For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாக்லேட் பயன்படுத்தினால் இதெல்லாம் ப்ளஸ்!!!!

சுவையூட்டும் விஷயம் மட்டுமல்ல நம் சருமத்திற்கும் எக்கச்சக்க பலன்களை அளிக்க கூடியது சாக்லெட்

|

பலருக்கும் பிடித்தமான ஒரு பொருள் என்றால் சாக்லெட். கசப்பு கலந்த இனிப்பு சுவை உங்களுக்கு புத்துணர்ச்சியை வழங்கிடும், வாழ்வின் சந்தோசமான தருணங்களை கொண்டாட சாக்லெட்டை பயன்படுத்துகிறோம்.

இதனை சாப்பிடுவதால் உங்களின் ஹார்மோன்கள் தூண்டப்பெற்று உங்களின் மனநிலையை சந்தோசமாக வைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல சாக்லேட் உங்கள் சருமத்திற்கும் மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈரப்பதம் :

ஈரப்பதம் :

சருமத்திற்கு ஈரப்பதம் என்பது மிகவும் அவசியம். சக்லேட்டில் இருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடென்ட் மற்றும் விட்டமின்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவிடும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் சாக்லேட் மாஸ்க் பயன்படுத்தினால் நல்ல பலனை கொடுத்திடும்.

நோய்த்தொற்று :

நோய்த்தொற்று :

சருமத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களை பாதுகாக்க டார்க் சாக்லேட் ஃபேஸ் மாஸ்க்காக பயன்படுத்திடுங்கள்.

மாசு அதிகமுள்ள இடங்களில் பணியாற்றுபவராக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை டார்க் சாக்லேட் மாஸ்க் போடலாம்.

ஊட்டச்சத்து :

ஊட்டச்சத்து :

சாக்லேட்டில் விட்டமின்ஸ், மினரல்ஸ் ஆகியவை நிறைந்திருக்கிறது. இவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கிடும்.

சத்து குறைப்பாட்டினால் சருமத்தில் தோன்றும் தேமல்,அலர்ஜி போன்றவற்றை தவிர்க்கலாம்.

நிறம் :

நிறம் :

சருமத்திற்கு தொடர்ந்து சாக்லேட் பயன்படுத்தினால் அதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சருமத்தின் செல்களை புத்தாக்கம் செய்திடும். அதோடு பிக்மண்ட் உற்பத்தியையும் குறைத்திடும். இதனால் சருமத்தின் நிறம் மேம்படும்.

மாய்ஸ்சரைசர் :

மாய்ஸ்சரைசர் :

சருமத்தில் தோன்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மூலக்காரணமே சருமம் வறண்டு இருப்பது தான். சருமம் வறண்டிருந்தால் உங்களுக்கு வயதான தோற்றத்தையும் கொடுத்திடும்.

இதனை தவிர்க்க டார்க் சாக்லேட்டுடன் சிறிதளவு பால் கலந்து பேஸ் மாஸ்க்காக போட்டுப்பாருங்கள். வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் கூட போதும்.

சுருக்கங்கள் :

சுருக்கங்கள் :

வயதாகிவிட்டது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவது உங்கள் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் தான். வயதாவதை நம்மால் தடுக்க முடியாது என்றாலும் அதனை வெளிப்படுத்துவதை கொஞ்சம் தவிர்க்கலாம்.

சாக்லேட் ஃபேஸ் மாஸ் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது அதே போல சருமத்தை வறண்டு விடாமலும் பாதுகாக்கிறது. இதனால் சருமம் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

 ப்ளேக்ஹெட்ஸ் :

ப்ளேக்ஹெட்ஸ் :

முகத்தில் கரும்புள்ளிக்கள் இருப்பவர்களுக்கு சாக்லெட் மிகவும் பயனிளிக்க கூடியது. சாக்லெட்டில் இருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நம் சருமத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை நீக்கச் செய்திடும்.

டெட் செல் :

டெட் செல் :

சருமம் பொலிவுடன் இருக்க வேண்டுமென்றால் சருமத்தில் உருவாகும் டெட் செல்களை உடனே உடனே அப்புறப்படுத்த வேண்டும். சாக்லெட்டை கொண்டு முகத்தை ஸ்க்ரப் செய்து பத்து நிமிடம் கழித்து கழுவிடுங்கள். இப்படிச் செய்வதால் முகத்தில் தோன்றும் டெட் செல்கள் நீங்கிடும்.

சூரிய ஒளி :

சூரிய ஒளி :

சாக்லேட்டில் இருக்கும் ஃப்லேவனாய்ட் என்னும் சத்து சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களிலிருந்து நம்மை பாதுகாத்திடும்.

சூரிய ஒளி தொடர்ந்து நம் சருமத்தில் விழுவதால் பல்வேறு தோல் நோய்கள் நமக்கு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க சாக்லேட் மாஸ்க் பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty facts about chocolate

Beauty facts about chocolate
Story first published: Friday, September 8, 2017, 13:15 [IST]
Desktop Bottom Promotion