For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செருப்பின் அச்சு உங்கள் பாதங்களில் தெரிகிறதா? இதை செய்து பாருங்க!!

|

முகம், கைகளுக்கு தரும் முக்கியத்துவம் நாம் பாதங்களுக்கு தருவதில்லை.

மாய்ஸ்ரைஸர் அல்லது ஸன் ஸ்க்ரீன் லோஷன் முகத்திற்கு போடும்போது அப்படியே கைகளுக்கு போடுவோம். ஆனால் பாதங்களை மறந்துவிடுவோம்.

மிகவும் சென்ஸிடிவ் சருமம் இருப்பவர்களுக்கு பாதங்களில் விரைவில் சுருக்கம் உண்டாகிவிடும்.

how to care your feet everyday

அதனை கவனிக்காமல் விடும்போது சுருக்கங்களால் தோல் சுருங்கி, கால்களுக்கு வயதான தோற்றத்தை தந்துவிடும்.

அதோடு பாதத்தில் வெயில் படியும் இடங்களில் கருமை படிந்து , போடும் செருப்பின் வடிவம் அப்படியே பாதத்தில் அச்சுப் பெறும். இதனை போக்க கீழ்கண்ட குறிப்புகளை செய்து பாருங்கள். பலனளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடல் உப்பு :

கடல் உப்பு :

தினமும் குளிப்பதற்கு முன் கடல் உப்பை பாதத்தில் தேய்த்து குளிக்கலாம். இதனால் பாதங்களில் இருக்கும் அழுக்கு இறந்தசெல்கள் மறையும் சுருக்கங்களும் குறையும். வெயிலினால் உண்டாகும் கருமையும் மறையும்.

காஃபி பொடி :

காஃபி பொடி :

சிக்கரி கலக்காத காஃபிப் பொடியை பாதங்களில் தேய்த்து 1 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

சுருக்கம் கருமை மறையும். அழுக்குகளை எளிதில் களையும். பாதம் மிருதுவாக இருக்கும். செய்து பாருங்களேன்.

பட்டைப் பொடி :

பட்டைப் பொடி :

தினமும் தூங்குவத்ற்கு முன் பட்டைப் பொடியை ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து பாதத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவிப் பாருங்கள். வெடிப்பு குறையும். கருமை மறையும்.

 ஓட்ஸ் :

ஓட்ஸ் :

ஓட்ஸை பொடி செய்து அதனுடன் சிறிது பால் கலந்து பாதங்களில் தேய்க்கவும். பாத மூட்டுகளில் உண்டாகும் சொரசொரப்பு, வெயிலினால் உண்டாகும் கருமை, சரும வியாதி ஆகிய பிரச்சனைகள் குணமாகிவிடும்.

உப்பு மற்றும் எலுமிச்சை :

உப்பு மற்றும் எலுமிச்சை :

3 டீஸ் பூன் ஆலிவ் எண்ணெயில் 1 ஸ்பூன் உப்பு மற்றும் அரை மூடி எலுமிச்சை சாறு ஆகிய்வை கலந்து பாதங்களில் தேய்க்கவும்.

15 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 1 முறை இப்படி செய்தால் பாதத்தின் நிறம் ஒரே மாதிரியாக பெறுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to care your feet everyday

Homemade Scrubs to pamper you feet to prevent dryness and wrinkles,
Story first published: Wednesday, October 12, 2016, 10:02 [IST]
Desktop Bottom Promotion