Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உங்களுக்கு அழகை அள்ளித் தரும் 6 அற்புத எண்ணெய்கள் !!
சருமம் பளபளப்பாகவும், இளமையாகவும் இருக்க நீங்கள் விரும்பாமல் இருக்க மாட்டீர்கள். எண்ணெய் தெரபி செய்வதன் மூலம் எண்ணெய் உங்கள் சரும துளைகளுக்குள் ஊடுருவி, உங்கள் அழகிற்கு மேலும் பொலிவை தரும்.
அதனால்தான் அந்த காலத்தில் எண்ணெய் குளியல் வாரம் ஒருமுறை மேற்கொண்டார்கள். எண்ணெய் உங்களின் ஒவ்வொரு செல்லிற்கும் போஷாக்கு அளித்து, பலம் தரும்பவை.

சருமத்தை இறுகச் செய்து, தளர்வடையாமல் காப்பதில் எண்ணெய்களுக்கு முக்கியபங்கு உண்டு. அதேபோல் போதிய ஈரப்பதம் அளிக்கும். இளமையை நீடிக்கச் செய்யும். அப்படியான எண்ணெய்களின் மகத்துவத்தை காணலாம்.
ரோஜா எண்ணெய் :
ரோஜா எண்ணெய் சருமத்தை சுத்தம் செய்யும். சுருக்கங்கள் மறைந்துவிடும். வாரம் ஒருமுறை ரோஜா எண்ணெயை உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால், ரோஜா நிறம் பெறுவீர்கள்.
பாதாம் எண்ணெய் :
இது மிகச் சிறந்த சரும எண்ணெயாக கூறப்படுகிறது. இது வேகமாக சருமத்திற்குள் உறிஞ்சப்படும். உங்களை இளமையாக காண்பிக்கும். மிருதுவான சருமம், கிடைக்கும்.
ஆப்ரிகாட் எண்ணெய் :
ஆப்ரிகாட் பழத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் இந்த எண்ணெய், அதிகமாக விட்டமின் ஈ கொண்டுள்ளது. சரும பாதிப்புகளை சரி செய்யும். எளிதில் உறியும். தினமும் உடலில் மசாஜ் செய்து குளித்தால் பொலிவான சருமம் பெறுவீர்கள்.
ஆலிவ் எண்ணெய் :
ஆலிவ் எண்ணெய் நிறமளிக்கும். சூரியக் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும். ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால், சுருக்கங்களை விடைப்பெறச் செய்கிறது.
லாவெண்டர் எண்ணெய் :
இது எல்லாவித சருமத்திற்கும் சிறந்தது. பாக்டீரியா எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளது. முகப்பருக்களை மறையச் செய்துவிடும்.
நல்லெண்ணெய் :
நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி தரும். மினுமினுப்பை தரும். சுருக்கங்களை போக்கி, முகத்திற்கு புதிய தேஜஸை தரும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை தேய்த்து குளித்தால், மென்மையான இளமையான தோற்றம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications



