For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகுக்காக இத எல்லாம் உங்க முகத்திற்கு யூஸ் செஞ்சா அவ்வளவு தான்!

அழகுக்காக இத எல்லாம் உங்க முகத்திற்கு யூஸ் செஞ்சா அவ்வளவு தான்!

By Lakshmi
|

அழகாக தோன்ற வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே இருப்பது இயல்பான ஒன்று தான்... ஆனால் நீங்கள் முகத்திற்கு அழகு சேர்க்க போகிறேன் என்ற பெயரில் செய்யும் சின்னச்சின்ன தவறுகள் உங்களது அழகை சீரழித்துவிடும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் அழகு சம்பந்தப்பட்ட சில தவறுகளை எல்லாம் செய்யும் போது, உங்களுக்கு நிச்சயமாக இது தவறு தான் என்று தெரியாது... ஆனால் பின்னாளில் உங்களுக்கு ஏதேனும் எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.. நீங்கள் அப்பொழுது பேசாமல் இப்படியே விட்டு இருக்கலாமே என்று நினைத்து வருந்துவீர்கள். இந்த பகுதியில் அழகை எப்படி சரியான முறையில் மேம்படுத்துவது என்பது பற்றியும், நீங்கள் செய்யும் தவறுகள் பற்றியும் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூடானநீர்

சூடானநீர்

சிலர் சூடான நீரில் தலைக்கு குளிப்பதை வளக்கமாக கொண்டு இருப்பார்கள். ஆனால் சூடான தண்ணீரில் தலைக்கு குளிக்கும் போது முடி உதிர்வு உண்டாகிறது. எனவே நீங்கள் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை வளக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

முகத்திற்கு மட்டும் தானா?

முகத்திற்கு மட்டும் தானா?

பேஸ் பேக் மற்றும் க்ரீம்கள் என அனைத்தையும் முகத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் பழக்கம் சிலருக்கு உள்ளது. ஆனால் இது தவறான ஒன்றாகும். முகத்திற்கு மட்டும் பேஸ் பேக் போன்றவற்றை பயன்படுத்தினால், நாளடைவில் முகம் ஒரு நிறத்திலும், கழுத்து ஒரு நிறந்திலும் மாறி பார்க்கவே அசிங்கமாக இருக்கும்.

ரொம்ப நேரம் வேண்டாம்

ரொம்ப நேரம் வேண்டாம்

பேஸ் பேக் போடும் போது, அதை ரொம்ப நேரம் காய வைத்து நன்றாக காய்ந்ததும் கழுவினால் கூடுதல் அழகு பெறலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்று... முகத்தில் சிறிதளவு ஈரப்பதம் இருக்கும் போதே முகத்தை ஸ்கிரப் செய்வது போல செய்து அந்த மாஸ்க்கை கழுவி விட வேண்டும்.

தேவையில்லாத பொருட்களுடன் சேர்ப்பது

தேவையில்லாத பொருட்களுடன் சேர்ப்பது

மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், சரியான பொருட்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுவும் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் தான் மஞ்சளுடன் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால், முழு பலனையும் பெறலாம்.

நீண்ட நேரம் கூடாது

நீண்ட நேரம் கூடாது

மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது மஞ்சள் நிற கறைகளை சருமத்தில் ஏற்படுத்தும்.

குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர்

மஞ்சள் கொண்டு ஃபேஸ் பேக் போட்ட பின்னர், குளிர்ந்த நீரினால் முகத்தை நன்கு கழுவி, பின் துணியால் தேய்த்து துடைக்காமல் ஒற்றி எடுக்க வேண்டும்.

கழுத்துப் பகுதியை தவிர்ப்பது

கழுத்துப் பகுதியை தவிர்ப்பது

ஃபேஸ் பேக் போடும் போது பலரும் முகத்திற்கு மட்டும் தடவி, கழுத்தை மறந்துவிடுவோம். இதனால் கழுத்துப் பகுதி மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். எனவே எப்போதும் மாஸ்க் போடும் போது, கழுத்துப் பகுதியிலும் மறக்காமல் பயன்படுத்துங்கள். இதனால் முகம் மற்றும் கழுத்து ஒரே நிறத்தில் இருக்கும்.

தண்ணீர் தான் சிறந்தது

தண்ணீர் தான் சிறந்தது

எத்தனைப் பொருட்களைக் கொண்டு மஞ்சளை முகத்திற்கு பயன்படுத்தினாலும் நீரைக் கொண்டு பயன்படுத்துவதற்கு ஈடாகாது. ஏனெனில் நீரைக் கொண்டு பயன்படுத்தும் போது தான், உண்மையிலேயே மஞ்சளின் முழு நன்மையையும் பெற முடியும்.

சோப்பைப் பயன்படுத்தக்கூடாது

சோப்பைப் பயன்படுத்தக்கூடாது

முதலில் முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்திய பின், சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சோப்பானது கஷ்டப்பட்டு முகத்தில் போட்ட ஃபேஸ் பேக்கினால் கிடைக்கும் நன்மைகளைக் கெடுத்துவிடும். எனவே முதலில் அதைத் தவிர்க்க வேண்டும்.

ஈரத்தலையில் வேண்டாம்

ஈரத்தலையில் வேண்டாம்

எப்போதும் குளித்து முடித்த உடன் ஈரத்தலையில் சீப்பை வைத்து சீவ கூடாது. இவ்வாறு செய்தால், உங்களது முடி சீக்கிரம் கொட்டிவிடும். தலையை நன்றாக உலர்த்திய பிறகு தான் சீப்பை உபயோகிக்க வேண்டும்.

ஷாம்பிற்கு பின்...

ஷாம்பிற்கு பின்...

பலருக்கு ஷாப்பு போட்டதற்கு பிறகு கண்டிஸ்னர் போடும் பழக்கமே இருக்காது... கண்டிஸ்னர் போடவில்லை என்றால் உங்களது முடி வறட்சியடைந்து விடும். எனவே கண்டிப்பாக ஷாப்புவிற்கு பிறகு கண்டிஸ்னர் போட வேண்டும்.

அடிக்கடி சோப்

அடிக்கடி சோப்

சோப் பயன்படுத்துவதே தவறான ஒரு செயல் தான்.. ஆனால் ஒரே நாளில் பல முறை சோப் பயன்படுத்தி முகம் கழுவும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இவ்வாறு செய்வதால் அவர்களது முகம் நாளடைவில் முதுமை தோற்றத்தை வெளிப்படுத்த துவங்கிவிடும்.

ஸ்கிரப்

ஸ்கிரப்

சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் அரனைத்தும் வெளியேறி, சருமத்தின் நிறம் மேம்பட்டு காணப்படும். மேலும் ஸ்கரப் செய்வதற்கு சிறந்த நேரம் இரவு தான். இரவு நேரத்தில் சரும செல்கள் புதுப்பிக்கப்படுவதால், இரவில் ஸ்கரப் செய்வது நல்லது. சில ஆண்கள் தினமும் ஸ்கரப் பயன்படுத்துவார்கள். இப்படி தினமும் பயன்படுத்தினால் சருமத்துளைகள் தான் பாதிக்கப்படும். ஆகவே வாரத்திற்கு 2 முறை ஸ்கரப் செய்வது நல்லது.

முகம் கழுவாமல் இருப்பது

முகம் கழுவாமல் இருப்பது

என்ன தான் மாலை வேளையில் முகத்தை கழுவினாலும் கூட இரவு உறங்க செல்லும் முன்னர் முகத்தை ஒரு முறை கழுவி விட்டு உறங்க செல்ல வேண்டியது அவசியமாகும். ஆனால் பலர் இதனை செய்வதே இல்லை.. இதனை டிரை செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

டிஸ்யூ பேப்பர்

டிஸ்யூ பேப்பர்

ஈரப்பதமிக்க டிஸ்யூ பேப்பர்களில் கலந்துள்ள வாசனையூட்டும் கெமிக்கல்களை அளவுக்கு அதிகமாக முகத்தில் பயன்படுத்தினால், அதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் நீக்கப்பட்டு, முகத்தில் வறட்சி ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து அரிப்புக்கள் ஏற்படும். எனவே முகத்தை சுத்தம் செய்கிறேன் என்று ஈரப்பதமிக்க டிஸ்யூ பேப்பர்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தாதீர்கள்.

சுடு தண்ணீர்

சுடு தண்ணீர்

குளிர்காலத்தில் சுடுநீரைத் தான் பெரும்பாலானோர் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி சுடுநீரை முகத்திற்கு அதிகம் பயன்படுத்தினால், அதனால் சருமத்தில் வறட்சி அதிகரித்து, அதன் மூலம் சருமத்தில் சுருக்கங்களும் அதிகமாகும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் அல்லது குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம்.

பிளிச்சிங்

பிளிச்சிங்

முகத்திற்கு பார்லர்களுக்கு சென்று பிளிச்சிங் செய்தால் உங்களது முகம் நன்றாக தான் இருக்கும். ஆனால் பிளிச்சிங் செய்வது முகத்திற்கு நல்லது அல்ல.. பல பார்லர்களில் பிளிசிங்க் செய்வது பரிந்துரைக்கப்படுவதே இல்லை.. எப்போதாவது பிளிச்சிங் செய்தாலே போதுமானது..

மேக்கப் ரீமுவ்

மேக்கப் ரீமுவ்

மேக்கப் போட்டால் அதனை முறையாக ரிமூவ் செய்ய வேண்டியதும் அவசியமாகும். கடலை மாவு போட்டு மேக்கப்பை ரிமூவ் செய்ய வேண்டியது அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

do not do these mistakes to your skin

do not do these mistakes to your skin
Story first published: Wednesday, November 29, 2017, 17:15 [IST]
Desktop Bottom Promotion