For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே இரவில் முகப்பருக்களைப் போக்க மாடல்கள் என்ன செய்வாங்க-ன்னு தெரிஞ்சுக்கணுமா?

இங்கு ஒரே இரவில் முகப்பருக்களைப் போக்க மாடல்கள் செய்பவைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

அழகைக் கெடுக்கும் வகையிலான ஒரு சரும பிரச்சனை தான் முகப்பரு. இந்த முகப்பரு சிலருக்கு கடுமையான வலியை உண்டாக்கும். இப்படிப்பட்ட பருக்கள் நடிகைகள் மற்றும் மாடல்களுக்கு வந்தால் என்ன செய்வார்கள், எப்படி அந்த பருக்களைப் போக்குவார்கள் என்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம்.

வலிமிகுந்த முகப்பருக்களைப் போக்க உலகில் உள்ள மாடல்களுள் சிலரும் இயற்கை வழிகளைத் தான் பின்பற்றுகிறார்கள் என்று தெரியுமா? அதுவும் நாம் பயன்படுத்தும் சில இயற்கை வழிகளைத் தான் அவர்களும் பின்பற்றி வருகிறார்கள். அது என்ன வழிகள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

முக்கியமாக மாடல்கள் பின்பற்றிய வழிகள் அனைத்துமே ஒரே இரவில் பருக்களை மறையச் செய்யும் வழிகளாகும். எனவே நீங்கள் உங்களுக்கு வரும் பருக்களை ஒரே இரவில் போக்க நினைத்தால், இவர்கள் பின்பற்றிய வழிகளைப் படித்து பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டீனா ஜான்சன்

டீனா ஜான்சன்

மாடல்களுள் ஒருவரான டீனா ஜான்சன், முகத்தில் வரும் பருக்களை வினிகர் பயன்படுத்தி நீக்குவாராம். ஒரே இரவில் பருக்கள் போக வேண்டுமானால், வினிகரை டோனர் போன்று பயன்படுத்துவாராம். இதனால் கடுமையான வலி மற்றும் எரிச்சலை சந்திக்க நேரிட்டாலும், ஒரே இரவில் பருக்கள் மறைவிடுமாம்.

கையா கெர்பர்

கையா கெர்பர்

மாடலான கையா கெர்பர், டூத் பேஸ்ட் அல்லது ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவாராம். பருக்களின் மீது ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தும் போது, அது சிவந்து போவதை தடுக்கும். பின் டூத் பேஸ்ட்டைத் தடவ, அதை உலர்த்திச் உதிர்த்துவிடும்.

அபியா பென்னெட்

அபியா பென்னெட்

இவரிடம் பருக்களைப் போக்க என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, நேர்மையாக, கைவிரலால் பிய்த்து எடுப்பேன்று என்று கூறினார். மேலும் பருக்களை நகங்களால் பிய்க்கும் போது, அது கரும்புள்ளிகளாக மாறத் தான் செய்யும். இருப்பினும் இவ்வாறு செய்யும் போது, பரு உள்ள இடம் வீக்கமின்றி இருக்கும். பின் அவ்விடத்தை சிக்ஸ் ஷேடு கன்சீலர் பயன்படுத்தி மறைப்பேன் என்றும் கூறினார்.

லெயிலா கோல்டுகுல்

லெயிலா கோல்டுகுல்

மாடல் லெயிலா, தன் முகச்சருமத்தை பருக்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ள LED மாஸ்க் போடுவாராம். இதனால் நீல நிற லைட் பாக்டீரியாக்களை அழிப்பதோடு, பருக்கள் வெடித்திருந்தால், 20 நிமிடத்தில் இருந்த இடம் தெரியாமல் மறையச் செய்துவிடும் என்றும் லெயிலா கூறினார்.

செலினா பாரஸ்ட்

செலினா பாரஸ்ட்

மாடல் அழகியான செலினா முகப்பரு பேடுகளைப் பயன்படுத்துவாராம். இந்த பேடுகளில் உள்ள இரு பக்கங்களில் ஒரு பக்கம் மென்மையாகவும், மறுபக்கம் சொரசொரவென்றும் இருப்பதால், இவற்றைப் பயன்படுத்தும் போது பருக்கள் விரைவில் போய்விடும் என்று கூறுகிறார்.

கிரேஸ் போல்

கிரேஸ் போல்

மாடல் கிரேஸ் தன் முகத்தில் வரும் பருக்களை இரவில் படுக்கும் முன் விரலால் பிய்த்து விடுவாராம். பின் அவ்விடத்தை மறைக்க மறுநாள் காலையில் எழுந்த பின் மாய்ஸ்சுரைசர் மற்றும் பவுடரை அவ்விடத்தில் பயன்படுத்துவாராம்.

மாட்லிடா டாட்ஸ்

மாட்லிடா டாட்ஸ்

மாடல் மாட்லிடா தன் முகத்தில் பருக்கள் வந்துவிட்டால், அதைப் போக்க காஸ்மெடிக்ஸ் பியூரிட்டி க்ளீன் என்னும் சரும பராமரிப்பு பொருளை வாங்கி, தினமும் 2 முறை சருமத்திற்கு பயன்படுத்துவாராம். இதனால் உடனடி பலன் கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

மே லாப்ஸ்

மே லாப்ஸ்

மாடல் அழகியான மே லாப்ஸ் தனக்கு வரும் முகப்பருவைப் போக்க ஆஸ்பிரின் மாத்திரைகளை பொடி செய்து, பருக்கள் மீது இரவில் படுக்கும் முன் பயன்படுத்துவாராம்.

மார்த்தே வெர்ஹாய்ப்

மார்த்தே வெர்ஹாய்ப்

மாடல் மார்த்தே தனக்கு வரும் பருக்களை மறைக்க கவர் ஸ்டிக் பயன்படுத்துவாராம். பருக்களை கிள்ளுவதற்கு பதிலாக இதைப் பயன்படுத்துவது சிறந்த வழியாக தனக்கு தோன்றுவதாகவும் அவர் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Is How Models Get Rid Of Pimples Overnight

Want to know how models get rid of pimples overnight? Read on to know more...
Desktop Bottom Promotion