For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் அசிங்கமா இருக்கும் கரும்புள்ளிகளை போக்க இதை விட சிறந்த தீர்வு கிடையாது!

கரும்புள்ளிகளை போக்க சில எளிய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன

By Lakshmi
|

அனைவருக்கும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். ஆனால் முகத்தில் இருக்கும் இந்த கரும்புள்ளிகள் அதற்கு தடைபோடும். நீங்கள் என்ன தான் அழகாகவும், கலராகவும் இருந்தாலும் கூட, உங்களது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளால் உங்களது அழகு குறைந்து தான் காணப்படும். இந்த முகப்பருக்கள் முகத்தை விட்டு சீக்கிரமாக சென்று விட்டாலும் கூட, முகத்தில் உள்ள இந்த கரும்புள்ளிகள் முகத்தை விட்டு செல்ல மிக நீண்ட நாட்கள் ஆகும். அதற்காக நீங்கள் உங்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. இந்த சில எளிய முறைகளின் மூலமாக உங்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிதாக போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. உருளைக்கிழங்கு

1. உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை நறுக்கி, அதனை முகத்தில், 15 நிமிடம் தேய்த்த பின், காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.

2. வெந்தயக் கீரை

2. வெந்தயக் கீரை

வெந்தயக் கீரையை, நன்கு அரைத்து, பேஸ்ட் செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும், கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

3. கொத்தமல்லி

3. கொத்தமல்லி

கொத்தமல்லியுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, காயவைத்து கழுவி வந்தால், கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

4. எலுமிச்சை சாறு

4. எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும், இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

5. ஓட்ஸ்

5. ஓட்ஸ்

ஓட்ஸை பவுடர் செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.

6. தக்காளி

6. தக்காளி

தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.

7. பேக்கிங் சோடா

7. பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 30நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.

8. கோதுமை மாவு

8. கோதுமை மாவு

முகத்தில் இருக்கும் அசிங்கமான கரும்புள்ளிகள் நீங்க, கோதுமை மாவுடன் பால் சேர்த்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர கரும்புள்ளிகள் விரைவில் மறைவது கண்கூடாக தெரியும்.

9. கடலை எண்ணெய்

9. கடலை எண்ணெய்

கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் சம அளவு கலந்து, அதை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால், கரும்புள்ளிகள் மறைந்து போகும்.

10. வாழைப்பழம்

10. வாழைப்பழம்

வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

11. பாதாம்

11. பாதாம்

பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

12. தேன்

12. தேன்

தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.

13. இலவங்கப்பட்டை

13. இலவங்கப்பட்டை

தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

14. முருங்கை இலைச்சாறு

14. முருங்கை இலைச்சாறு

முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

15. முல்தானி மட்டி

15. முல்தானி மட்டி

முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

16. ரோஜா இதழ்

16. ரோஜா இதழ்

ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

17. கிளிசரின்

17. கிளிசரின்

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

18. வெள்ளரிச்சாறு

18. வெள்ளரிச்சாறு

வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

19. முட்டை

19. முட்டை

முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

20. முட்டைக்கோஸ்

20. முட்டைக்கோஸ்

முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Easy Home Remedies for Blackheads

Easy Home Remedies for Blackheads
Story first published: Friday, November 3, 2017, 11:33 [IST]
Desktop Bottom Promotion