Latest Updates
-
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது..
முகப்பருக்கள், தோல் சுருக்கம் போக்கி முகத்தின் நிறத்தை மேம்படுத்தும் கொத்தமல்லி!
கொத்தமல்லியின் அழகு குறிப்புகள்
கொத்தமல்லி இலை நமது சமையலை அலங்கரிப்பதற்கும், நல்ல வாசனையை சமையலுக்கு கொடுப்பதற்கும், சுவைக்காவும் தான் பயன்படுத்தியிருப்போம். ஆனால் கொத்தமல்லியை உங்களது சமையலை அலங்கரிப்பதற்கு மட்டுமின்றி உங்களை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா?

இதில் மிக அதிகமான வாசனை அடங்கியுள்ளது. இது வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.இதன் வாசனை உங்களது மனதை ரிலாக்ஸ் செய்யவும் உதவியாக இருக்கும். இதனை அழகிற்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. கொத்தமல்லி மற்றும் கற்றாழை
அரைத்த கொத்தமல்லி இலையின் விழுதுடன் கற்றாழையை கலந்து முகத்திற்கு அப்ளை செய்வதால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகிறது. உங்களுக்கு இளமை தோற்றம் கிடைக்கிறது.

2. கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை
கொத்தமல்லி இலை சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதால், நீங்கள் நம்ப முடியாத மாற்றத்தை உணரலாம். முகத்தில் உள்ள முகப்பருக்கள், இறந்த செல்கள் எல்லாம் நீங்கி முகம் பொலிவடையும்.

3. பேஸ் பேக்
கொத்தமல்லி இலையை அரைத்து அதில் பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் ஒளி பெரும். பார்பவர்கள் வியக்கும் அளவுக்கு முகம் மாறும்.

4. பேஸ் பேக் 2
கொத்தமல்லி இலை, புழுங்கல் அரிசி சாதம், யோகார்ட் போன்றவற்றை நன்றாக அரைத்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் பளபளக்கும்.

5. ஓட்ஸ்
கொத்தமல்லி இலை, சந்தனம், ஓட்ஸ் ஆகியவற்றை கொண்டு பேஸ் பேக் போடும் போது மிகச்சிறந்த பலன் கிடைக்கும்.

6. தசைகளுக்கு ஊட்டமளிக்கும்
கொத்தமல்லி முகத்தில் உள்ள தசைகளுக்கு ஊட்டமளித்து முகத்தின் தோற்றத்தை மேம்படுத்தும். முகத்தை பிரஷ் ஆக காட்டும்.

7. முகப்பருக்கள்
முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள் இதனை தொடந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும், கிளியர் சருமத்தை பெற முடியும்.

8. உதடுகள் நிறம் பெற
உதடுகள் நல்ல நிறம் பெற கொத்தமல்லி இலையின் சாறு உதவியாக இருக்கும். இது அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது. இது முகப்பருக்களை மட்டுமல்லாமல், அதன் தழும்புகளையும் போக்குகிறது. முக சுருக்கங்களை நீக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications