவம் பெற்றது. சாக்லேட்டில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன...அவற்றில் சில,

வைட்டமின் ஏ

வைட்டமின் கே

கால்சியம்

மெக்னீசியம்

இரும்புசத்து

பொட்டாசியம்

பாஸ்பரஸ்

சொரசொரப்பான சருமத்திற்கு

சொரசொரப்பான சருமத்திற்கு

முகம் மிகவும் சொரசொரப்பாக இருந்தால் பல்வேறு பிரச்சினைகளை முகத்தில் ஏற்படுத்தும். குறிப்பாக கீறல்கள், வரிவரியாக கோடுகள் போன்றவை ஏற்படும். இதனை சரி செய்ய...

தேவையானவை :-

சாக்லேட் 50 கிராம்

ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்

பாதாம் எண்ணெய் 1 ஸ்பூன்

பன்னீர் சிறிது

செய்முறை :-

செய்முறை :-

முதலில் சாக்லெட்டை தூளாக்கி கொள்ளவும். பிறகு இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இறுதியாக இதனுடன் சிறிது பன்னீர் சேர்த்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் சொரசொரப்பு நீங்கும்.

MOST READ: சீனர்களின் நீண்ட ஆயுளுக்கும், புத்தி கூர்மைக்கும் காரணம் இதுதான்..! #முத்து பொடி வைத்தியம்

இளமையன முகத்தை பெற...

இளமையன முகத்தை பெற...

நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசையை இந்த சாக்லேட் நிறைவேற்றி விடும். அதற்கு இந்த குறிப்பு போதும்.

தேவையானவை :-

சாக்லேட் 2 ஸ்பூன்

சர்க்கரை 2 ஸ்பூன்

காபி தூள் 2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் 3 அல்லது 4 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

இளமையான முகத்தை பெற, முதலில் சாக்லெட்டுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இந்த கலவையுடன் காபி தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். ஒப்பிறகு இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும். இதே போன்று தொடர்ந்து செய்து வந்தால் முகம் இளமையாகவே இருக்கும்.

வெண்மையான சருமத்திற்கு...

வெண்மையான சருமத்திற்கு...

சருமம் மிகவும் வெண்மையாக இருக்க இந்த குறிப்பு பெரிதும் பயன்படும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் போதும்.

தேவையானவை :-

தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்

கோகோ பௌடர் 3 ஸ்பூன்

பெப்பர் மின்ட் எண்ணெய் 1 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

சாக்லேட் பவுடருடன் முதலில் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொள்ள வேண்டும். அடுத்து, இதனுடன் பெப்பர் மின்ட் எண்ணெயையும் சேர்த்து கலந்து கொண்டு, முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் வெண்மையாகும்.

MOST READ: உங்கள் வீட்டில் ஏ.சி இருக்கிறதா..? அப்போ கட்டாயம் உங்களுக்கு வரிசையாக இந்த நோய்கள் வரும்..!

தலை முடி பொலிவாக இருக்க...

தலை முடி பொலிவாக இருக்க...

கூந்தல் பளபளவென பொலிவாக இருக்க வேண்டும் என்றால் இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையானவை :-

தயிர் 2 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

டார்க் சாக்லேட் தூள் 3 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் சாக்லெட்டை அரைத்து கொண்டு, அதனுடன் தயிர் மற்றும் தேன் கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை தலை முடியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும். அடுத்து சிறிது ஷாம்பூ பயன்படுத்தி தலைக்கு குளித்தால் கூந்தல் பொலிவு பெறும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Benefits Of Dark Chocolate Face Masks

Follow these easy and simple chocolate beauty tips to get ul timate beauty.
Desktop Bottom Promotion