For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டிகை காலத்தில் பெண்கள் மேக்கப் போடுவதற்கு சில டிப்ஸ் !!

பண்டிகை காலத்தில் அழகாக மேக்கப் செய்து கொள்ள இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் உதவும்.

By Ambika Saravanan
|

பெண்கள் என்றாலே அழகு என்று தான் பொருள். அதுவும் பண்டிகை காலங்களில் பெண்கள் அழகான புடவை, ஆபரணம் என்று அணிந்து இன்னும் அழகாக தோன்றுவர் . இந்த அழகுக்கு அழகு சேர்ப்பது தான் மேக் அப் எனப்படும் ஒப்பனை.

சரியான ஒப்பனை பொருட்களை வாங்கி பயன்படுத்துவது என்பது மிகவும் முக்கியம். இன்று சந்தைகளில் பல தரப்பட்ட ஒப்பனை பொருட்கள் பல விதமான விலையில் கிடைக்கின்றன. அவற்றுள் நமக்கும் நமது சருமத்திற்கும் உகந்த பொருட்களை பார்த்து வாங்குவது அவசியம்.

Makeup Essentials To Prepare The Perfect Makeup Box For The Upcoming Festive Season

ஒரு மேக் அப் பெட்டியில் இருக்க வேண்டிய மேக்கப் பொருட்களை பற்றியது தான் இந்த தொகுப்பு. இதில் கொடுக்க பட்டிருக்கும் பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தும் போது ஒவ்வொரு பெண்ணும் தேவதை தான்.

சரும பாதுகாப்பு :

மேக் அப் போடுவதற்கு முன்னும் பின்னும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது சரும பாதுகாப்பு பற்றி தான். சருமத்தை சீராக பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல் மேக் அப் போடுவதால் எந்த பலனும் இல்லை.

தேவையானவை:

கிளென்சர் - மூலப் பொருள் தண்ணீர், எண்ணெய், பால் எதுவாகவும் இருக்கலாம்
மாய்ஸ்சரைசர்
டோனர்
ஸ்க்ரபர்
நைட் க்ரீம்
கண் க்ரீம்
ஆயில் கண்ட்ரோல் ஹைட்ரேடர்
மேக் அப் ரிமூவர்
ஹான்ட் சானிடைசேர்
கண் மேக்கப் ரிமூவர்

பேஸ்(Base ) மேக்கப் :

முகத்திற்கு போடும் முதல் லேயர் மேக்கப் தான் பேஸ் மேக்கப் . இதுவே அடிப்படை ஆகும். ஆகையால் உங்கள் சருமத்திற்கு ஏற்ற வகையில், பவுன்டேஷனுடன் சேர்த்து இதனை போட வேண்டும். பவுன்டேஷன் மட்டுமே பேஸ் மேக்கப் என்பது தவறான புரிதல். பேஸ் மேப்பிற்கு தேவையான பொருட்கள் :

கன்சீலர் (திரவம்/ஸ்டிக்/க்ரீம்)

ஸ்பாட் கன்சீலர்

கலர் திருத்தும் கன்சீலர்

பவுண்டஷன்

பவுண்டஷன் வகைகள்:

க்ரீம்/திரவம் பவுன்டேஷன்

பவுடர் பவுன்டேஷன்

மினெரல் பவுன்டேஷன்

ஆயில் - ப்ரீ பவுன்டேஷன்

ஷிம்மர் பவுன்டேஷன்

வாட்டர் ப்ரூப் பவுன்டேஷன்

BB க்ரீம்

பிரைமர்

பேஸ் பவுடர்

பினிஷிங் பவுடர்

கண்களுக்கு மேக்கப் :

கண் சிகிச்சை நிபுணரால் பரிசோதிக்கப்பட்ட பொருட்களை வாங்குவது நல்லது. தரத்தை பரிசோதிக்காமல் வாங்கும் போது கண்களை பாதிக்கும் அபாயம் உள்ளது.

தேவையான பொருட்கள்:

காஜல்

அண்டர் ஐ கன்சீலர்

ஐப்ரோ பென்சில்

ஐ லாஷ் கர்லேர்

மஸ்காரா

லிப் மேக்கப் :

உதட்டில் போடும் மேக்கப் முழு முகத்தையும் எடுத்துக் காண்பிக்கும். ஆகையால் உதட்டில் மேக்கப் போடும் போது கவனம் முக்கியம். உதட்டின் வடிவத்தை சரியாக உருவாக்குவது மிகவும் முக்கியம்.

தேவையான பொருட்கள்

லிப் ஸ்டைன்

லிப் ஸ்டிக்

லிப் லைனர்

லிப் பாம்

லிப் ஸ்க்ரப்

லிப் க்ளோஸ்

மேலே குறிப்பிட்ட மேக்கப் பொருட்களை கச்சிதமாக பயன்படுத்த சிறந்த ப்ரஷ்கள் தேவை. இதனுடன் சேர்த்து சில பொருட்கள் அவசியம் உங்கள் ஒப்பனை பெட்டியில் இருக்க வேண்டும். அவை:

டுவீசர்

பவுன்டேஷன் ஸ்பாஞ்

க்யூட்டிகிள் சிசர்

ட்ரிம்மிங் சிஸேர்

காட்டன்

ஊக்கு(Safety Pin )

ஐ ஷடோ

இந்த லிஸ்ட் மிகவும் நீண்டதாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா.? இதனை பயன்படுத்தி பாருங்கள். இதில் கொடுக்கப்பட்டுள்ளதை காட்டிலும் அதிக பொருட்களை வாங்கி உங்களை அழகாக்க விரும்புவீர்கள்.

இவற்றோடு சேர்த்து

ப்ளோட்டிங் பேப்பர்

காட்டன் ஸ்ட்ரிப்

மேக்கப் வைப்ஸ்

டிஷ்யூ பேப்பர்

போன்றவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் .

English summary

Makeup Essentials To Prepare The Perfect Makeup Box For The Upcoming Festive Season

Makeup Essentials To Prepare The Perfect Makeup Box For The Upcoming Festive Season
Desktop Bottom Promotion