For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் பிம்பிள் வருவதைத் தடுக்க சில சிம்பிளான டிப்ஸ்...

By Maha
|

கோடை வந்தாலே உங்கள் முகத்தில் வலியைத் தரக்கூடிய முகப்பருக்கள் வந்து தொல்லையைத் தருகிறதா? என்ன செய்வதென்றே தெரியவில்லையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

முகப்பருக்கள் அதிகப்படியான எண்ணெய் பசை இருந்தாலோ, உடலில் நீர்ச்சத்து குறைந்து வெப்பநிலை அளவுக்கு அதிகமாக இருந்தாலோ வரும். இதற்கு முதலில் உடலை குளிர்ச்சியுடனும், நீர்ச்சத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, கோடையில் சருமத்திற்கு அதிக கவனிப்புகளை செலுத்த வேண்டும். இங்கு கோடையில் பிம்பிள் வராமல் இருக்க சில சிம்பிளான டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளநீர்

இளநீர்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதுடன், இளநீரைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள பிம்பிள் நீங்குவதோடு, அவை வருவது தடுக்கப்பட்டு, முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர்

கோடையில் ரோஸ் வாட்டரைக் கொண்டு தினமும் முகத்தை பல முறை துடைத்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசைகள் நீங்கி, முகம் கோடையில் பளிச்சென்று இருக்கும்.

வேப்பிலை தண்ணீர்

வேப்பிலை தண்ணீர்

வேப்பிலையை இரவில் படுக்கும் போது ஒரு பௌல் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவி வந்தால், பிம்பிள் நீங்குவதோடு, சரும சுருக்கங்களும் மறையும்.

காப்பர் தண்ணீர்

காப்பர் தண்ணீர்

கோடையில் காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடித்து வந்தால் நல்லது. அதுமட்டுமின்றி, காப்பர் பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டுள்ள நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால், பிம்பிள் மட்டுமின்றி, அதனால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.

தண்ணீர்

தண்ணீர்

தண்ணீர் மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு தண்ணீரை அதிக அளவில் குடிப்பதோடு, அவ்வப்போது குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பிரகாசமாகவும், பிம்பிள் இல்லாமலும் இருக்கும்.

குறிப்பு

குறிப்பு

பிம்பிள் முகத்தில் வந்தால், அதனை நகம் கொண்டு பிய்த்து எடுக்க கூடாது. அப்படி செய்தால், அதிலிருந்து வெளிவரும் சீழ் மற்ற இடங்களில் பட்டு, அதனால் பிம்பிள் இன்னும் அதிகமாகும். ஆகவே பிம்பிள் வந்தால், முகத்தில் கைகளை வைப்பதை தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Remedies To Avoid Pimples In Summer

Avoid pimples naturally in summer with these simple home remedies. Take a look at these natural tips to try out now.
Story first published: Friday, April 17, 2015, 11:07 [IST]
Desktop Bottom Promotion