For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கழுத்துப் பகுதியிலுள்ள கருமையை 1 வாரத்தில் போக்கும் பொருள் எது தெரியுமா?

கழுத்து பகுதியில் அதிக வியர்வை சுரப்பதால் எளிதில் கிருமிகள் உருவாகிவிடும். அதோடு சூரிய கதிர்கள், அழுக்கு படிந்து கழுத்தின் அழகை கெடுத்துவிடும். இதற்கு சரியான தீர்வை இங்கு படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

|

முகத்திற்கு அழகுபடுத்தும்போது கழுத்தை பராமரிப்பவர்கள் வெகு குறைவு. எளிதில் சூரிய ஒளி புகுந்துவிடும் பகுதி. இதனால் விரைவில் கருமையும் ஏற்பட்டுவிடும்.

home remedies to get rid of dark skin around neck

கழுத்திலுள்ள கருமை தோற்றத்தை தனிமைப்படுத்தி காட்டும் இதனை போக்க எளியோய பொருட்களை கொண்டு சுலபமாக போக்கிடலாம். எப்படியென பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 வெள்ளரிக்காய் சாறு :

வெள்ளரிக்காய் சாறு :

வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுங்கள். அதனை கழுத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவவும். வெள்ளரிக்காய் கருமையை போக்கி, சருமத்திற்கு நிறமளிக்கும்.

 யோகார்ட் :

யோகார்ட் :

யோகார்டில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும். சருமத்திலுள்ள இறந்த செல்கள், நச்சுக்களை வெளியேற்றும். தினமும் காலை மாலையில் யோகார்டை தடவி காய்ந்த்தும் கழிவினால் ஒரே வாரத்தில் கருமை மறைந்துவிடும்.

பாதாம் :

பாதாம் :

பாதாமை பொடி செய்து அல்லது ஊற வைத்து அரைத்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் சிறிது பால் கலந்து கழுத்தில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து க்ழுவுங்கள். அழகான கழுத்து கிடைக்கும்.

 சமையல் சோடா :

சமையல் சோடா :

சமையல் சோடா சிறந்த அழுக்கு நீக்கி. கழுத்தில் வியர்வை மற்றும் கிருமிகளால் உண்டாகும் தழும்புகளை மறைத்து சருமத்திற்கு நிறமளிக்கும்.

சமையல் சோடாவை நீரில் பேஸ்ட் போலச் செய்து கழுத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால் கருமை நிறம் மறையும்.

கடலை மாவு மற்றும் பால் :

கடலை மாவு மற்றும் பால் :

பால் கால் கப் எடுத்து அதனுடன் 2 ஸ்பூன் கடலை மாவு கலந்து கழித்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். தேவையென்றால் சிறிது மஞ்சள் பொடியும் கலந்தால் கழுத்து மின்னும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

home remedies to get rid of dark skin around neck

Tips to get rid of dark skin around neck using kitchen ingredients.
Story first published: Wednesday, November 2, 2016, 10:36 [IST]
Desktop Bottom Promotion