Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
சருமத்தில் உள்ள முகப்பருவினால் உண்டான குழிகளை நிமிடத்தில் சரி செய்யலாம்!
முகத்தில் உள்ள குழிகளை நீக்குவது எப்படி
சருமத்தில் உள்ள துளைகள் உங்களது முகத்தை அசிங்கமாக வெளிப்படுத்தும். சரும துளைகளை எத்தனை நாட்கள் தான் மெக்கப் போட்டே மறைத்துக் கொண்டு இருப்பீர்கள்...? இந்த சருமத்துளைகளை மிக எளிமையான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி தீர்க்கலாம்...
இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கையான வழிமுறைகளை நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால், உங்களுக்கான நல்ல பலனை எளிதாகவும் விரைவாகவும் பெறலாம்... இந்த செயல்முறைகளால் உங்களது முகத்திற்குக் எந்த ஒரு தீமையும் உண்டாகது என்பது குறிப்பிடத்தக்கது...

1. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க உதவும். அதற்கு அதன் குளிர்ச்சித் தன்மை தான் காரணம். எனவே வெள்ளரிக்காயை துருவி, அதில் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம்.

2. முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவிற்கு முகத்தில் உள்ள குழிகளை மறைக்கும் சக்தி உள்ளது. அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள குழிகளை மறைக்கலாம்.

3. பப்பாளி
பப்பாளி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மட்டுமின்றி, முகத்தில் உள்ள குழிகளையும் தான் மறைக்கப் பயன்படுகிறது. எனவே நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவு வேண்டும்.

4. தக்காளி
உண்மையில் முகத்தில் உள்ள குழிகள், சருமத்துளைகள் திறந்து, மீண்டும் மூடாமல் இருப்பதால் ஏற்படும். தக்காளி திறந்துள்ள சருமத்துளைகளை மூட உதவும் எனவே தக்காளியை அரைத்து முகத்தில் தடவி மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

5. ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு தோல் பவுடர் இரண்டு டீஸ்பூன், பால் அல்லது பால் க்ரீம், தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஆகியற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆரஞ்சு தோல் பவுடரையும் பால் அல்லது பால் க்ரீமையும் கலந்து கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து உங்களது முகத்தில் பரவலாக மசாஜ் செய்யுங்கள். இதனை 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

6. ஐஸ்கட்டிகள்
ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தில் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள சரும துளைகள் மறைந்து சருமம் சமநிலையை அடையும்.

7. தக்காளி, சர்க்கரை
தக்காளியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் சருமத்தில் உள்ள துளைகளை சுருங்க செய்வதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளையும் வெளியேற்றும். முதலில் தக்காளியை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை சர்கரையில் தொட்டுக் கொள்ள வேண்டும். பின் அந்த தக்காளியை சருமத்தில் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். பின்னர் முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள துளைகள் மூடப்படும். சருமத்தில் உள்ள துளைகள் படிப்படியாக மறையும்.

8. பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா சருமத்தில் உள்ள பருக்களை சுருங்கச் செய்வதோடு, சருமத்தில் உள்ள துளைகளையும் மூட செய்யும்.. பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின் பேக்கிங் சோடாவை சருமத்தில் 30 நிமிடங்கள் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்களது சருமம் சென்சிடிவ் சருமம் என்றால் இந்த முறையை தவிர்த்து விடுங்கள்.

9. எலுமிச்சை சாறு
முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் விரிவடைந்த சரும் துளைகள் சுருங்க ஆரம்பிக்கும்.

10. அன்னாசி பழம்
இரண்டு டீஸ்பூன் அன்னாசி பழ சாறுடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமத்தில் உள்ள துளைகள் நீங்கும்.

11. கடலை மாவு
கடலை மாவில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகத்தில் உள்ள பள்ளங்கள் மெதுவாக மறைவதை நன்கு காணலாம்.

12. பாதாம் பேஸ்ட்
பாதாமில் வைட்டமின் ஈ ஏராளமாக நிறைந்துள்ளது. இது திறந்துள்ள சருமத் துளைகளை மூட உதவும். அதற்கு சிறிது பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

13. தேன் மற்றும் சர்க்கரை
தேன் மற்றும் சர்க்கரை கூட சருமத்தில் உள்ள பள்ளங்களை மறைக்க உதவும். அதிலும் தேன் சிறந்த டோனர் மட்டுமின்றி, சருமத்துளைகளை இறுக்கும். அத்தகைய தேனுடன் சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்குவதோடு, முகத்தில் உள்ள குழிகளும் மறையும்.



Click it and Unblock the Notifications











