For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடனடியாக வெள்ளையாக வேண்டுமா? முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் போடுங்க...

By Maha
|

பலருக்கும் வெள்ளை சருமத்தின் மீது மோகம் அதிகம் இருக்கும். அதற்காக வெள்ளையாக ஆசைப்படுவதுண்டு. ஆனால் வெள்ளையாவதற்கு பலரும் அழகு நிலையங்களுக்கு சென்று, ப்ளீச்சிங் செய்து கொள்வார்கள். அப்படி ப்ளீச்சிங் செய்வதால் முகத்தில் சிலருக்கு பருக்கள் மற்றும் இதர பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும்.

இவ்வாறு அழகு நிலையங்கள் சென்று சருமத்தின் நிறத்தை அதிகரிக்காமல், எளிதில் கிடைக்கும் முல்தானி மெட்டி பொடியைக் கொண்டு ஃபேஸ் பேக் செய்து வீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.

இங்கு அப்படி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் சில முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து போட்டு தான் பாருங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முல்தானி மெட்டி, தக்காளி, கடலை மாவு ஃபேஸ் பேக்

முல்தானி மெட்டி, தக்காளி, கடலை மாவு ஃபேஸ் பேக்

நன்கு கனிந்த தக்காளியை அரைத்து, அதில் 2 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை போட்டு, 1 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

முல்தானி மெட்டி, சோள மாவு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு

முல்தானி மெட்டி, சோள மாவு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு

2 டீஸ்பூன் முல்தான் மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 1 முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் போட்டு வந்தால், சருமத்தன் நிறம் அதிகரிப்பதை நன்கு காணலாம்.

முல்தானி மெட்டி, வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ் வாட்டர்

முல்தானி மெட்டி, வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ் வாட்டர்

5-6 துண்டு வெள்ளரிக்காயை சாறு எடுத்து, 2 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் சேர்த்து கலந்து, அதோடு 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

முல்தானி மெட்டி மற்றும் ஆரஞ்சு சாறு மாஸ்க்

முல்தானி மெட்டி மற்றும் ஆரஞ்சு சாறு மாஸ்க்

2 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 4 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் சோர்வான சருமத்தை பொலிவோடு காட்டலாம்.

முல்தானி மெட்டி மற்றும் தேன் மாஸ்க்

முல்தானி மெட்டி மற்றும் தேன் மாஸ்க்

1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் நன்கு உலர வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவவும்.

முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை சாறு பேக்

முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை சாறு பேக்

1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெறும்.

முல்தானி மெட்டி, கற்றாழை மற்றும் பால் பேக்

முல்தானி மெட்டி, கற்றாழை மற்றும் பால் பேக்

1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், பால் போன்ற நிறத்தைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Multani Mitti Face Packs For Intense White Glow

You can make different multani mitti face pack for glowing skin & fairness. Know how to use multani mitti on face for fairness daily.
Story first published: Saturday, May 2, 2015, 16:46 [IST]
Desktop Bottom Promotion