Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
காலையில் இந்த கலர் உணவு சாப்பிட்டா என்றும் இளமையா நீங்க ஜொலிக்கலாம்!!
இளமையாக இருக்கவும், அழகாய் மாறவும் மூன்று வேளைகளிலும் எந்த நிற உணவு நீங்கள் உண்ண வேண்டும் என்று இங்கே தரப்பட்டுள்ளது.
நம் பழைய காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்தில் சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. வளர்சிதை மாற்றம் வேகமாக நடக்க உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட நிறம் கொண்ட உணவுகள் மூன்று வேளையும் எந்த மாதிரி விளைவுகள் ஏற்படுத்துகின்றன என ஆராய்ந்து அமெரிக்காவில் 1992 ஆம் ஆண்டு முதல் சத்துணவு நிபுணர் டாக்டர் கேப்ரியல் கஸின்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது வானவில் உணவு திட்டம். எல்லாவிதமான நிறங்களிலும் உள்ள பழங்களும் காய்கறிகளும் உண்டு.
எந்த வேளை எந்த நிற உணவுகள் சாப்பிட்டால் நீங்கள் இளமையாக இருக்கலாம் என ஆராய்ந்து இக்கட்டுரையை அந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. மேலும் படியுங்கள்.

காலை உணவு சிவப்பு
காலையில் ஒரு கப் ஆரஞ்சு அல்லது தக்காளிச்சாறு. இத்துடன் மூன்று ரொட்டித் துண்டுகள் ஒரு கப் தயிர். (அல்லது) வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், பீச், பிளம்ஸ், அன்னாசித் துண்டுகள் இவற்றில் ஏதேனும் ஒன்று, ஒன்றிரண்டு பழங்கள் சாப்பிடலாம். அன்னாசிப் பழம் என்றால் ஒரு கிளாஸ் சாறு, இத்துடன் வறுத்த ரொட்டித் துண்டு ஒன்று.

மதிய உணவு பச்சை
மதியம பச்சை உணவு! பச்சை நிறமுள்ள கீரைகள், காய்கறிகள், பச்சை நிறத் திராட்சை முதலியவைகளில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற மினரல்கள் உள்ளன. இதயத்தையும் எலும்புகளையும் இந்த தாது உப்புக்கள் பலப்படுத்துகின்றன. இதயம் சிறப்பாக இயங்கவும் தூண்டிக் கொண்டே இருக்கின்றன.

இரவு நீல உணவு
நீலம் மற்றும் கருசிவப்பு ஆகிய நிறங்களில் உள்ள பழங்கள் காய்கறிகளில் உள்ள தாவரச் சத்துக்கள் உணர்ச்சிகளை மெல்ல அமைதிப்படுத்தி தூங்க வைக்கும்.
ஒரு கிண்ணம் சாதம், ஒரு கிண்ணம் தயிர், பீட்ரூட், கத்தரிக்காய் லேசாக அவிய வைத்து ஒரு கிண்ணம் என எளிமையாகவும் சாப்பிடலாம்.

பெண்களுக்கு :
பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, இந்த ஏழு உணவுகளும் பெண்களின் மிகச்சிறந்த சூப்பர் இளமை காக்கும் உணவுகள்.
இவற்றில் செலியினய்ம் அதிகம் இருப்பதால் இளமையாகவும், புற்று நோய்கள் வருவதை தடுக்கவும் செய்கிறது.
செலினியம், பொடுகு வராமல் தடுக்கிறது.
அப்படி பொடுகு இருந்தால் மேற்கண்ட ஏழு உணவுகளும் குணப்படுத்தி விடுகின்றன

என்றும் இளமை :
மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் 5 பவுண்டு வீதம் குறைந்து அழகாக மாறிவிடுவீர்கள்.
முதல் ஒரு மாதத்திலேயே இளமையான தோற்றம் கிடைக்கும். அதிகம் உண்ண விரும்புவது, மருந்து மாத்திரைகள் குறிப்பிட்ட நோய்களுக்காக சாப்பிடுவதும் குறைந்தும் போய் விடும். இதனால் சுறுசுறுப்பையும் சக்தியுள்ளதையும் உணர்ந்து உற்சாகமாக வாழ்வீர்கள்.



Click it and Unblock the Notifications