For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிருதுவான , அழகான மற்றும் பளபளக்கும் சருமத்திற்கு, உருளைக் கிழங்கு பேஸ் பேக் :

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பி 1 , பி 3 , பி 6, மற்றும் மினரல்கள் மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் அதிகம் உள்ளது.

|

உருளைக் கிழங்கை எல்லோருக்கும் பிடிக்கும். சிப்ஸ், வறுவல், மசாலா என்று எல்லா விதத்திலும் சுவை மிகுந்த ஒரு உணவாக இருப்பது உருளைக் கிழங்கு. எளிதிலும் விரைவாகவும் சமைக்கக்கூடிய ஒரு சௌகரியம் இந்த உருளைக்கிழங்கில் உண்டு. இதில் வைட்டமின் சி, பி 1 , பி 3 , பி 6, மற்றும் மினரல்கள் மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை அதிகம் உள்ளது.

beauty

ஆகவே இந்த உருளைக்கிழங்கு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை புரியும் ஒரு உணவுப் பொருளாக இருக்கிறது. ஆனால் உருளைக்கிழங்கை சருமத்திற்கு பயன்படுத்துவதால் தெளிவான பளபளக்கும் சருமம் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

முகத்தில் அசிங்கமாக இருக்கும் புள்ளிகள், அடையாளங்கள் மற்றும் கொப்பளங்களைப் போக்க உதவுகிறது. காயங்கள், கிருமிகள் மற்றும் புண்களால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. கண் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. வயது முதிர்ச்சியின் அறிகுறியைக் குறைக்கிறது. உங்கள் சருமத்தை மாசுபடுத்தும் சூரியன் வெளிப்பாட்டினால் ஏற்படுகின்ற சுற்றுச்சூழலுக்கான சேதத்தை பாதுகாக்கும் அன்டி ஆக்சிடென்ட் இவற்றில் உள்ளன.

உருளைக்கிழங்கு ஃபேஸ்பேக்

உருளைக்கிழங்கு ஃபேஸ்பேக்

சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், உங்கள் எல்லா வித சரும பிரச்சனைகளுக்கு உருளைக்கிழங்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும். சருமத்தில்உண்டாகும் அத்தனை பிரச்னையையும் உருளைக்கிழங்கிடம் நம்பி, ஒப்படைக்கலாம். அப்படி வீட்டிலேயே தயார் செய்யக் கூடிய, உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்குகள் இதோ உங்களுக்காக... ஒவ்வொரு சருமப் பிரச்னைக்கும் சில பிரத்யேக முறையில் சில வழிமுறைகளைக் கையாண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

சரும வெண்மைக்கு

சரும வெண்மைக்கு

தேவையான பொருட்கள்

3 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு

2 ஸ்பூன் தேன்

செய்முறை

உருளைச் சாறுடன் தேனை கலந்து கொள்ளவும். இதனை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவவும். 10-15 நிமிடங்கள் காய விடவும். முழுவதும் காய்ந்தவுடன் முகத்தைக் கழுவுங்கள். இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எப்படி வேலை செய்கிறது?

தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. இதனால் சருமம் மிகவும் மென்மையாகிறது. உருளைக்கிழங்கு சாறு அமிலத்தன்மை வாய்ந்தது. இது இயற்கையாகவே ப்ளீச் போல் செயல்படும் தன்மை கொண்டது. இதனால் சருமம் பொலிவாக பளிச்சென்று ஆகிறது.

பளபளக்கும் சருமத்திற்கு

பளபளக்கும் சருமத்திற்கு

உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை பேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்

2 ஸ்பூன் உருளைச் சாறு

2 ஸ்பூன் எலுமிச்சை சாறு

1/2 ஸ்பூன் தேன் (தேவைப்பட்டால்)

செய்முறை

உருளை மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாகக் கலக்கவும். இத்துடன் தேன் சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு தண்ணீரால் முகத்தைக் கழுவவும். இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வரலாம்.

எப்படி வேலை செய்கிறது

எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கின் கட்டுப்படுத்தும் தன்மை, முகத்தில் உள்ள அதிக எண்ணெயைப் போக்கி, அடைப்பட்ட துளைகளைத் திறந்து சருமத்தை பளிச்சிட வைக்கிறது. தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. எலுமிச்சை சாற்றை நேரடியாக அப்படியே தடவும்போது எரிச்சல் ஏற்பட்டால், சிறிதளவு தண்ணீர் கலந்து பயன்படுத்தவும்.

சரும வறட்சி, கட்டிகளுக்கு

சரும வறட்சி, கட்டிகளுக்கு

உருளை மற்றும் தக்காளி பேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்

1 ஸ்பூன் உருளை விழுது அல்லது சாறு

1 ஸ்பூன் தக்காளி விழுது அல்லது சாறு

1 ஸ்பூன் தேன்

செய்முறை

உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி சாறுகளை ஒன்றாகக் கலக்கவும்.

இந்த கலவையுடன் சிறிதளவு தேன் சேர்த்து கலக்கவும். இதனை உங்கள் முகம் மற்றும் கட்டிகள் உள்ள இடத்தில் தடவவும். கட்டி மறையும் வரை தினமும் செய்து வரலாம்.

எப்படி வேலை செய்கிறது

தாக்காளியும் உருளைக்கிழங்கும் அன்டி ஆக்சிடென்ட் நிறைந்தவை . இவை சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் கூறுகள், கிருமிகள் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது. இவற்றில் உள்ள அமிலத்தன்மை அடைப்பட்ட துளைகளை திறந்து விடுகின்றன. தக்காளி சாறு அமிலத்தன்மை அதிகம் கொண்டது. இதனால் சருமம் வறண்டு போகலாம். ஆகவே இதனுடன் கூடுதலாக தேன் சேர்த்துக் கொள்வதால் சருமம் நீர்ச்சத்துடன் இருக்க உதவுகிறது. .

கருமையை நீக்க

கருமையை நீக்க

உருளை மற்றும் அரிசி மாவு

தேவையான பொருட்கள்

1 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு

1 ஸ்பூன் அரிசி மாவு

1 ஸ்பூன் தேன்

1 ஸ்பூன் எலுமிச்சை சாறு (தேவைப்பட்டால்)

செய்முறை

மேலே கூறிய எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இதனை உங்கள் முகத்தில் தடவி, காய விடவும். காய்ந்தவுடன் தண்ணீர் தெளித்து முகத்தை மென்மையாக சுழல் வடிவத்தில் ஸ்க்ரப் செய்யவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனைச் செய்யலாம்.

எப்படி வேலை செய்கிறது

உருளைக்கிழங்கு சருமத்தில் உள்ள சேதங்களைப் போக்கி, திட்டுகளைச் சரி செய்கிறது. அரிசி மாவு , சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் போக்குகிறது. இதனால் உங்கள் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறுகிறது. எலுமிச்சை சாறு, துளைகளை கெட்டியாக்குகிறது . தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. உங்கள் சருமம் சென்சிடிவ் சருமமாக இருந்தால், எலுமிச்சை சாற்றை நேரடியாக தடவாமல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து பயன்படுத்தவும்.

எண்ணெய் பசை சருமத்திற்கு

எண்ணெய் பசை சருமத்திற்கு

உருளைக் கிழங்கு மற்றும் ஓட்ஸ் பேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்

3 உருளைக்கிழங்கு (வேகவைத்து தோல் உரித்தது )

2 ஸ்பூன் பால்

1 ஸ்பூன் ஓட்ஸ்

1 ஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை :

உருளைக்கிழங்கை மசித்து ஒரு கிண்ணத்தில் போடவும். இதனுடன் மற்ற மூலப்பொருட்களை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். அரை மணி நேரம் அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வரலாம்.

எப்படி வேலை செய்கிறது

உருளைக்கிழங்கு மற்றும் ஒட்ஸிற்கு சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் அழுக்கை உறிஞ்சும் தன்மை உள்ளது. ஓட்ஸ் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. இதனால் சருமம் குறைந்த அளவு எண்ணெய்யை சுரக்கிறது.

முகத்தில் உள்ள திட்டுகள் குறைய,

முகத்தில் உள்ள திட்டுகள் குறைய,

உருளைக்கிழங்கு மற்றும் முல்தானிமிட்டி பேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்

1 உருளைக் கிழங்கு`

1 ஸ்பூன் முல்தானிமிட்டி

செய்முறை

உருளைக்கிழங்கைத் துருவி சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாறுடன் முல்தானிமிட்டியைக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் இந்த பேஸ்டை தடவவும். 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனைச் செய்து வரலாம்.

எப்படி வேலை செய்கிறது

சருமத்தில் உள்ள சேதங்களை சரிபடுத்தும் தன்மை முல்தானிமிட்டி மற்றும் உருளைக் கிழங்கில் உள்ளது. மேலும் இவை சருமத்தை வெண்மையாக்க உதவுகின்றன. இதனால் படிப்படியாக திட்டுகள் மற்றும் முகத்தில் உள்ள மற்ற அடையாளங்கள் குறைகின்றன. இந்த பேக் முகத்திற்கு அதிக வறட்சியைத் தரலாம். ஆகவே வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துவது போதுமானது.

முகத்தில் உள்ள சுருக்கங்களுக்கு

முகத்தில் உள்ள சுருக்கங்களுக்கு

உருளைக்கிழங்கு , பால் மற்றும் கிளிசரின் பேஸ்பேக்

தேவையான பொருட்கள்

1 உருளைக்கிழங்கு (துருவியது)

2 ஸ்பூன் காய்ச்சாத பால்

3-4 துளிகள் கிளிசரின்

செய்முறை

மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். சுருக்கங்கள் அதிகம் உள்ள இடங்கில் அதிகமாகத் தடவவும்.

15 நிமிடங்கள் அப்படியே காய விடவும். பின்பு தண்ணீரால் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வரலாம்.

எப்படி வேலை செய்கிறது

சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குவதில் திறன் வாய்ந்தது கிளிசரின். இது சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை மீட்டுத் தருகிறது. உருளைக்கிழங்கு மற்றும் கிளிசரின் ஆகிய இரண்டும், சுருக்கங்கள், கருவளையம் போன்றவற்றைக் குறைத்து சருமத்தை இறுக்கமாக்குகின்றன. சருமத்தில் தோல் உரிவது, எரிச்சல் உண்டாவது, வறண்டு போவது போன்ற பாதிப்புகள் தென்பட்டால், கிளிசரின் பயன்படுத்துவதை நிறுத்தலாம்.

உருளைக்கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரி பேஸ்மாஸ்க்

உருளைக்கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரி பேஸ்மாஸ்க்

தேவையான பொருட்கள்

1 உருளைக் கிழங்கு (நறுக்கியது)

2 ஸ்ட்ராபெர்ரி

1/2 ஸ்பூன் தேன்

செய்முறை

உருளைக்கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதில் தேன் சேர்த்து, முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் காத்திருந்து பின் தண்ணீரால் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனைச் செய்யலாம்.

எப்படி வேலை செய்கிறது

ஸ்ட்ராபெர்ரி வைட்டமின் சி மற்றும் போலிக் அமிலம் அதிகம் உள்ள ஒரு பழம். இது சருமத்தை தளர்த்துகிறது. இந்த பேக் , கொலோஜென் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது., முகத்தில் தோன்றும் மெல்லிய கோடுகளை குறைத்து, வயது முதிர்வைப் போக்கி உங்களை இளமையாக காட்டுகிறது.

உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள் பேஸ்பேக்

உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள் பேஸ்பேக்

தேவையான பொருட்கள்

1/2 உருளைக் கிழங்கு (துருவியது )

1/2 ஸ்பூன் முகத்திற்கு தடவும் மஞ்சள் தூள்

செய்முறை

துருவிய உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சளை ஒன்றாகக் கலக்கவும்.

இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவவும்.

15 நிமிடங்கள் காய்ந்தவுடன் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனைச் செய்யலாம். மஞ்சள் ஒரு கிருமி நாசினி மற்றும் அழகு சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஒரு முக்கிய பொருள். இந்த பேஸ் பேக் முகத்தில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாவைக் கொன்று, துளைகளைத் திறந்து,சரும சேதங்களைப் போக்கி, முகத்தை பளிச்சென்று மாற்றுகின்றது.

தெளிவான சருமத்திற்கு

தெளிவான சருமத்திற்கு

உருளைக்கிழங்கு மற்று டிஷ்யூ பேப்பர்

தேவையான பொருட்கள்

3 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு

1 டேப்லெட் டிஸ்யு பேப்பர்

செய்முறை

உருளைக்கிழங்கு சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.

டிஸ்யு பேப்பரை அதில் ஊற வைக்கவும். பின் அதனை எடுத்து உங்கள் முகத்தில் மூடவும். மூக்கு மற்றும் கண் பகுதி மட்டு வெளியில் தெரியும் படி இடைவெளி விடவும். சிறிது நேரம் காய விடவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனைச் செய்யலாம்.

எப்படி வேலை செய்கிறது

உருளைக் கிழங்கில் ப்ரோ வைட்டமின் ஏ மற்றும் பீனோலிக் கூறுகள் உள்ளன. இவை வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுபவையாகும். இதனால் சருமம் பொலிவாக ஆரோக்கியமாக இருக்கிறது.

உருளைக் கிழங்கு மற்றும் முட்டை பேஸ் மாஸ்க்

உருளைக் கிழங்கு மற்றும் முட்டை பேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்

பாதி உருளைக்கிழங்கின் சாறு

1 முட்டையின் வெள்ளைக் கரு மட்டும்.

செய்முறை

உருளைக்கிழங்கு சாறுடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்க்கவும்.

இந்த கலவையை நன்றாகக் கலந்து, உங்கள் கழுத்து மற்றும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் முகத்தைக் கழுவவும். ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதனை பின்பற்றலாம்.

எப்படி வேலை செய்கிறது

உருளைக்கிழங்கு மற்றும் முட்டையில் புரதம் அதிகம் உள்ளது. அதனால் சருமம் இறுக்கமாகி, பொலிவைப் பெற்றுத் தருகிறது.

உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், எலுமிச்சை மற்றும் மஞ்சள் பேஸ்பேக்

உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், எலுமிச்சை மற்றும் மஞ்சள் பேஸ்பேக்

தேவையான பொருட்கள்

1 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு

1 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு

1 ஸ்பூன் எலுமிச்சை சாறு

1 ஸ்பூன் மஞ்சள் தூள்

செய்முறை

மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும்.

இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி காய விடவும்.

காய்ந்தவுடன் தண்ணீரால் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனைச் செய்யலாம்.

எப்படி வேலை செய்கிறது

வெள்ளரிக்காய் சரும சேதங்களைப் போக்கி, மென்மையாக்குகிறது . எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கு, சருமத்தில் உள்ள துளைகளைத் திறந்து அழுக்கைப் போக்கி, அதிக எண்ணெயைப் போக்குகிறது. மஞ்சள் சருமத்தை பிரகாசிக்கச் செய்கிறது. இதன் கிருமிகளைப் போக்கும் தன்மை, முகத்தில் கிருமிகள் தொற்று ஏற்படாமல் இருக்க உதவுகிறது. எலுமிச்சை சாற்றில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பயன்படுத்தவும். இதனால் சரும எரிச்சல் தவிர்க்கப்படும்.

உருளைக்கிழங்கு, தேன் மற்றும் பாதாம் பேஸ்பேக்

உருளைக்கிழங்கு, தேன் மற்றும் பாதாம் பேஸ்பேக்

தேவையான பொருட்கள் :

1 சிறிய உருளைக்கிழங்கு

1 ஸ்பூன் தேன்

1 ஸ்பூன் பாதாம் எண்ணெய்

செய்முறை

உருளைக்கிழங்கை துருவி , தேனுடன் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் தடவவும்.

அரை மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவவும். ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.

எப்படி வேலை செய்கிறது

சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் பீட்டா கரோட்டின் , உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது . தேன் மற்றும் பாதாம் எண்ணெய், சருமத்தை புத்துணர்ச்சிய அடையச் செய்கிறது., தடிப்புகளைப் போக்கி அழுக்கை அகற்றி மெல்லிய கோடுகளை சரி செய்ய இந்த பேக் உதவுகிறது.

உருளைக்கிழங்கு மற்றும் யோகர்ட்

உருளைக்கிழங்கு மற்றும் யோகர்ட்

தேவையான பொருட்கள்

1/2 உருளைக்கிழங்கு துருவியது

2 ஸ்பூன் யோகர்ட்

செய்முறை

உருளைக்கிழங்கு மற்றும் யோகர்டை ஒன்றாகக் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 15 நிமிடங்களுக்கு பிறகு முழுவதும் காய்ந்தவுடன் முகத்தைக் கழுவவும். வாரத்தில் இரண்டு முறை இதனைப் பயன்படுத்தலாம்.

எப்படி வேலை செய்கிறது

யோகர்டிற்கு வயது முதிர்வைத் தடுக்கும் தன்மை உள்ளது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை போக்கி, துளைகளை இறுக்கமாக்குகிறது . தீங்கு விளைவிக்கும் கூறுகள் சருமத்திற்கு சேதம் ஏற்படுத்தாமல் இவைத் தடுக்கின்றன.

உருளைக்கிழங்கு, பேக்கிங் சோடா மற்றும் வெள்ளரிக்காய் பேஸ்பேக்

உருளைக்கிழங்கு, பேக்கிங் சோடா மற்றும் வெள்ளரிக்காய் பேஸ்பேக்

தேவையான பொருட்கள்

1/4 கப் நறுக்கிய வெள்ளரிக்காய்

1/8 கப் உருளைக்கிழங்கு

1 முட்டை - வெள்ளை கரு மட்டும்

1/4 கப் யோகர்ட்

1 ஸ்பூன் பேக்கிங் சோடா

செய்முறை

மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இதனை முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் காய விடவும்.

பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். ஒரு வாரத்தில் மூன்று முறை இதனைச் செய்யவும்.

எப்படி வேலை செய்கிறது

பேக்கிங் சோடா சருமத்தை தளர்த்துகிறது. யோகர்ட், உருளைக்கிழங்கு மற்றும் முட்டை, சரும துளைகளைச் சுத்தமாக்கி, எண்ணெய்யை அகற்றுகின்றன. வெள்ளரிக்காய் தடிப்புகளைப் போக்கி, சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகின்றன.

உங்களுடைய எல்லா சருமப் பிரச்சனைகளுக்கும் இங்கே தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றி உங்கள் கருத்துகளை எங்களுக்குப் பகிரவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Best Potato Face Packs For Glowing, Fair, And Smooth Skin

potato is the ultimate comfort food for most of us. It is packed with vitamins C, B1, B3, and B6 and minerals like magnesium, potassium, and phosphorus, along with dietary antioxidants.
Desktop Bottom Promotion