For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாராணிகள் எல்லாம் தங்கம் போல ஜொலிக்கும் அழகுடன் இருக்க இந்த விதை தான் காரணமா?

பாதாமை முகத்திற்கு பயன்படுத்துவது எப்படி

By Lakshmi
|

பாதாம் ஒரு மிகச்சிறந்த மருத்துவ பொருளாகும். இதில் ஏராளமான அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. இதனை சாப்பிட்டாலும் கூட உங்களது மிகவும் பொலிவு பெறும். மூளைக்கும் இந்த பாதாம் மிகச்சிறந்த ஒன்றாக உள்ளது. இந்த பாதாமை உங்களது முகத்திற்கு உபயோகிக்கும் போது, இது உங்களது முகத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.

மேலும் பாதாம் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்தது...! பாதாம் உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள், கருமை போன்றவற்றை நீக்கி உங்களது முகத்தை பூப்போல மாற்ற உதவுகிறது...! இதனால் உங்களுக்கு மிருதுவான சருமம் கிடைக்கிறது...!

How to use badam for problem free skin

நீங்கள் அழகுக்காக பல கெமிக்கல் பொருட்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டு இருப்பீர்கள்.. ஆனால் அவை எல்லாம் உங்களது முகத்திற்கு கெடு விளைவிப்பவையாகவே இருக்கும். ஆரம்ப காலத்தில் முகத்திற்கு பொலிவை கொடுப்பது போல தெரிந்தாலும், நாட்கள் செல்ல செல்ல அது உங்களது முகத்தை சீரழித்துவிடும்...! இந்த பகுதியில் இயற்கையின் வரப்பிரசாதமான இந்த பாதாமை கொண்டு வசிகரிக்கும் அழகினை பெறுவது எப்படி என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. அனைத்து வகையான சருமத்திற்கும்...

1. அனைத்து வகையான சருமத்திற்கும்...

பாதமை உடைத்து போட்டு இரவு முழுவதும் நன்றாக தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்... பின் காலையில் பாதாமை பசும் பால் கலந்து அரைத்து அதனை முகத்திற்கு பேக் போடுங்கள்.. இது காய்ந்ததும், குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்...!

இதனை ரெகுலராக பயன்படுத்தி வந்தால் உங்களது முகத்தில் ஒவ்வொரு இடங்களில் உள்ள கருமை நீங்கி உங்களது முகம் ஒரே சரிசமமான நிறத்தை பெறும்.. மேலும் வெல்வெட் போன்ற மென்மையான சருமமும் கிடைப்பது உறுதி...! இது சென்சிடிவ் ஆன சருமத்திற்கும் ஏற்றது...!

2. எண்ணெய் பசை சருமத்திற்கு

2. எண்ணெய் பசை சருமத்திற்கு

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் உங்களது முகத்தில் அதிகமாக பருக்கள் வர வாய்ப்புகள் உள்ளது. இதற்கு இரவு முழுவதும் பாதாமை ஊற வைத்து, அதில் யோகார்ட்டை சேர்த்து பேஸ்ட் போல செய்து உங்களது முகத்திற்கு அப்ளை செய்யுங்கள்...

இந்த முறையை செய்வதன் மூலமாக உங்களது சருமத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையை போக்கலாம். அதுமட்டுமின்றி இது எண்ணெய் பசையை போக்கி உங்களது சருமத்திற்கு பொலிவு அளிக்கிறது.

3. பப்பாளி

3. பப்பாளி

நீங்கள் எண்ணெய் பசை சருமத்திற்காக பாதாம் உடன் பப்பாளியை சேர்த்து கூட உங்களது சருமத்திற்கு பேக் போடலாம். இது உங்களது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது.

4. முல்தானி மட்டி

4. முல்தானி மட்டி

நீங்கள் இந்த பாதாமை முல்தானி மட்டியுடன் கலந்தும் கூட பயன்படுத்தலாம் இது உங்களது சருமத்திற்கு மிகவும் சிறந்தது.. முல்தானி மட்டி, ரோஸ் வாட்டர் போன்றவற்றை கலந்து பனிக்காலத்தில் பயன்படுத்தலாம்.

5. வறண்ட சருமத்திற்கு...

5. வறண்ட சருமத்திற்கு...

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பாதம், ஒட்ஸ், பால் போன்றவை மிகச்சிறந்த பலனை கொடுக்கும். இதற்கு பாதாமை நன்றாக ஊற வைக்க வேண்டும். இதில் ஓட்ஸ், பால் போன்றவற்றை கலந்து உங்களது சருமத்திற்கு பேக் போடுங்கள். இதனால் உங்களது சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்கும்.

6. வாழைப்பழம்

6. வாழைப்பழம்

பாதாமை வாழைப்பழத்துடன் கலந்து பேஸ் பேக் போடுவதும் கூட வறண்ட சருமத்திற்கு நல்ல பலனை தரும். இதனையும் நீங்கள் டிரை செய்து பார்க்கலாம்.

7. சரும நிறத்தை அதிகரிக்க

7. சரும நிறத்தை அதிகரிக்க

உங்களது சரும நிறத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த முறையை பயன்படுத்தலாம்... ஊற வைத்து அரைத்த பாதாம் உடன் எலுமிச்சை சாறை கலந்து முகத்திற்கு அப்ளை செய்தால் உங்களது முகம் பளபளப்பாக மாறும்.

8. சந்தன பவுடர்

8. சந்தன பவுடர்

முகத்தின் நிறம் அதிகரிக்க வேண்டும் என்றால் நீங்கள் சந்தன பவுடரை எடுத்து ஊற வைத்து அரைத்த பாதாமுடன் கலந்து முகத்திற்கு தடவினால் உங்களது முகம் பளபளக்கும். இதனுடன் பாலையும் சேர்த்துக் கொண்டால் சிறப்பான பலனை பெறலாம்.

 9. கடலை மாவு

9. கடலை மாவு

ஊற வைத்து அரைத்த பாதமுடன் கடலை மாவு, மஞ்சள், பால் ஆகியவற்றை கலந்து முகத்திற்கு பேக் போட்டால் உங்களது முகம் பளபளப்பாக மாறும். இது உங்களது சரும நிறத்தை மேம்படுத்தி உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

10. பருக்கள் இருக்கா?

10. பருக்கள் இருக்கா?

பாதாமை இலவங்கப்பட்டை பவுடர் உடன் கலந்து முகத்திற்கு பேக் போடுங்கள். இது உங்களது முகத்தில் பருக்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.. இதனை உபயோகித்தால் உங்களது முகத்தில் நல்ல வித்தியாசம் தெரிவதை கண்கூடாக காணலாம்.

11. வயதான தோற்றமா?

11. வயதான தோற்றமா?

உங்களது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் போன்றவை உங்களுக்கு வயதான தோற்றத்தை கொடுக்கும். இந்த பிரச்சனைக்கு தீர்வு பாதாமிற்குள் தான் இருக்கிறது.. ஆலிவ் ஆயில், யோகார்ட் ஆகியவற்றுடன் பாதாமை கலந்து முகத்திற்கு பேஸ் பேக்காக அப்ளை செய்யுங்கள்... இந்த பேஸ் பேக்கை தொடர்ந்து பயனபடுத்துவதன் மூலமாக உங்களது சருமம் புதுப்பொலிவு பெறும்.

12. கற்றாழையுடன்

12. கற்றாழையுடன்

சில பாதம்களை நன்றாக ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டில் சிறிதளவு கற்றாழை ஜெல்லை மிக்ஸ் செய்ய வேண்டும். இதனை முகத்திற்கு அப்ளை செய்யுங்கள். இது சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கும் மிகவும் ஏற்றதாகும். இதனை வாரத்தில் மூன்று முறை செய்வதன் மூலமாக உங்களது சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைவது தெரியும்.. சருமம் க்ளியராக இருக்கும்.

13. ஆரஞ்ச் பவுடர்

13. ஆரஞ்ச் பவுடர்

பாதாம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க பயன்படுகிறது. சிறிதளவு பாதாமை எடுத்து அரைத்து, ஆரஞ்ச் பவுடர் உடன் கலந்து உங்களது முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும். சிறதளவு பாலையும் இதனுடன் சேர்த்து அடர்த்தியாக மாஸ்க் போடுவது சிறந்தது. இது காயந்ததும், கழுவுவதற்கு முன்னால், சிறதளவு பாலை கைகளில் தொட்டுக் கொண்டு, முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தை கழுவி விடுங்கள்.. இந்த மசாஜ் செய்வதன் மூலமாக உங்களது சருமத்திற்கு ஒரு ஒளி கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to use badam for problem free skin

How to use badam for problem free skin
Desktop Bottom Promotion