Latest Updates
-
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க! -
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்.. -
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? -
வெயில் கொளுத்துதா? வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி கூட தேவையில்லை! -
ராகு-கேதுவிற்கு இடையில் வரும் சூரியன்: மே 15 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கொளுத்தும் வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த 3 வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வீடு ஜில்லென்று மாறும்! -
உங்களுக்கு குடல் புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 7 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்..! -
சனி ஜெயந்தி நாளில் 2 முறை நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது! -
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது...
எப்போதும் உங்கள் முகம் பளபளப்பாக இளமையாக தெரியனுமா..?
முகம் பார்க்க மங்கலாக இருப்பதற்கு பல காரணங்களை சொல்லி கொண்டே போகலாம். மன அழுத்தம், உடல் சார்ந்த பிரச்சனை, ஆரோக்கியமற்ற உணவு முறை, செயற்கையான அழகு சாதனங்கள், இப்படி சொல்லி கொண்டே போகலாம். என்னதான் நமக்
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள். ஆம், இது உண்மைதான். நாம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை நம் முகம் வெட்டவெளிச்சமாக காட்டிவிடும். முகம் பார்க்க மங்கலாக இருப்பதற்கு பல காரணங்களை சொல்லி கொண்டே போகலாம். மன அழுத்தம், உடல் சார்ந்த பிரச்சனை, ஆரோக்கியமற்ற உணவு முறை, செயற்கையான அழகு சாதனங்கள், இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

என்னதான் நமக்கு வேலை இருந்தாலும் நமது முக ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியமானது. நம் வீட்டுலே இருக்கும் பொருட்களை கொண்டு அழகு பெற்றால் அதுதான் அல்ட்டிமேட். அதிலும் குறிப்பாக முட்டையால் ஃபேஸ் மாஸ்க் செய்து அழகு பெற்றால் அவ்வளவுதான். சரி, வாங்க முட்டையை வைத்து செய்யும் ஃபேஸ் மாஸ்க் பற்றி இந்த பதிவில் தெரிஞ்சிக்கலாம்.

#1 எண்ணெய் சருமம்
நம்மில் பலருக்கு அடிக்கடி முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டே இருக்கும். இதனால் பார்க்க மிகவும் மங்கலாக தெரிவோம். இதனை சரி செய்ய இந்த ஃபேஸ் மாஸ்க் போடுங்கள்.
தேவையானவை :-
- முட்டை
- எலுமிச்சை சாறு
செய்முறை :-
முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து, அதனை நன்கு அடித்து கொள்ளவும். பின்பு, எலுமிச்சை சாற்றை அதனுடன் சேர்த்து கலக்கவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை 30 நிமிடம் வரை முகத்தில் போட்டு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவினால் எண்ணெய் சருமம் மிகவும் ஈரப்பதமான சருமமாக காட்சியளிக்கும். மேலும் சென்சிடிவ் ஸ்கின் உடையவர்கள் இந்த ஃபேஸ் மாஸ்க்கை கண் மற்றும் வாய் ஆகிய பகுதிகளில் போடுவதை தவிர்க்கவும்.

#2 எரிச்சல் முகம்
முகம் ரொம்ப எரிச்சலாக உள்ளதா..? அரிப்பு அடிக்கடி ஏற்படுகிறதா..?
உங்கள் முகத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகளை இந்த ஃபேஸ் மாஸ்க் நீக்கி, மென்மையான முகத்தை தருகிறது.
தேவையானவை :-
- தேன்
- முட்டை
- தயிர்
- வெள்ளரிக்காய் சாறு
செய்முறை :-
முதலில் 1/2 வெள்ளரிக்காயை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் அடித்து கொண்டு, அதில் சிறிது மிதமான சூட்டில் சூடு செய்த 1 டீஸ்பூன் தேனை கலக்கவும். 1/2 கப் தயிர் மற்றும் வெள்ளரி சாற்றை அதனுடன் கலந்து 15 நிமிடம் முகத்தில் பூசவும். இந்த ஃபேஸ் மாஸ்க் உங்கள் எரிச்சல் கொண்ட முகத்தை மென்மையாக மற்றும்.

#3 சுருக்கங்கள் கொண்ட முகம்
சின்ன வயசுலையே இளமையை இழந்துவிட்டீர்களா..? முகம் முழுக்க சுருக்கங்களா..? சரி செய்ய இந்த ஃபேஸ் மாஸ்க் உபயோகித்து பாருங்கள்.
தேவையானவை :-
- முட்டை
- தேன்
- ஓட்ஸ்
செய்முறை :-
முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் ஓட்ஸை பவ்டராக்கி அதில் கலந்து கொள்ளவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை 20 நிமிடம் முகத்தில் பூசி பிறகு காட்டன் துணியால் துடைத்துவிடவும். இவ்வாறு செய்தால் இழந்த இளமையான முகத்தை மீண்டும் பெற்றுவிடுவீர்கள்.

#4 வெளிர்ந்த முகம்
சிலருக்கு முக சருமம் மிகவும் வெளிர்ந்து காணப்படும். இதற்கு காரணம் அதிகம் கெமிக்கல்ஸ் பயன்படுத்துவதே. இவர்களுக்கென்ற இந்த ஃபேஸ் மாஸ்க் உள்ளது.
தேவையானவை :-
- முட்டை
- பால்
செய்முறை :-
முட்டையின் வெள்ளை கருவை எடுத்து நன்றாக அடித்து கொண்டு அதனுடன் 1/4 கப் பால் கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு செய்தல் கெமிக்கல்களால் பாதிப்படைந்த முகம் குணமடைந்து வெண்மை பெரும்.

#5 வறண்ட சருமம்
எப்போதுமே முகம் வறண்டு,கீரல்களோடு இருக்கிறதா..? இதற்கு காரணம் முகத்தில் ஈரப்பதம் இல்லாததே. இதனை சரி செய்ய இந்த ஃபேஸ் மாஸ்க் போதும்.
தேவையானவை :-
- பால்
-அவகடோ பழம்
-தேன்
- முட்டை
செய்முறை :-
1/4 கப் அவகடோ பழத்தை நன்றாக சாறு போல் செய்து கொண்டு, அவற்றுடன் 1 முட்டையின் வெள்ளை பகுதியை சேர்த்து அடிக்கவும். அதன் பிறகு 1 டீஸ்பூன் பால் மற்றும் தேன் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடம் கழித்து மிதமான சுடு நீரில் முகத்தை கழுவவும். வறண்ட சருமம் இப்போது மிகவும் அழகாக பொலிவுடன் மாறிவிடும்.

#6 முகத்தை சுத்தம் செய்ய
அதிகரித்து வரும் காற்று மாசுவால் உங்கள் முகம் மிக கருமையாக அழுக்குடன் உள்ளதா..? இந்த ஃபேஸ் மாஸ்க் உங்கள் அழுக்குகள் நிறைந்த முகத்தை சுத்தம் செய்து பளபளப்பாக மாற்றும்.
தேவையானவை :-
- முட்டை
- தயிர்
செய்முறை :-
நன்றாக அடித்த வெள்ளை கருவை 2 டீஸ்பூன் தயிருடன் சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை 2 வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் சருமம் சுத்தமடைந்து மொழு மொழுவென மின்னும்.



Click it and Unblock the Notifications