For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மழைக்காலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய மேக்கப் சாதனங்கள்!!

மழைக்காலத்தில் உங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கான சில மேக்கப் பொருட்களை சற்றே ஒதுக்கி வைக்க வேண்டும். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு

By Suganthi Rajalingam
|

மழைக்காலம் வந்தாலே நம்மை நிறைய வகைகளில் தொந்தரவுகளும் தொத்திக் கொள்கின்றன. இதனால் நமது தினசரி வேலைகளை செய்வதிலும் நமக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே தான் நீங்கள் வெளியில் செல்வதற்கு முன்னாடி இந்த மழைக்காலத்தை கருத்தில் வைத்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த காலத்தில் உங்கள் சருமம் மற்றும் கூந்தலை பேணிக்காக்க சில நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் எல்லாம் பாழாகி விடும் அல்லவா.

Makeup Products That Should Be Avoided During Monsoon

எனவே உங்கள் உடை மற்றும் மேக்கப்பில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. கண்டிப்பாக இந்த மழைக்காலத்தில் வெளியே செல்லும் போது அடர்ந்த நிற வர்ணங்கள் நிறைந்த உடைகளை தேர்ந்தெடுத்து உடுத்துங்கள். சகதி மற்றும் சாக்கடை நிறையவே நிரம்பி வழியும் இக்காலத்தில் இதனால் ஹை ஹீல்ஸ் போட்டு கவனமாக நடப்பது நல்லது.

இக்காலத்தில் குட்டை பாவாடையை போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இந்த சீசனில் அதிகமாக காற்றடிக்க வாய்ப்புள்ளது.

கருப்பான பெண்கள் எப்படி தங்களை கல்யாணத்திற்கு அழகுபடுத்திக் கொள்ளலாம்?

எதற்கும் ஒரு முன்னெச்சரிக்கையாக இன்னொரு செட் ட்ரெஸ் மற்றும் செப்பல் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இக்காலத்தில் நம்ம மேக்கப்க்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இக்காலத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் மாய்ஸ்சரைசர் நமது சுற்றுப் புறத்திலே இருப்பதால் நம்ம மேக்கப் எளிதாக கலைய வாய்ப்புள்ளது.

ஆனால் நீங்கள் இதற்காக கவலைப்பட வேண்டாம். அதற்கான மாற்றங்களை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம் இதற்கு சில மேக்கப் பொருட்களை இந்த மழைக்காலத்தில் சற்றே ஒதுக்கி வையுங்கள்.

சரி வாங்க இந்த மழைக்காலத்திற்கான சில மேக்கப் நடவடிக்கைகளை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தினசரி மேக்கப்

1. தினசரி மேக்கப்

முதலில் வாட்டர் ப்ரூவ் மேக்கப் பொருட்களை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தால் அதன் விலை அதிகமாகி உங்களை பேரம் பேச வைத்து விடும். இந்த வாட்டர் ப்ரூவ் பொருட்கள் உங்கள் மேக்கப் அழகை மழைக்காலத்தில் காப்பாற்ற உதவும்.

2.கண் மை

2.கண் மை

மழைக்காலத்தில் கண் மையால் உங்கள் கண்களை அழகுபடுத்துவதை தவிருங்கள். ஏனெனில் இது அழிந்து பரவி உங்கள் கண்களை அசிங்கமாக்கி விடும். அதற்கு பதிலாக ஜெல் டைப் ஐ - லைனர் பயன்படுத்தலாம். இது நீண்ட நேரம் அழியாமலும் வாட்டர் ப்ரூவ் ஆக இருப்பதால் மழையில் அழியாமலும் இருக்கும்.

3. லிக்விட் பவுண்டேஷன்

3. லிக்விட் பவுண்டேஷன்

லிக்விட் பவுண்டேஷன் கண்டிப்பாக இந்த மழைக்காலத்தில் உங்கள் முகத்தில் நிலைத்து நிற்காது. இதற்கு பதிலாக பிபி க்ரீம் மற்றும் பவுடர் மேக்கப் மட்டுமே நிலைத்திருக்கும். அதிகமான கவரேஜ் தேவைப்பட்டால் மேட் பவுண்டேஷன் மூலம் லேசான கவரப் மட்டுமே செய்து கொள்ளுங்கள்.

4.லிப் கிளாஸ்

4.லிப் கிளாஸ்

இந்த காலத்தில் உங்கள் லிப்ஸ்க்கு மேட் லிப்ஸ்டிக் சிறந்தது. உங்கள் லிப் கிளாஸ் சீக்கிரமே அழிய வாய்ப்புள்ளது. எனவே க்ரீமி மேட் லிப்ஸ்டிக் உங்களுக்கு நீண்ட நேர அழகை கொடுக்கும்.

5. கூந்தல் பராமரிப்பு பொருட்கள்

5. கூந்தல் பராமரிப்பு பொருட்கள்

தினசரி பயன்படுத்தும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை இக்காலத்தில் தவிர்த்து விடுங்கள். இது உங்களுக்கு சிறந்த பலனை தருவதில்லை.

மழைக்காலத்தில் அதிகமாக சிக்கலான முடியாக இருக்கும். எனவே இதற்கு ஹோம் மேடு ஹேர் மாஸ்க் பயன்படுத்தினால் உங்கள் சிக்கலான கூந்தலிருந்து பணமும் நேரமும் செலவழியாமல் எளிதாக பலனை பெறலாம்.

நமது சருமமும் கூந்தலும் இக்காலத்தில் அதிகப்படியான மழையால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். ஒண்ணே ஒண்ணை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் ஈரமான கூந்தலுடன் தூங்க வேண்டாம்.

நன்றாக ஹேர் ட்ரையர் பயன்படுத்தி உலர்த்தி விட்டு தூங்க செல்லுங்கள். ஈரமான தலைமுடியால் சளி மற்றும் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே இந்த மழைக்காலத்தில் உங்கள் சருமம் மற்றும் கூந்தலை நன்றாக உலர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Makeup Products That Should Be Avoided During Monsoon

Makeup Products That Should Be Avoided During Monsoon
Story first published: Friday, August 18, 2017, 15:55 [IST]
Desktop Bottom Promotion