For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெத்தென்ற பாதம் கிடைக்க யாருக்குதான் ஆசை இருக்காது? அது நீங்க செய்ய வேண்டிய ட்ரிக்ஸ் இதோ!!

அழகான துள்ளியெழும் பாதங்கள் பெற சூப்பர் வழிகள் இங்கே சொல்லப்பட்டுள்ளது.

By Suganthi Ramachandran
|

பாதங்கள் தான் நம்மை தாங்கி நிற்கும் உறுப்பாகும். இவற்றால் தான் நம்மால் நடக்க முடிகிறது. ஆனால் அப்படிப்பட்ட பாதங்களை நாம் கவனிப்பதே இல்லை. நீங்களே சொல்லுங்கள் தினமும் படுப்பதற்கு முன் உங்கள் கைகளுக்கு க்ரீம் மற்றும் முகத்திற்கு மாஸ்க் போட்டு பராமரிப்போம்.

ஆனால் நம் பாதங்களை பற்றி நாம் அக்கறை எடுத்துக் கொள்ளவதில்லை. ஒவ்வொரு நாள் இரவும் வெளியில் போய் விட்டு வந்து பாதங்களை கழுவ கூட நேரம் இல்லாமல் தூங்கி விடுகிறோம். இதனால் நம் பாதங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும். பாதங்களில் வலி, ஆணிகள், தோல் தடிப்பு போன்றவை ஏற்படும் போது தான் கவலை படுகிறோம்.

10+ Everyday Footcare Tips For Happy and Healthy Feet

அதற்குப் பிறகு தான் நமது ஸ்மார்ட் போனில் பாத பராமரிப்பு பற்றி தேட ஆரம்பிக்கிறோம். நீங்கள் ஆரோக்கியமான அழகான பாதங்கள் பெற அதனை தினமும் பராமரிக்க வேண்டும். அதற்காக தினமும் பார்லர் செல்ல வேண்டும் என்றோ அல்லது நிறைய பணம் செலவழிக்க வேண்டும் என்றோ ரொம்ப கஷ்டமாக யோசிக்காதீர்கள். உங்கள் பாதங்களை எளிதான சிறிய முறைகளை கொண்டே பட்டு போல் மாற்றி விடலாம். அப்படிப்பட்ட சில எளிமையான முறைகளை இங்கே பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.ஈரப்பதம் இல்லாமல் வைத்தல் :

1.ஈரப்பதம் இல்லாமல் வைத்தல் :

"நம் உடலின் எல்லா பகுதிகளும் வியர்க்கும் பல்வேறு உங்கள் பாதங்களும் வியர்க்கும். அதுவும் நீங்கள் ஷூ போட்டு இருந்தால் அதிகமாக வியர்க்கும். எனவே முதலில் உங்கள் ஷூ வை கழட்டி விட்டு ஒரு கைத்துண்டை பயன்படுத்தி பாதங்களை நன்றாக துடைக்க வேண்டும். இது தான் பாத பராமரிப்பின் முதல் படியாகும்.

2.வெறும் பாதங்களை தவிர்த்தல் :

2.வெறும் பாதங்களை தவிர்த்தல் :

நேரமும் காலமும் ஓடும் இக்காலத்தில் நாமும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். வெறுங்காலுடன் நடந்தால் உங்கள் பாதங்கள் பாதிக்கப்படும். வீட்டிற்குள்ளே காலில் காலணி இல்லாமல் நடந்தால் பரவாயில்லை நாம் நமது தரையை தூய்மையாக வைத்து இருப்போம். ஆனால் வெளியில் நீங்கள் செல்லும் போது கண்டிப்பாக சாதாரண காலணியை ஆவது அணிந்து செல்ல வேண்டும். இதனால் உங்கள் பாதம் அழுக்கு, தூசிகள் இவற்றில் இருந்து பாதுகாக்கப்படும்.

3. பாதங்களை தேய்த்தல் மற்றும் சுத்தப்படுத்துதல் :

3. பாதங்களை தேய்த்தல் மற்றும் சுத்தப்படுத்துதல் :

தினமும் குளிக்கும் போது தண்ணீரால் பாதங்களை கழுவினால் போதாது. அதை நன்றாக தேய்த்து அல்லது பியூமிஸ் கல் கொண்டு தேய்க்க வேண்டும். மேலும் மைல்டு ஷாம்பு கொண்டு பாதங்களை சுத்தப்படுத்த வேண்டும். இப்படி தினமும் செய்தால் உங்கள் பாதம் பட்டு போன்று மாறி அழகு பெறும்.

4.பாத பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குங்கள்

4.பாத பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குங்கள்

உங்களால் அழகான பாத பராமரிப்பு செய்ய முடியும். ஆனால் உங்கள் பாதங்களுக்கு எந்த மாதிரியான பராமரிப்பு தேவை என்பதை சொல்ல முடியாது. எனவே மாதத்திற்கு ஒரு முறையாவது பார்லர் சென்று கைதேர்ந்த எக்ஸ்பட்டிடம் பராமரிப்பு மேற்கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு வெவ்வேறு விதமான பராமரிப்பு முறைகளை மேற்கொள்வர். உங்கள் பாத பிரச்சினைக்கு தகுந்த மாதிரி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

5.பாதங்களுக்கு ஓய்வு கொடுங்கள் :

5.பாதங்களுக்கு ஓய்வு கொடுங்கள் :

உங்கள் உடலை விட அதிகமான களைப்பை அடைவது பாதங்கள் ஆகும். அது சோர்வால் வலுவிழந்து வலியால் துடி துடிக்கும். எனவே உங்கள் பாதங்களுக்கும் ஓய்வு தேவை. இதற்கு நீங்கள் பட்டு போன்ற மென்மையான புல்வெளிகளில் அல்லது மெத்தைகளில் உங்கள் பாதங்களை வைத்து ஓய்வெடுங்கள். இது உங்கள் பாதங்களுக்கு புத்துணர்ச்சி தந்து துள்ளி எழ வைக்கும்.

6.பாத நகப் பராமரிப்பு :

6.பாத நகப் பராமரிப்பு :

உங்கள் பாதங்களுக்கு அழகு தரும் அடுத்த விஷயம் நகங்கள் ஆகும். எனவே அவ்வப்போது உங்கள் நகங்களை பராமரியுங்கள். நகம் வெட்டி கொண்டு நகங்களில் உள்ள அழுக்கு மற்றும் நகத்தை சீராக்குங்கள். இப்படி தொடர்ந்து நகங்களை பராமரித்தால் நகங்கள் அழகாகுவதோடு உங்கள் பாதங்களும் அழகாகும்.

7.சரும நிபுணர்களிடம் செல்வதை அலட்சியம் செய்யாதீர்கள் :

7.சரும நிபுணர்களிடம் செல்வதை அலட்சியம் செய்யாதீர்கள் :

உங்கள் பாதங்களில் ஆணிகள், பூஞ்சை தொற்று, பாதங்களின் கலர் மாறுதல் போன்றவை ஏற்பட்டால் சரும நிபுணர்களை ஆலோசியுங்கள். இந்த மாதிரி தீவிர பிரச்சினை இருந்தால் எளிதான டிப்ஸ்களை பயன்படுத்தி சரிபண்ணி விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு தக்க நேரத்தில் மருத்துவரை நாடுவதே சிறந்தது. இது உங்கள் பாதங்களை மிகுந்த பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.

8.சரியான காலணிகளை அணிதல் :

8.சரியான காலணிகளை அணிதல் :

நிறைய பாதப் பிரச்சினைகளுக்கு காரணம் நாம் சரியான காலணிகளை தேர்ந்தெடுக்காதே காரணமாகும். பேஷன் என்ற பெயரில் மற்றும் விலை அதிகமாக செலவழிக்க பயந்து விலை குறைவான காலணிகளை வாங்குவதாலும் பிரச்சினை வருகிறது.

எனவே நல்ல பொருட்களில் செய்யப்பட்ட உங்களுக்கு தகுந்த காலணிகளை தேர்ந்தெடுத்து பாதங்களை அழகாக்குங்கள். உங்கள் காலணிகள் பாதங்களுக்கு அழகாக இருப்பதோடு உங்கள் பாதங்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10+ Everyday Footcare Tips For Happy and Healthy Feet

10+ Everyday Footcare Tips For Happy and Healthy Feet
Story first published: Wednesday, June 21, 2017, 12:58 [IST]
Desktop Bottom Promotion