For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி வரும் வலிமிகுந்த பருக்களை சரிசெய்ய என்ன செய்யலாம்?

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், எட்டு வயது குழந்தை முதல் ஐம்பது வயது முதியவர் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை இந்த பருக்கள்.

|

உங்களுக்கு எப்போதாவது முகத்தில் வலி மிகுந்த பெரிய பெரிய பருக்கள் தோன்றி இருக்கின்றனவா? ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், எட்டு வயது குழந்தை முதல் ஐம்பது வயது முதியவர் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை இந்த பருக்கள். பருக்கள் தோன்றும் மிக முக்கியமான இடம் நமது முகம். சில சமயங்களில் தோள் பட்டை, மார்பு, முதுகு போன்ற இடங்களிலும் தோன்றும். இங்கு நாம் சிஸ்டிக் பருக்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். பருக்களிலேயே மிகத் தீவிரமானது இந்த சிஸ்டிக் வகை முகப்பரு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெரிய பருக்கள்

பெரிய பருக்கள்

நோடூலோசிஸ்டிக் அக்னே என்று சொல்லப்படுகிற இவை மிகவும் கடுமையானவை. தோலில் பெரிய பெரிய கட்டிகள் போல திரள் திரளாகக் காணப்படும். மற்ற சாதாரண பருக்களை ஒப்பிடும்போது, இவை வலி மிகுந்தவை. எண்ணெய் மற்றும் இறந்த செல்கள், முகத்தின் சிறு துவாரங்களிலோ, மயிர்ப்புடைப்பின் மீதோ ஆழமாகப் படியும் போது இவை தோன்றுகின்றன. இளம் சிறுவர்கள் பருவமடையும் போது, பொதுவாகப் பருக்கள் தோன்றும். ஆனால் ஹார்மோன்கள் சீராக செயல்படாமல் இருக்கும்போது, எல்லா வயதிலும் பருக்கள் தோன்றுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது சாதாரணமான பருக்கள் தோன்றி மறைவது வழக்கம்.

ஹார்மோன் உந்துதல்

ஹார்மோன் உந்துதல்

பொதுவாக, ஹார்மோன் உந்துதல் வெளிப்படும் இடங்களான கன்னம் மற்றும் தாடையில் பருக்கள் தோன்றும். அக்குடேன் உட்கொள்வது வழக்கமான சிகிச்சை முறை. ஆனால் அது, பிறவிக்குறைபாடு, க்ரான்ஸ் டிஸீஸ், தற்கொலை எண்ணங்கள் போன்ற பக்க விளைவுகள் கொண்டது. (1) அதனால் தான், வீட்டிலேயே இயற்கையாக இதற்கு தீர்வு காண்பதை நான் பரிந்துரை செய்கிறேன். நிச்சயமாக இது சந்தோசமான விளைவுகளைக் கொடுக்கும்.

புரோபயோடிக்

புரோபயோடிக்

புரோபயாடிக் உணவு மூலம் குடலுக்கும் தோலுக்கும் உள்ள இணைப்பை கவனிப்பது இந்த சிஸ்டிக் பருக்களை நீக்க மிகச்சிறந்த வழி. 1961-ல் நடந்த ஒரு ஆய்வில், பருக்கள் கொண்ட 300 பேருக்கு புரோபயாடிக் உணவு அளிக்கப்பட்டதில், 80 சதவீதம் பேர் முன்னேற்றம் கண்டுள்ளனர். (2) தோல் ஆரோக்கியத்திற்காக ப்ரோபையோட்டிக்ஸ் உபயோகிப்பது புதிதல்ல, எனினும் சமீப காலமாக அதன் பங்கு நன்கு கவனிக்கத் தக்கதாக உள்ளது. எனவே, முகப்பருக்களை கைகளாலோ விபரீதமான மருந்துகளாலோ தீர்வு காண முற்படும் முன் ப்ரோபையோட்டிக்ஸ் மூலம் எப்படி சிஸ்டிக் அக்னேயை சரி செய்து முகத்தை அழகாக கிளியராக வைத்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.

இயற்கையான முறையில் சிஸ்டிக் பருக்களை சரி செய்ய முடியுமா? அதிர்ஷ்டவசமாக முடியும். சிஸ்டிக் அக்னேயை குணப்படுத்த பல இயற்கை வழிகள் உள்ளன. அதில் மிக பயனுள்ளவைகளை பார்ப்போம்.

பருக்களை பிதுக்கக்கூடாது

பருக்களை பிதுக்கக்கூடாது

சிஸ்டிக் அக்னேவாக இருந்தாலும் சாதாரண முகப்பருவாக இருந்தாலும் அதை பிதுக்கக்கூடாது. பொதுவாக சிஸ்டிக் அக்னே மிக ஆழமாக இருப்பதால், பிதுக்குவது, பயன்தராது. மேலும் அது குணமடையும் காலத்தையும் அதிகரிக்கும். இந்த வகை பருக்களைத் பிதுக்கினால், அவை தோலுக்குள் பரவுவதற்கு வாய்ப்பு அதிகம். மேலும் முகத்தில் தழும்பையும் உண்டாகும். அதனால், சிஸ்டிக் அக்னேயை பொறுத்தவரை நாம் நினைவில் கொள்ள வேண்டியது, அவற்றை தொட கூடாது.

ஐஸ் வையுங்கள்

ஐஸ் வையுங்கள்

பருக்களின் மேல் ஐஸ் கட்டி வைப்பதால், அங்கு இருக்கும் இரத்த நாளங்களை கட்டுப்படுத்தி, கட்டியின் அளவையும், சிவந்திருப்பதையும் குறைக்க முடியும்.

ஸ்கின் கேர் ரோடின்

ஸ்கின் கேர் ரோடின்

மிகவும் நறுமணம் ஊட்டப்பட்ட, இரசாயனம் மிகுந்த மாய்ஸ்ட்டுரைஸர்ஸ் பயன்படுத்துவதை தவிர்த்து, சிம்பிள் ஸ்கின் கேர் ரோடின் பின்பற்றுவது சிறந்தது. மாய்ஸ்ட்டுரைஸர் அப்ளை செய்வதற்கு முன்பு தினமும் உங்கள் முகம் தளர்வாகவும், கிளீனாகவும் இருப்பது முக்கியம். ஆயில் பிரீ, நறுமணம் ஊட்டப்படாத மாய்ஸ்ட்டுரைஸர்ஸ் உபயோகிப்பது நல்லது.

தோலை நன்றாக வைத்துக்கொள்ள, கடுமையாக இல்லாத ஆரோக்கியமான எஸ்போலியன்ட்ஸ் உபயோகிப்பது நல்லது. கிலிகோலிக் ஆசிட் மற்றும் ப்ரூட் என்ஸைம்கள் சிறந்த தேர்வு. இயற்கையான சன் ஸ்க்ரீன்கள் உபயோகிப்பது சிறந்தது. இது முகழப்பருக்களால் ஏற்படும் தழும்புகள் விரைவில் குணமாக உதவும். இயற்கை வைட்டமின் சி உள்ள பொருட்கள் இதற்கு உதவும். ஆனாலும் சில சமயங்களில் சிஸ்டிக் ஆக்னே குணமாக மாதங்கள் ஆனாலும் மனம் தளர வேண்டாம்.

கண்ணாடி முன்னாடி

கண்ணாடி முன்னாடி

நீங்கள் கண்ணாடியில் உங்கள் முகப்பருவை அதிகம் பார்க்க பார்க்க மன உளைச்சலே ஏற்படும். நீங்கள் அதை கைகளால் பிய்த்து எடுக்க முற்பட்டு, முகப்பருக்கள் இன்னும் அதிகமாக உருவாக வழி வகுக்க நேரிடும். நேரிலும் மனத்திரையிலும் பருவை பற்றிய எதிர்மறை எண்ணங்களையும் மன உளைச்சலையும் விடுத்து, நேர்மறையாக அழகாக சிந்தியுங்கள்.

துண்டு மற்றும் தலையணை உறை

துண்டு மற்றும் தலையணை உறை

தினமும் உபயோகிக்கும் துண்டு மற்றும் தலையணை உறைகளை கடுமையான சோப்பு மற்றும் ப்ளீச் உபயோகித்து துவைப்பதை தவிர்த்து இயற்கையான சோப்பு உபயோகிக்கவும். உங்கள் துண்டு மற்றும் தலையணை உறைகளை அடிக்கடி மாற்றுவதால், பாக்டீரியா தொற்றினால் உங்கள் முகப்பருக்கள் அதிகரிப்பதை தடுக்கலாம்.

சிஸ்டிக் ஆக்னேக்கான டயட்

சிஸ்டிக் ஆக்னேக்கான டயட்

சில உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதன் மூலமாக, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரக்காமல் இருக்கும்படியும் பெரிய பெரிய வலி கொண்ட பருக்கள் உருவாகாமலும் தவிர்க்க முடியும். அப்படி நாம் தவிர்க்க வேண்டிய உணவுப்பொருள்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

வழக்கமான பால் பொருட்கள்

வழக்கமான பால் பொருட்கள்

நீங்கள் லேக்டோஸ் இன்டோலரெண்டாக இல்லாமல் இருந்தாலும் பால் பொருட்கள் ஜீரணமாவதற்கு சற்று கடிமானவையே. நிறைய பேருக்கு பால், சீஸ், ஐஸ் கிரீம் போன்ற பால் பொருட்களை தவிர்த்து முகப்பருக்கள் குறைந்திருக்கின்றன. இது உண்மையா என்று தெரிந்து கொள்ள சில நாட்களுக்கு பால் பொருட்களை உங்கள் டயட்டில் இருந்து விலக்கிப் பாருங்கள். பிறகு நீங்களே அவற்றை எந்த அளவு உட்கொள்ளலாம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். தரமான பால் பொருட்கள் உட்கொள்வது உடலுக்கு நல்லதும் கூட.

சர்க்கரை

சர்க்கரை

சக்கரை மற்றும் பிரட், பாஸ்தா போன்ற கிளைசெமிக் உணவுகள் உடல் அழற்சியை அதிகமாக்கும். இதனால் சிஸ்டிக் ஆக்னே அதிகமாகும். இதற்கு பதில் இயற்கையான ஸ்வீட்னர்ஸ் எடுத்துக்கொள்ளலாம். சக்கரையும் தானியங்களும் அதிகமாக எடுத்துக்கொள்வதால் கேண்டிடா, ஈஸ்ட் போன்ற பூஞ்சை தொற்று ஏற்பட்டு பருக்கள் அதிகமாக தோன்ற வாய்ப்பு உள்ளது.

காபின் மற்றும் சாக்லேட்

காபின் மற்றும் சாக்லேட்

நிறைய நிபுணர்கள் காபினுக்கும் பருக்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறலாம். ஆனால் காபின் ஹோர்மோன் இம்பாலன்ஸை ஏற்படுத்தி உங்கள் உடலில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் காபின் உட்கொள்வது உடலில் கார்டிசால் போன்ற மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹோர்மோன்களை சுரக்க வைக்கிறது. எனவே டீ, காபி போன்ற காபின் உள்ள பொருட்களை தவிர்ப்பதால் ஹோர்மோன்களை சமநிலையில் வைத்துக்கொள்வதுடன் சிஸ்டிக் ஆக்னேயையும் தடுக்கலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

பதப்படுத்தப்பட்ட பெரும்பான்மையான உணவுகளில் நார்ச்சத்துக்கள் மிகமிகக் குறைவாகவே இருக்கும். இந்த வகை உணவுகள் குடலுக்கும் தோல் ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல. குளிரூட்டப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மைக்ரோ வேவ் உணவுகள் குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை அழிக்கிறது. இதனால் அழற்சி ஏற்பட்டு பருக்கள் அதிகமாகின்றன.

ஃபாஸ்ட் புட்

ஃபாஸ்ட் புட்

இவையும் மிகவும் பதப்படுத்தப்பட்ட மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளே. மேலும் அவற்றில் எண்ணெய், செயற்கை சுவையூட்டி, சக்கரை அதிகம் உள்ளதால் அழற்சியையும் பருக்களையும் அதிகரிக்கும்.

உண்ணத்தகுந்த உணவுகள்

உண்ணத்தகுந்த உணவுகள்

ப்ரோபையோட்டிக் அதிகமுள்ள உணவுகள்: உங்கள் குடல் ஆரோக்கியத்தை பொறுத்து உங்கள் உடலில் நல்ல அல்லது தீய பாக்டீரியாக்கள் இருக்கும். நீங்கள் கேபிர், காய்கறிகள் ப்ரோபையோட்டிக் அதிகமுள்ள உணவு வகைகளை உட்கொள்ளும்போது நல்ல பாக்டீரியாக்கள் அதிகரித்து, அழற்சியை தடுக்கும். கொரியாவைச் சேர்ந்த 56 சிஸ்டிக் ஆக்னே கொண்டவர்களுக்கு லாக்டோபேசிலஸ் உள்ள பால் போன்ற பானம் தரப்பட்டதில் 12 வாரங்களில் அவர்களது முகப்பருக்கள் முன்னேற்றம் தெரிந்தது.

ஜிங்க் நிறைந்த உணவுகள்

ஜிங்க் நிறைந்த உணவுகள்

பருக்கள் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக ஜின்க் குறைவாக இருக்கும். அதனால், பீப், கொண்டை கடலை, பூசணி விதைகள், முந்திரி உண்பது ஜின்க் குறைப்பாட்டை தவிர்க்கும். ஜின்க் ஜீரணத்திற்கும் உதவுவதால், தோல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

வைட்டமின் A

வைட்டமின் A

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் பருகு்கள் வருவதைத் தடுக்கும். குறிப்பாக, பரட்டைக்கீரை, பசலைக் கீரை, கேரட் போன்றவை நோய் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களை நீக்கி பருக்களை விரைவில் குணமாக்கும்.

நார்ச்சத்து மிகுந்த உணவுகள்:

நார்ச்சத்து மிகுந்த உணவுகள்:

காய்கறிகள், பழங்கள், நட்ஸ், சீட்ஸ் மற்றும் ஓட்ஸ் குடலை சுத்தமாக்குவதுடன், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் அதிகரிப்பதால், பருக்கள் குணமாக உதவுகிறது.

புரத உணவுகள்:

புரத உணவுகள்:

மாட்டிறைச்சி, நாட்டுக்கோழி, மீன், முட்டை, ஆட்டிறைச்சி, பாதாம் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் இரத்தத்தில் உள்ள சக்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால், பருக்களை மிக எளிமையாகக் குணப்படத்துகின்றன. அதனால் தான் எல்லா வித பிரச்னைகளுக்குமே மிக அடிப்படையாக மருத்துவர்கள் புரத உணவுகளையும் நார்ச்சத்து கொண்ட உணவுகளையும் அதிகமாக பரிந்துரைக்கிறார்கள்.

கோலன் சத்துக்கள்

கோலன் சத்துக்கள்

ஹார்மோன்கள் கல்லீரலில் சுரப்பதால், கல்லீரலுக்கு பாதுகாப்பான உணவு வகைகளை உண்பது பருக்களை எளிதில் குணமாக்கும். ப்ரோக்கோலி, காலிஃப்ளார், பச்சைக்காய்கறிகள், நார் சத்து நிறைந்த பேரிக்காய், ஆப்பிள் போன்றவை கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கும். இவை அனைத்திலும் மிக அதிக அளவில் கோலன் என்னும் சத்து நிறைந்துள்ளது.

உட்கொள்ளவேண்டியவை

உட்கொள்ளவேண்டியவை

ப்ரோபையோட்டிக்ஸ் (10000 IU முதல் 50000 IU வரை, தினமும் இரண்டு அல்லது மூன்று காப்ஸ்யூல்கள் தினமும்). ப்ரோபையோட்டிக்ஸ் உட்கொள்ளவது உங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பருக்களை குணமாக்க உதவும். வெளிப்புற கவசம் போன்ற தோலில் அப்ளை செய்யும் ப்ரோபையோட்டிக்ஸ் கூட உபயோகிக்கலாம்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்:

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்:

(1000 மி.கி மீன் எண்ணெய்/காட் லிவர் ஆயில் அல்லது 3000 மி.கி. ஆளிவிதை ஆயில்/சியா விதை ஆயில்). ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அழற்சியை குறைத்து ஹார்மோன்களின் சமநிலைக்கு உதவும். காமா லினோலெனிக் ஆயில், மாலையில் ப்ரிம்ரோஸ், போரேஜ் ஆயில் போன்றவற்றை ஹார்மோன்களின் சமநிலைக்கு உட்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியில், 10 வாரங்கள் தொடர்ந்து காமா லினோலெனிக் ஆயில் அல்லது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உட்கொள்ளவது பரு சிதைவினால் ஏற்படும் அழற்சியை வெகுவாக குறைந்திருக்கிறது.

ஜிங்க்:

ஜிங்க்:

(25-35 மி.கி தினமும் இருமுறை). ஆய்வின் படி, பருக்கள் உள்ளவர்களுக்கு தோலிலும், இரத்தத்திலும் ஜிங்கின் அளவு குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே ஜின்க் உட்கொள்வது நல்லது. விடெக்ஸ் (160 மி.கி. விடெக்ஸ்) ஹார்மோன்களால் உருவான பருக்களுக்கு இது சிறந்த மருந்து. குக்லே/கக்குல்ஸ்டெரோன் (25 மி.கி. தினமும்). இது இந்திய வகையைச் சார்ந்த ஒரு மரத்தின் சாரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஒரு ஆய்வில், இது 500 மி.கி. டெட்ராசைக்ளினை விட நன்றாக செயல்படும் திறன் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரிலாக்ஸ்

ரிலாக்ஸ்

மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளவும். மனஅழுத்தம் பருக்களை அதிகரிக்கும் என்பதால், ரிலாக்ஸாக உணர்வது அழகான தோற்றத்திற்கு முக்கியம். மனதை அமைதியை வைத்திருந்தாலே நமக்கு உண்டாகும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளில் பாதி நெம்மைவிட்டு வெகுதூரம் ஓடிவிடும்.

தூக்கம்

தூக்கம்

நன்றாக தூங்குவது ஹார்மோன்களையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். எனவே இரவில் நன்றாக தூங்கி, பருக்கள் குணமாக இடம் கொடுங்கள். தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

வழக்கமான உடற்பயிற்சி நிணநீர் அமைப்பிற்கு சிறந்தது. நச்சு நீக்கத்திற்கும் உதவும். நமது மன நிலை மற்றும் சுய மரியாதைக்கு இது மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதால் தினமும் உடற்பயிற்சி செய்யவும்.

எஸ்ஸன்சியல் ஆயில்

எஸ்ஸன்சியல் ஆயில்

பருக்களின் மீது இரண்டு மூன்று சொட்டு தேயிலை மர எண்ணெய் மற்றும் லாவெண்டர் போன்ற எஸ்ஸன்சியல் ஆயில் உபயோகிக்கலாம். இது நேரடியாக உபயோகிக்க பாதுகாப்பானதும் கூட. சிலசமயங்களில் சென்சிடிவ் ஸ்கின்னாக இருந்தால், ஜஜோபா மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கலாம்.

தேயிலை மர எண்ணெயின் தன்மைகளை ஆராய்ந்து பார்த்ததில், அது பரு சிதைவை குறைத்திருப்பதும், மற்ற மேற்பூச்சுகள் போன்று நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. எஸ்ஸன்ஷியல் ஆயில் உபயோகிக்கும்போது நேரடியாக சூரிய ஒளி உங்கள் மீது படுவதை தவிர்க்கவும். அதிலுள்ள UV கதிர்கள், பருக்களின் மீது பட்டு, எரிச்சலையும், சிவப்பான தன்மையையும் உண்டாகும். அவ்வாறு எரிச்சல் உண்டானால், எஸ்ஸன்ஷியல் ஆயில் உபயோகிப்பதை நிறுத்தி விடவும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

முகம், தோள்பட்டை அல்லது முதுகில் பெரிய, சிவந்த, வலி மிகுந்த பருக்கள்

முடிச்சு போன்ற சிவந்த புடைப்பு

தோலுக்கு அடியில் சிதைவு

சுய மதிப்பில் குறைவு, உளவியல் ரீதியான துன்பம், குறிப்பாக பரு முகத்தில் வரும்போது.

தோல் சிகிச்சை நிபுணரால் சிஸ்டிக் அக்னேயை எளிதில் கண்டுபிடிக்க முடியும். இதற்கு எந்த தனிப்பட்ட டெஸ்டும் தேவை இல்லை.

காரணங்கள்

காரணங்கள்

பரம்பரை

பாலிசிஸ்டிக் ஓவரி போன்ற ஹார்மோன் மாற்றங்கள்

அதிக அளவிலான ஈரப்பதம் மற்றும் வேர்வை

தோல் துவாரம் அடைபடுதல், ஒவ்வாத முக, உடல் அழகு சாதனங்கள்.

சில மருந்துகள் (கார்டிகோ ஸ்டெராய்டு, லித்தியம், பெனிடோய்ன், ஐசோனியாசிட்)

சிஸ்டிக் ஆக்னே மற்றும் நுண்குருதிக்கலன் புடைப்பு (ரோசாசியா)

யாரை தாக்கும்?

யாரை தாக்கும்?

சிஸ்டிக் பருக்கள் முக்கியமாக இளைஞர்களையும், பெண்களையும் பாதிக்கிறது. ரோசாசியா வட மற்றும் தென் ஐரோப்பிய பெண்களை பாதிக்கிறது. 20 முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் இதில் அடக்கம். சுமார் 50 சதவீத ரோசாசியா பாதிப்பு உள்ளவர்கள் அக்குலர் ரோசாசியா எனப்படும் கண் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இதில் கண் சிவத்தல், வறட்சி, எரிச்சல், கண்ணுக்கு கீழ் செதில் செதிலாக ஏற்படுதல், தொடர்ச்சியான ஸ்டைஸ் போன்றவை உண்டாகிறது.

அழற்சி எதிர்ப்பு டயட் இவ்விரண்டையும் குணப்படுத்த உதவும். சிஸ்டிக் ஆக்னே அல்லது ரோசாசியா உள்ளவர்களுக்கு குடல் அழற்சி, எரிச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

ப்ரோபையோட்டிக்ஸ் ஆரோக்கியமான சிக்னல்ஸை தோலுக்கு அனுப்புவதால், பருக்களின் மீதான நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் திடீர் தாக்கம் தடுக்கப்படுகிறது.

பருக்கள் குணமாக நாட்கள் ஆகும் என்றாலும், இயற்கையான முறையில் அதை கையாள்வது நல்லது. உங்களது சுயமதிப்பை, மனநிலையை அது பாதிக்காதபடி பார்த்துக்கொள்வது முக்கியம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதால், நம் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல் பயிற்சி, நிறைய தண்ணீர் குடிப்பது, உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்வது, தோலை நன்றாக பராமரிப்பது போன்றவை சிஸ்டிக் ஆக்னே ஏற்படாமல் தடுக்கும் வழிகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Natural Cystic Acne Treatments That Really Work

Have you ever had large, red, painful breakouts? These breakouts can affect both men and women as young as 8 or as old 50.
Desktop Bottom Promotion