For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகப்பருக்களை தடுக்க எப்படி யூக்கலிப்டஸ் பயன்படுத்தலாம்? அருமையான ப்யூட்டி ரெசிபி!!

யூக்கலிப்டஸ் எண்ணெய் உங்கள் அழகை இரட்டிப்பாக்கும்!! அதனை பயன்படுத்தி எவ்வாறு உங்கள் அழகிய மேம்படுத்தலாம் என இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது

By Bala Latha
|

நறுமண எண்ணெய்கள் இப்போதைய அவசியத் தேவையாகும். அது அழகுத்துறையாக இருக்கட்டும் அல்லது ஆரோக்கியமாக இருக்கட்டும், எல்லா இடங்களிலும் அவை பயன்படுத்தப்படுகின்றன. நறுமண எண்ணெய்கள் பல்வேறு நன்மைகளின் தொகுப்பைக் கொண்டிருக்கின்றன. சில நறுமண எண்ணெய்கள் சேதமடைந்த கூந்தலை சீராக்கி அடர்த்தியாகவும் வலிமையாகவும் ஆக்குகின்றன.

நறுமண எண்ணெய்கள் நறுமண சிகிச்சைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவை இயற்கையான ஷவர் ஜெல்கள் மற்றும் சுத்தப்படுத்தும் சோப்புகளில் முக்கியமான மூலக்கூறாகப் பயன்படுத்தபடுகின்றன.

ஒவ்வொரு நறுமண எண்ணையிலும் ஒரு தனித்துவமான வாசம் உண்டு. இது நம் மனதுக்கும் உடலுக்கும் ஆறுதலளிக்கிறது.

சில நறுமண எண்ணெய்களில் மருத்துவ நற்பலன்களும் உண்டு. உதாரமான, யுக்கலிப்டஸ் எண்ணெய். அதன் பல்வேறு மருத்துவ குணங்களுக்காக பிரசித்தி பெற்றது. இது நோய்க்கிருமி எதிர்ப்பு தன்மையுடையது மேலும் வீக்கத்திற்கு எதிரானது. மேலும் இது கொசு மற்றும் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.

Beauty Benefits Of Eucalyptus Oil

இது மிகப் பொதுவாக மூக்கடைப்பு மற்றும் சைனஸ் அடைப்புகளிலிருந்து நிவாரணமளிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு பல அழகு நற்பயன்களும் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா?

யூக்கலிப்டஸ் எண்ணெய் அதன் தாவர இலைகளை காய்ச்சி வடித்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது இனிய கற்பூர வாசனை கொண்டதாகும்.

இங்கே யூக்கலிப்டஸ் எண்ணெயின் அழகுப் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளது:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தூய்மையாக்கும் காரணி

தூய்மையாக்கும் காரணி

யூக்கலிப்டஸ் எண்ணெய் ஒரு சிறந்த சரும சுத்திகரிப்பானாகும். இது உங்கள் சருமத்தை ஆழ்ந்து சுத்தப்படுத்தி அழுக்கையும் தூசுகளையும் நீக்கி இறந்த செல்களை நீக்கி சருமத்தை புதுப்பிக்கிறது. இந்த நோக்கத்திற்காக ஒரு அற்புதமான யூக்கலிப்டஸ் ஸ்க்ரப் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

யூக்கலிப்டஸ் ஸ்க்ரப்

- 1 டீஸ்பூன் யூக்கலிப்டஸ் எண்ணெய்

- 1 டீஸ்பூன் எப்சம் உப்பு

 செய்முறை

செய்முறை

இந்த இரண்டு பொருட்களை கலந்து முகத்தை தேய்க்க ஸ்க்ரப்பாக பயன்படுத்தவும். உங்களுக்கு நுட்பமான சருமம் இருந்தால் யூக்கலிப்டஸ் எண்ணையை ஒரு டீஸ்பூனாகக் குறைத்துக் கொள்ளவும்

முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

யூக்கலிப்டஸ் எண்ணெயிலுள்ள பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மூலக்கூறுகள் அதை அற்புதமான பருக்களுக்கு எதிரான நிவாரணமாக செயல்படுத்துகிறது. இது பருக்களுக்குக் காரணமான பாக்டீரியாக்களைக் கொன்று மேற்கொண்டு அதன் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும் இது இதர வகை சருமத் தொற்றுக்களையும் தடுக்கிறது.

இந்த யூக்கலிப்டஸ் எண்ணெய் மற்றும் வேப்பிலை முகப் பூச்சை உங்கள் சருமப் பிளவுகளைத் தடுக்கப் பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 கைப்பிடி காய்ந்த வேப்பிலை

- 1 டீஸ்பூன் யூக்கலிப்டஸ் எண்ணெய்

செய்முறை:

செய்முறை:

1) காய்ந்த வேப்பிலைகளை மிக்ஸியில் அரைத்து நுணுக்கமாப் பொடித்துக் கொள்ளவும்.

2) இந்த பொடியுடன் யூக்கலிப்டஸ் எண்ணையைக் கலந்து பேஸ்ட் தயாரிக்கவும்.

3) தேவைப்பட்டால் சிறிது தண்ணீரை கலந்து இந்த பேக்கை முகத்தில் பிளவுகளின் மீது தடவவும்.

4) 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இதை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வரவும்.

 ஈரப்பதமிக்கது :

ஈரப்பதமிக்கது :

யூக்கலிப்டஸ் ஒரு சிறந்த மாய்ட்சுரைசரும் கூட. இதை சருமத்தின் மீது ஒரு இயற்கையான மற்றும் பாதுகாப்பான பாடி லோஷனாகப் பயன்படுத்தலாம்.

இது உங்கள் மீது அற்புதமான நறுமணத்தை பரவச் செய்யும். இது உங்கள் சருமத்தை மோசமான தட்பவெப்ப நிலைகளிலிருந்தும் மற்றும் நோய்த் தொற்றுக்களிலிருந்தும் பாதுகாக்கிறது. அவகோடோவுடன் யூக்கலிப்டஸ் எண்ணையைக் கலந்தால் அது உலர்ந்த சருமத்திற்கான சிறந்த பேஸ் பேக்காக செயல்படுகிறது.

தேவையான பொருட்கள்:

1 டீஸ்பூன் அவகோடோ பழக்கூழ் 1 டீஸ்பூன் யூக்கலிப்டஸ் எண்ணெய்.

 செய்முறை:

செய்முறை:

1) இரண்டு பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் கலந்துக் கொள்ளுங்கள்.

2) உலர்ந்த சருமத்தின் மீது அதைத் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு அதைக் கழுவவும்.

3) இது சருமத்தின் மீது குளிர்ச்சியூட்டுகிறது.

புத்துணவு தரும் ஸ்ப்ரே :

புத்துணவு தரும் ஸ்ப்ரே :

யூக்கலிப்டஸ் எண்ணெய் சருமத்தை உடனடியாகக் குளிர்விக்கிறது மேலும் வேனிற்கட்டிகளின் பாதிப்பை உடனடியாகக் குறைக்கிறது. இது கோடைக்கால வெப்பம் மிகுந்த நாட்களில் உங்கள் முகத்துக்கு குளிர்ச்சியூட்டும் ஸ்ப்ரேயாகப் பயன்படுகிறது. மேலும் இது ஒப்பனைக்கு முன் அதை நிலைத்திருக்கச் செய்யும் ஸ்ப்ரேயாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த எளிய யூக்கலிப்டஸ் ஸ்ப்ரே வை கோடைக்காலங்களில் கையடக்க ஸ்பிரேவாக வைத்துக் கொள்ளுங்கள்.

தேவையானப் பொருட்கள்:

1 டீஸ்பூன் யூக்கலிப்டஸ் எண்ணெய்

சாதாரணத் தண்ணீர் நிரப்பிய காலியான ஸ்பிரே பாட்டில்

 செய்முறை:

செய்முறை:

1) நீர் நிரம்பிய ஸ்பிரே பாட்டிலில் யூக்கலிப்டஸ் எண்ணையை நிரப்புங்கள்.

2) கோடைக்கால நாட்களில் நீங்கள் வெளியில் செல்லும் போது இதை உடனெடுத்துச் செல்லுங்கள். இது உங்கள் சருமத்தை குளிர்விப்பதோடு முகம் சிவந்து போதலை குறைக்கிறது.

3) யூக்கலிப்டஸ் எண்ணெய் மிக தீவிரமான மூலக்கூறுகள் அடங்கியது என்பதால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதிகமாக நுகர்ந்தால் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தி குமட்டலையும் உடல் நலிவையும் ஒருவருக்கு ஏற்படுத்தும்.

4) சிறந்த நம்பகமான ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட யூக்கலிப்டஸ் எண்ணையை பயன்படுத்துகிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் கலப்படங்கள் கொண்ட எண்ணெய் அவ்வளவு திறன் வாய்ந்ததாக இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty Benefits Of Eucalyptus Oil

Beauty Benefits Of Eucalyptus Oil
Story first published: Sunday, November 5, 2017, 9:30 [IST]
Desktop Bottom Promotion