For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொலிவான சருமத்திற்கு பால் மட்டும் பயன்படுத்தினாலே போதும்!

நம் வீடுகளில் அன்றாடம் பால் குடித்திருப்போம். பாலில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறன.அதனை பயன்படுத்துவதால் சருமத்திற்கு ஏற்படும் நன்மைகள்

|

நாம் அன்றாடம் சாப்பிடும் பொருட்களில் ஒன்று பால். பால் குடித்தால் அதிலிருந்து ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும். அதிலிருக்கும் விட்டமின்ஸ்களால் எலும்புகள் வலுவடைகின்றன.

அதோடு பசும்பால் ஃபோலிக் அமிலம் தயமின், பொட்டாசியம் , கால்சியம்,லாக்டோஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதிலிருக்கும் லாக்டிக் அமிலம் உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்துக்களை உறிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. அதோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளிலிருந்தும் நம்மை காக்கிறது.

Amazing Beauty benefits of Milk

இப்படி பால் நம்முடைய உடல் நலனில் மட்டுமல்ல நம்முடைய அழகுக்கும் பயன்படுகிறது. பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அமிலங்கள் சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? பாலுடன் வேறு எந்தப் பொருளையும் கலக்காமல் வெறும் பாலினால் உங்கள் சருமம் மற்றும் தலைமுடிக்கு என்னென்ன நன்மைகள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிற வேறுபாடு :

நிற வேறுபாடு :

வெயிலில் அதிகம் அலைபவர்களுக்கு முகத்திலேயே ஆங்காங்கே நிற வேறுபாடுகள் தோன்றிடும். அதுவும் திட்டு திட்டாக தோன்றி உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்திடும். இதனை போக்க வெறும் பாலை எடுத்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்களில் காய்ந்ததும் கழுவிடலாம். இப்படிச் செய்வதனால் உங்கள் முகம் பளீச்சென்று மாறும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் பால், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் மாஸ்க்காக போடலாம். அது நன்றாக காய்ந்ததும் கழுவிடலாம்.

க்ளன்சர் :

க்ளன்சர் :

பால் சருமத்தில் சிறந்த க்ளன்சராக செயல்படுகிறது. பாலில் தூய காட்டன் துணியை முக்கி அதைக் கொண்டு முகத்தை துடைக்க வேண்டும். இது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை எல்லாம் நீக்கிடும். இதனை தினமும் கூட நீங்கள் செய்திடலாம்.

பப்பாளிப்பழக் கூழுடன் இரண்டு ஸ்பூன் பால் சேர்த்து ஃபேஸ் மாஸ்க்காக போட்டு வர சிறந்த பலன் கிடைத்திடும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி காய்ந்ததும் கழுவிடுங்கள். இது சருமத்தை சுத்தமாக்குவதுடன் பிரஸ்ஸான லுக் கொடுக்கும்.

சரும துவாரங்கள் :

சரும துவாரங்கள் :

முகத்தில் தோன்றிடும் பலப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் சரும துவாரங்களில் உள்ள அழுக்கு சேர்வது தான். அதனை நீக்க பால் மிகவும் உதவியாக இருக்கிறது.

வெறும் பாலை பயன்படுத்தலாம் அப்படியில்லையெனில் பால் பவுடரை நீரில் கலந்து அதனைக் கூட முகத்தில் தடவலாம். இப்படிச் செய்வதால் சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்கும்.

அலர்ஜி :

அலர்ஜி :

சருமத்தில் பலருக்கும் ஒவ்வாமையால் அலர்ஜி ஏற்படும். இதனல சிகப்புத் திட்டுக்கள், கொப்புளங்கள், அரிப்பு போன்றவை ஏற்ப்பட்டிருந்தால் அவற்றை நீக்க சரியான மருந்து பால் தான். தொடர்ந்து பால் பயன்படுத்தினால் மறைந்திடும். அதோடு சருமம் பொலிவுடன் மாறிடும்.

ஸ்க்ரப் :

ஸ்க்ரப் :

முகத்தில் இருக்கும் இறந்த செல்களை உடனே நீக்கிட வேண்டும் இல்லையெனில். அவை சருமத்துவாரங்களை அடைத்துக்கொண்டு சருமத்தில் பருக்கள் தோன்ற காரணமாய் அமைந்திடும். இதற்கு பாலில் சிறிதளவு உப்பு கலந்து முகத்தில் தேய்க்கலாம்.

ஓட்ஸுடன் பால் சேர்த்து முகத்தில் ஸ்க்ரப்பாக தேய்க்கலாம்.இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாம் நீங்கிடும்.

சுருக்கங்கள் :

சுருக்கங்கள் :

சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் தான் பலருக்கும் பயமுறுத்தும் விஷயமாக இருக்கிறது. அதனை வராமல் தடுக்க வேண்டும் என்றால் நீங்கள் தினமும் பால் பயன்படுத்த வேண்டும். அதோடு அரைத்துண்டு வாழைப்பழத்துடன் பால் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அதனை முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்களில் நன்றாக காய்ந்தவுடன் கழுவிடலாம்.

மாய்சரைசர் :

மாய்சரைசர் :

சருமம் வறண்டு விடாமல் தடுக்க மாய்சரைசர் பயன்படுத்துவது வழக்கம். மாய்சரைசரில் கெமிக்கல் கலந்திருப்பார்கள் அதனால் சருமத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்று பயந்தால் நீங்கள் தாரளமாக பால் பயன்படுத்தலாம். இவை உங்கள் சருமத்திற்கு மிகச் சிறந்த மாய்சரைசராக செயல்படும்.

முடி உதிர்வு :

முடி உதிர்வு :

முடிக்கு தேவையான போஷாக்கு மற்றும் ஈரப்பதம் இல்லாததால் தான்,முடி வரண்டு அதிகமாக உதிரத் துவங்கும். அதனை தவிர்க்க பாலை முடியின் வேர்கால்களுக்கு படுமாறு நன்றாக தேய்த்திடுங்கள்.

பின்னர் எல்லா முடிக்கும் பால் படுமாறு தடவிக் கொள்ள வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவிடலாம். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்வதனால் முடி உதிர்வை தவிர்க்க லாம். அதோடு பால் சிறந்த கண்டிஷ்னராக செயல்படுகிறது.

டோனர் :

டோனர் :

சருமத்திற்கான டோனர் உடனடியாக பலன் கொடுக்க வேண்டும் அதோடு டோனர் இல்லையென்றாலும் நீங்கள் பாலை டோனராக பயன்படுத்தலாம். வெறும் பாலை பயன்படுத்தலாம்.

அப்படியில்லையெனில் பாலுடன் க்ரீன் டீ கலந்து முகத்தில் மாஸ்க்காக போட வேண்டும். பத்து நிமிடங்கள் நன்றாக காய்ந்ததும் கழுவி விடுங்கள்.

க்ரீன் டீயில் இருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நம் சருமத்தில் எந்த வித தொற்றும் ஏற்படாமல் பாதுகாத்திடும்.

பாதங்கள் :

பாதங்கள் :

டைட்டான ஷூ அணிவதாலோ அல்லது ஹை ஹீல்ஸ் அணிந்து காலில் வலி,பித்த வெடிப்பு போன்றவை ஏற்ப்பட்டால் அதனை போக்க பாலை பயன்படுத்தலாம்.

முதலில், சூடான நீரில் பாதங்களை கழுவ வேண்டும். பின்னர் ஒரு டப்பில் கால் முங்கும் அளவிற்கு பால் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்திடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து காலை சாதரண நீரில் கழுவிடலாம்.

அதிகமான பித்த வெடிப்புகள் இருந்தால் எலுமிச்சையை கொண்டு பாதத்தை தேய்த்திடுங்கள். இப்படிச்செய்வதால் பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் எல்லாம் நீங்கிடும்.

தழும்புகள் :

தழும்புகள் :

பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் தோன்றினால் முகத்தில் ஏற்படும் தழும்புகளை போக்கவும் பாலை பயன்படுத்தலாம். பாலில் இருக்கும் விட்டமின்ஸ்கள் முகத்தில் தோன்றும் தழும்பினை போக்கும் ஆற்றல் கொண்டது.

பசும்பாலை கொதிக்க வைக்காமல் அப்படியே முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவிடலாம். அப்படியில்லை எனில் உருளைக்கிழங்கு நன்றாக அரைத்து அந்த பேஸ்ட்டுடன் பால் சேர்த்து முகத்தில் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள் இருபது நிமிடங்களில் நன்றாக காய்ந்ததும் கழுவிடலாம்.

 ஹேர் கண்டிஷ்னர் :

ஹேர் கண்டிஷ்னர் :

முடி உதிர்வைத் தடுக்க ஹேர் ஷாம்பு பயன்படுத்திய பிறகு கண்டிஷனர் பயன்படுத்துவது அவசியம். அப்போது தான் முடி சீக்கிரம் வரண்டிடாமல் இருக்கும். அதனால் முடி உதிர்வு தவிர்க்கப்படும்.

கண்டிஷ்னருக்கு பதிலாக நீங்கள் பாலை பயன்படுத்தலாம். முடி அதிக வறட்சியுடன் இருந்தால் பால் இரண்டு டீஸ்ப்பூன், தயிர் ஒரு டீஸ்ப்பூன்,கலந்து தலைமுழுவதும் தேய்த்து ஹேர் கேப் அணிந்து கொள்ளுங்கள். பின்னர் நாற்பது நிமிடங்கள் கழித்து தலைக்குளித்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Beauty benefits of Milk

Amazing Beauty benefits of Milk
Story first published: Saturday, October 21, 2017, 16:13 [IST]
Desktop Bottom Promotion