For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கற்றாழை தேய்ச்சும் கலராகலையா?... சும்மா சொல்லாதீங்க... இப்படி தேய்ச்சிங்களா?...

சதைப்பற்றுள்ள இலைகளில் உள்ள ஜெல் அதி அற்புத மருத்துவ குணங்களை கொண்டது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற வைட்டமின்கள் ஆகியவை நிறைந்திருக்கின்றன.

By Vijaya Kumar
|

கற்றாழை இயற்கை நமக்கு அளித்திட்ட மாபெரும் கொடை. கற்றாழையை ஒரு மாயாஜால மருத்துவ ஆலை என்றே சொல்லலாம். மற்றும் அதன் நீண்ட சதைப்பற்றுள்ள இலைகளில் உள்ள ஜெல் அதி அற்புத மருத்துவ குணங்களை கொண்டது.

beauty

இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற வைட்டமின்கள், தாதுக்கள் பல செயலில் உள்ள பாகங்களை நிரப்பக் கூடியது மட்டுமில்லாமல் முகப்பரு வடுக்கள், தோல் நிறமி, இருண்ட புள்ளிகள், சூரியன் பழுப்பு தழும்புகள், தோல் நோய்த்தாக்கம், முன்கூட்டிய வயதான மற்றும் வறண்ட உறிஞ்சுதல் தோல் போன்றவை பல ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும் ஆற்றல் வாய்ந்தது கற்றாழை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை

கற்றாழை

கற்றாழையின் அற்புதமான ஈரப்பதமான பண்புகள், தோலுக்கு புத்துணர்ச்சியூட்டி பொலிவாக வைத்திருக்க முடியும். நீங்கள் பொலிவான முகத்தைப் பெறுவதற்கு, இந்த கற்றாழையை வேறு சில மூலப்பொருட்களையும் சேர்த்து முயற்சி செய்யுங்கள்.

பிரைட் ஸ்கின்

பிரைட் ஸ்கின்

கற்றாழை இலையில் இருந்து ஜெல்லை பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள் அதனுடன் 3 -4 துண்டு பப்பாளி மற்றும் தேவையான அளவு பன்னீர் சேர்த்து நன்றாக மசித்து பேஸ்ட் பதத்தில் தயாரித்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் வட்ட வடிவத்தில் தேய்க்கவும்

10-15 நிமிடங்களுக்கு உங்கள் தோலில் இதை விட்டுவிட்டு குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு கழுவவும். ஒரு வாரம் 2-3 முறை இந்த பேக் பயன்படுத்தி வர மென்மையான ஒளிரும் தோலில் உள்ள பாதிப்புகள் குணமாகும். கற்றாழை சருமத் துளைகள் மற்றும் பாபின்கலை சுத்தம் செய்ய உதவும், பப்பாளியில் உள்ள நொதி, தோலை மென்மையாக்கும். இந்த மாஸ்க் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது.

கிளியர் ஸ்கின்

கிளியர் ஸ்கின்

இரண்டு தேக்கரண்டி கற்றாழை சிறிது மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி பால், தேன், மற்றும் தேவையான அளவு ரோஸ்வாட்டர் என அனைத்தையும் சேர்த்து பேஸ்ட் பதத்தில் தயாரித்து உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் விட்டுவிட்டு அமருங்கள் . தொடர்ச்சியான பயன்பாட்டின் மூலம் இந்த பேஸ் பேக் உங்கள் தோலை நிறத்தை அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றிவிடும்.

கரும்புள்ளிகளை நீக்க

கரும்புள்ளிகளை நீக்க

கரும்புள்ளி, முகப்பரு, வடுக்கள் மற்றும் பிம்பிள் மார்க்ஸ் ஆகியவற்றை நீக்குவதற்கான கற்றாழை ஃபேஸ் பேக். கற்றாழை தொற்றுநோயைக் குணப்படுத்தக்கூடிய திறன் கொண்ட பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது முகப்பரு, பருக்கள், மங்கலான வடுக்கள் மற்றும் அதிக எண்ணெய் வடிதலைக் கட்டுப்படுத்தி சருமத் துளைகளை தெளிவாக வைக்க உதவுகிறது. தக்காளியில் வைட்டமின் A மற்றும் சி உள்ளது. இது வடுக்கள் மற்றும் இருண்ட புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது. எலுமிச்சை தோலில் உள்ள புள்ளிகளை குறைத்து நிறத்தை ஒளிரச்செய்யும். இந்த முன்று பொருட்களையும் ஒன்று சேர்த்து பயன்படுத்தும் போது மிகச்சசிறந்த பலன்களை பெறலாம்

கற்றாழை ஃபேஸ்பேக்

கற்றாழை ஃபேஸ்பேக்

உங்கள் வறண்ட பொலிவற்ற சருமத்தை குணப்படுத்த இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் வெள்ளரி துண்டுகள் சிறிதளவு இரண்டு தேக்கரண்டி பாலாடைக்கட்டி சிறிதளவு சில துளிகள் எலுமிச்சை சாறு, இவற்றை நன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி 20 நிமிடங்கள் உலரவிட்டு பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவவேண்டும். இந்த பொருட்கள் உங்கள் தோலுக்கு ஈரப்பதத்தை அளிப்பதோடு உங்கள் முகத்தை மென்மையாக்கி, ஒளிரச்செய்யும்.

நிறத்தை அதிகரிக்க

நிறத்தை அதிகரிக்க

அழுக்கு, மாசுபடுதல் மற்றும் உறைபனி போன்றவற்றால் முகம் பொலிவிழந்து நிறமிழப்பு ஏற்படுகிறது, உங்கள் தோலுக்கு பழைய நிறுத்தி கொண்டுவர கற்றாழை, முல்தானி மெட்டி, மற்றும் வெள்ளரி மூன்றையும் ஒன்றாக நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்து முகத்தில் தடவி அது உலரும் வரை விட்டுவிடுங்கள். உலர்ந்த பின் ஈரத்துணியால் துடைத்து பின் குளிர்ந்த தண்ணீரால் கழுவவும். இந்த பேஸ்பேக் நிறமியைக் குறைத்து உங்கள் சருமத்தை சுத்தமானதாகவும் தெளிவானதாகவும் மாற்றும்

வறண்ட சருமத்துக்கு

வறண்ட சருமத்துக்கு

வறண்ட சருமத்தினருக்கு இரசாயன, அழகு சாதனப் பொருட்கள் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. ஆனால் இந்த இயற்கை பொருட்களை கொண்ட இந்த பேஸ்பேக் உங்க தோலை கையாள்கிறது,

கற்றாழையில் உள்ள வைட்டமின் ஈ, ஈரப்பதமான உலர்ந்த சருமத்திற்கு சிறந்த ஒன்று.

வாழைப்பழம் உலர்ந்த தோலை மிருதுவாக்கும், மேலும் இந்த பேஸ்பேக்கில் தேன் உள்ளதால் தோலை மென்மையாக்கி புத்துயிர் ஊட்டும்

ஒரு சிறிய வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளுங்கள் அதனுடன் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மாற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து ஒரு வட்ட சுழற்சியில் தேய்க்கவும் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும், சுத்தமான மாசற்ற முகத்தைப் பெறலாம்

சருமப் பிரச்னைகள்

சருமப் பிரச்னைகள்

கற்றாழையின் குளிரூட்டும் பண்புகள் சூரிய வெப்பத்தின் காரணமாக தோலில் ஏற்ப்படும் தோல் சிவத்தல், எரிச்சல், தடித்தல் போன்றவற்றை குணமாக்கும்.

கற்றாழை ஜெல், ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் சாறு, பாதி எலுமிச்சை ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்துப்பகுதிகளில் தடவவும். பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரால் கழுவவும், இதன் மூலம் இயற்கையான தோல் நிறத்தை நீங்கள் திரும்பப்பெறுவீர்கள்.

வைட்டமின் சி கொண்டிருக்கும் ஆரஞ்சு தோலுடன் சேர்த்து சிட்ரிக் ஆசிட் உள்ள எலுமிச்சை உங்கள் தோலில் சூரிய எரிப்பினால் ஏற்பட்டிருக்கும் இருண்ட திட்டுகள் மற்றும் புள்ளிகளை குறைக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Ways To Use Aloe Vera For Flawless Skin

aloevera is a magical medicinal plant and its magic formula lies in its long. succlent leaves which contains that magical aloevera gel which is packed with vitamins.
Story first published: Saturday, May 19, 2018, 17:15 [IST]
Desktop Bottom Promotion