For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க யூஸ் அழகு சாதனங்களில் எத்தனை வகையான ரசாயனங்கள் இருக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா?

அழகு சாதனப்பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளும் அதில் கலந்துள்ள ரசாயனங்களைப் பற்றியும் தொகுக்கப்பட்ட கட்டுரை இது.

|

பெண்கள் போட்டுக்கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கு மிகவும் பாதிப்புகளை அள்ளி தருகின்றதாக ஒரு ஆராய்ச்சி சொல்கிறது.

கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு தொடங்கி பாலீஸ் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் நம் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷாம்பு, ஸ்ப்ரே

ஷாம்பு, ஸ்ப்ரே

இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஷாம்பில் நுரை அதிகம் வரவேண்டும் என்பதற்காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றனவாம். அதில் சோடியம் சல்பேட் டெட்ராசோடியம் பாரோபிளின் கிளை சால் போன்றவை ஆபத்தானவை என்கினறனர் மருத்துவர்கள். இதனால் கண் எரிச்சல், மற்றும் பார்வை பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

தலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயணங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயணங்கள் மிகவும் ஆபத்தானவை. அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடுமாம். மேலும் இந்த ரசாயனங்களின் நமது உடல் செல்களின் வடிவமைப்பு கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம்.

கண் அழகு சாதனங்கள்

கண் அழகு சாதனங்கள்

கண்களுக்கு எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஏனெனில் ஐஷேடோவில் 26 விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம்.

அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாம். இது புற்று நோய், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்துகின்றனவாம்.

கன்னக் கதுப்பு

கன்னக் கதுப்பு

கன்னத்தில் அழகை அதிகரிக்க உபயோகிக்கும் ரூஜ் 16 வகை ரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் எதில் பாரபின், மெதில் பாரபின், உள்ளிட்ட ரசாயனங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துமாம். கன்னம் சிவந்து போதல், கன்னத்தில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.

முக அழகுப் பொருட்கள்

முக அழகுப் பொருட்கள்

முக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில்மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது. இதனால் அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள் ஏற்படக்கூடும்.

லிப்ஸ்டிக் :

லிப்ஸ்டிக் :

லிப்ஸ்டிக்கில் பாலிமென்தால், மெத்தா க்ரைலேட் உள்ளிட்ட 33 ரசாயனங்கள் உள்ளன. இவற்றில் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் காணப்படுகின்றனவாம்.

வாசனை திரவியங்கள்

வாசனை திரவியங்கள்

கோடை காலம் வந்தாலே வாசனை திரவியங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கிவிடும். இதில் 15 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்களை ஏற்படும்.

உடலுக்கு போடும் பாடி லோசன்களில் 32 வகையாக ரசாயனங்கள் உள்ளன. இதன் மூலம் தோல் தடிப்பு, தோல் நிறமாற்றம், எரிச்சல், ஹார்மோன் கோளறு போன்றவை ஏற்படும்.

நகப்பூச்சுகள்

நகப்பூச்சுகள்

நக அழகுக்காக பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களில் 31 ரசாயனங்கள் காணப்படுகின்றன. இவை குழந்தையின்மை, குழந்தையை உருவாக்குவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இவற்றை படித்த பின்னரும் அழகு சாதனங்கள் உபயோகிக்கவேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் ரசாயன கலப்பில்லாத மூலிகை அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Did you know that huge number of harmful chemicals are present in cosmetic products

Did you know that huge number of harmful chemicals are present in cosmetic products
Story first published: Wednesday, April 12, 2017, 17:20 [IST]
Desktop Bottom Promotion